85%க்கு மேல் வரி.. கணக்கில் வராத தங்கம் வைத்திருந்தால் மொத்தமாக போய்டும்.. இந்த ரூல்ஸ் தெரியுமா!

  • சென்னை: வருமான வரித்துறையின் ரேடாரில் சிக்காமல் கணக்கில் வராத ரொக்கம், தங்கத்தை வீட்டில் வைத்திருப்பவர்களுக்கு இந்திய வருமான வரிச் சட்டம் மிகக் கடுமையான விதிகளை விதித்துள்ளது. நீங்கள் உங்கள் வருமான வரி தாக்கலில் காட்டாத அல்லது முறையான ஆதாரம் இல்லாத சொத்துக்களுக்கு அதிகபட்சமாக 78% முதல் 85.8% வரை அபராத வரி விதிக்கப்பட வழிவகை உள்ளது.

    Advertisement

    நமது நாட்டில் எப்போதும் வருமான வரிக்குத் தனிக் கவனம் இருக்கிறது. இதனால் தான் பட்ஜெட்டில் கூட ஒவ்வொரு ஆண்டும் வருமான வரிக்கு எதாவது விலக்கு தரப்பட்டுள்ளதா என்பது தனியாக எப்போதும் கவனிக்கப்படும். இப்போது ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு தரப்பட்டுள்ள நிலையில், பெரிய சிக்கல் எதுவும் இல்லை.

    Advertisement

    வருமான வரி

    ஆனால், அதையும் தாண்டி சிலர் தங்கள் வருமானத்தை மறைக்க முயல்கிறார்கள். அப்படிக் கணக்கில் வராத ரொக்கம், தங்கத்தை வீட்டில் வைத்திருப்பவர்களுக்கு எவ்வளவு வரி போடுவார்கள் தெரியுமா? இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 115BBE (Section 115BBE) என்பது முழுக்க முழுக்கக் கணக்கில் வராத கருப்புப் பணத்தை ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு தண்டனைக்குரிய பிரிவாகும்.

    வருமான வரிச் சட்டத்தின் கீழ் கணக்கில் வராத ரொக்கம் (Section 68), உரிய விளக்கம் இல்லாத முதலீடுகள் (Section 69), கணக்கில் காட்டப்படாத தங்கம்/ நகைகள் (Section 69A) மற்றும் கணக்கில் வராத செலவினங்கள் (Section 69C) ஆகியவை கண்டறியப்பட்டால், அவற்றுக்குக் கீழ்வருமாறு வரி விதிக்கப்படும்.

    Advertisement

    எவ்வளவு வரி

    முதலில் அடிப்படை வரி.. உங்களின் வழக்கமான வருமான வரி ஸ்லாப் எதுவாக இருந்தாலும் கணக்கில் காட்டப்படாத பொருட்களுக்கு 60% வரி விதிக்கப்படும். இந்த 60% வரியின் மீது கூடுதலாக 25% சர்சார்ஜ்.. அதாவது ஒட்டுமொத்தத் தொகையில் 15% தனியாக வரி விதிக்கப்படும். இது வரி மற்றும் சர்சார்ஜ் தொகையின் மீது செஸ் வரி தனியாக விதிக்கப்படும். இதை எல்லாம் சேர்த்தால் 78% வரியை நாம் தனியாகச் செலுத்த வேண்டும்.

    கிட்டத்தட்ட முழு பணமும் போய்விடும்

    ஒருவேளை நீங்கள் கணக்கில் காட்டாத இந்தச் சொத்துக்களை உங்களின் ஐடிஆர் ரிட்டர்னில் காட்டாமல், வருமான வரி அதிகாரிகளின் சோதனையின் போது அவை கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான வருமான ஆதாரத்தை உங்களால் நிரூபிக்க முடியாமல் போனால், பிரிவு 271AAC-ன் கீழ் இந்த 78% வரியின் மீது கூடுதலாக 10% அபராதம் விதிக்கப்படும். அப்போது நீங்கள் கட்ட வேண்டிய ஒட்டுமொத்த வரிப் பாரம் 85.8%ஆக எகிறிவிடும்.. அதாவது, ₹1 கோடி பிடிபட்டால், ₹85.8 லட்சம் அரசுக்கே போய்விடும்.

    Advertisement

    மத்திய பட்ஜெட் 2026-ல் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தங்களின்படி, வரி செலுத்துவோருக்கு ஒரு சிறிய நிம்மதி அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையிடமிருந்து மறுமதிப்பீட்டு நோட்டீஸ் வந்த பிறகும், வாடிக்கையாளர்கள் தங்களின் புதுப்பிக்கப்பட்ட வருமான வரித் தாக்கலை (Updated ITR) சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    ஒரே ஆறுதல்

    இந்த அப்டேட்டட் ஐடிஆர்ல் உங்களின் கணக்கில் காட்டப்படாத வருமானத்திற்கான சரியான ஆதாரங்களை நீங்கள் விளக்கிவிட்டால், பிரிவு 115BBEன் கீழ் பாயும் இந்த 78% வரியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், நினைவிருக்கட்டும்... இந்த அபராத வரியைச் செலுத்தும்போது உங்களின் எந்தவொரு தொழில்முறை செலவுகளையோ அல்லது நஷ்டங்களையோ விலக்காக (No Deductions or Allowances) கோர முடியாது! எனவே, வரி செலுத்தும்போதே சரியாக எல்லாவற்றையும் சமர்ப்பித்துவிடுங்கள். சட்டத்தை ஏமாற்ற முடிந்தால் பெருந்தொகையை வரியாகக் கட்ட வேண்டி இருக்கும்.

    English Summary

    Under the Indian Income Tax Act, unaccounted cash and gold found during raids face massive penalties up to 85.8%(இந்தியாவில் கணக்கில் வராத தங்கத்திற்கு எவ்வளவு வரி): Black Money and Unaccounted Gold tax in India explained.