மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

  • நாட்டு மக்கள் அனைவரும் எப்போது பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற அச்சத்தில் வாகனங்களில் எரிபொருள் தீர தீர நிரப்பி வருகின்றனர். 10-15 லிட்டர் பெட்ரோல் தேவைப்படும் இரு சக்கர வாகனங்களுக்கும் ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை உயரும் போது 15-20 ரூபாய் கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. இப்படியிருக்கும் வேளையில் தான் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.

    Advertisement

    உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்குக் மிகப்பெரிய வாராந்திர விலை வீழ்ச்சி (Biggest Weekly Fall) ஏற்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கிட்டத்தட்ட 10 சதவீதம் வரை சரிவடைந்து ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திலும் மிக முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் அமைதி பேச்சுவார்த்தை சூழலில், தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பது மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை தற்காலிகமாகச் சுமுகமாக இயக்குவது போன்ற முக்கிய கண்டிஷன்கள் கொண்ட ஒப்பந்தங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக வெளியாகும் தகவல்களே இந்த அதிரடி விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

    அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகிக்கப்படும் மிக முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் வழித்தடத்தில் நிலவி வந்த பதற்றம் தற்காலிகமாகத் தணிவது போன்ற சூழல் தற்போதை அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை மூலம் உருவாகியுள்ளது. இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானின் உயரிய தலைவர் முஜ்தபா கமேனி ஆகியோர் அதிகாரப்பூர்வமாக முழு ஒப்புதல் அளிப்பார்களா இல்லையா என்ற விவாதங்கள் ஒருபுறம் நீடித்தாலும், இந்தச் பேச்சுவார்த்தை குறித்த சாதகமான செய்திகளே கச்சா எண்ணெய் சந்தையை குதுகலமாக்கியுள்ளது.

    Advertisement

    இந்தத் திடீர் விலை சரிவு காரணமாக, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பேரலுக்கு 92 டாலர் என்ற அளவுக்குக் கீழ் இறங்கியுள்ளது. இது இந்தியா போன்ற வெளிநாட்டு கச்சா எண்ணெய்யை பெருமளவில் நம்பியிருக்கும் எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு மிகப்பெரிய நிதி சேமிப்பை அளிக்கும்.

    சர்வதேசச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் மிக முக்கிய மூன்று கச்சா எண்ணெய் குறியீடுகளின் (Benchmarks) 2026 ஜூலை மாத பியூச்சர்ஸ் ஒப்பந்தத்திற்கான (JUL 2026 Contract) அமெரிக்காவின் டபிள்யூடிஐ (WTI) கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 1.54 டாலர் சரிந்து, 1.73% வீழ்ச்சியுடன் 87.36 டாலராக வர்த்தகமாகிறது. உலகளாவிய முக்கியக் குறியீடான பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.58 டாலர் குறைந்து, 1.7% சரிவுடன் 91.12 டாலராக விற்பனையாகிறது. அதேபோல், முர்பன் (Murban) கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.03 டாலர் சரிவடைந்து, 0.03% வீழ்ச்சியுடன் 90.05 டாலர் அளவில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

    Advertisement

    சாமானிய மக்களுக்கு குட்நியூஸ் வருமா?

    சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள இந்த 10 சதவீத கச்சா எண்ணெய் விலை சரிவு மூலம், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் உண்மையில் இந்த விலை சரிவு மூலம் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மேலும் அதிகரிக்காமல் ஸ்திரமாக இருக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

    டீசல் விலை கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான போக்குவரத்துச் செலவுகள் குறையும் என்பதால், சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தடுக்கப்பட்டு, கிராமப்புற மக்களின் குடும்ப பட்ஜெட் பாதுகாப்பு இருக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

    English Summary

    Global crude oil prices have recorded their biggest weekly fall in two months, dropping almost 10% amid positive US-Iran ceasefire developments and easing tensions in the Strait of Hormuz. This sharp decline is expected to bring relief to Indian consumers by helping stabilize or potentially lower petrol and diesel prices. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்துள்ளது.