யாரு சாமி நீ.. 10479733000000 ரூபாய்.. எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு.. உலகின் முதல் Trillionaire!

  • உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் நவீன யுகத்தின் ஐன்ஸ்டீன் என போற்றப்படும் எலான் மஸ்க், சர்வதேச வர்த்தக வரலாற்றில் இதுவரை யாரும் எட்டாத ஒரு புதிய இமாலயச் சாதனையைப் படைத்து உள்ளார்.

    Advertisement

    எலான் மஸ்க்கிற்கு சொந்தமான விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'ஸ்பேஸ்எக்ஸ்' (SpaceX) இன்று IPO வெளியிட்டு அமெரிக்க பங்குச்சந்தையில் களமிறங்க உள்ள நிலையில், உலகின் அதிகாரப்பூர்வ முதல் 'டிரில்லியனர்' (World's First Trillionaire) என்ற அந்தஸ்தை எலான் மஸ்க் பெற்றுள்ளார்.

    Advertisement

    ஸ்பேஸ்எக்ஸ் ஐபிஓ - மிரண்ட வால் ஸ்ட்ரீட்!

    அமெரிக்கப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செக் (SEC) அமைப்பிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, எலான் மஸ்க்கின் ராக்கெட் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், தனது ஐபிஓ (IPO) மூலமாக ஒரு பங்கை 135 டாலர் விலைக்கு மொத்தம் 55.56 கோடி பங்குகளை விற்பனை செய்து, 75 பில்லியன் டாலர் நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது.

    இந்த அதிரடிப் பங்கு விற்பனை மூலம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 1.77 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் மதிப்புமிக்க 7-வது நிறுவனமாக ஸ்பேஸ்எக்ஸ் உருவெடுத்துள்ளது.

    Advertisement

    இதன் மூலம் எலான் மஸ்க்கின் எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லாவையும் (Tesla) இது பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்த ஐபிஓ-வில் பங்குகளை வாங்குவதற்காகச் ரீடைல் முதலீட்டாளர்கள் மட்டுமே சுமார் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்ய விண்ணப்பித்திருந்தது உலக வர்த்தக வட்டாரங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    இதன் மூலம் ஸ்பேக்ஸ் எக்ஸ் ஐபிஓ மாபெரும் வெற்றி மட்டும் அல்லாமல் Oversubscription நிலையை அடைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் எலான் மஸ்க் சொத்து மதிப்பு பெரிய அளவில் உயர போகிறது.

    1.1 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பு

    ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ-விற்கு முன்பு, போர்ப்ஸ் (Forbes) இதழின் கணக்கீட்டின்படி எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 780 பில்லியன் டாலராக இருந்தது. இதுவே உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஆல்பபெட் (கூகுள்) நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜைக் காட்டிலும் மிக அதிகமாகும்.

    Advertisement

    தற்போது ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் சந்தையில் முறைப்படி வர்த்தகமாகத் தொடங்க உள்ள சூழலில், போர்ப்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வக் கணக்கீட்டின்படி எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 1.1 டிரில்லியன் டாலரை கடந்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. இதை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் 1,04,79,733 கோடி.. அதாவது 104 லட்சம் கோடி ரூபாய்.

    ஸ்பேஸ்எக்ஸ் பங்கு இருப்பு

    எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 780 பில்லியன் டாலரில் இருந்து 1.1 டிரில்லியன் டாலர் வரையில் உயர முக்கியமான காரணம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் அவர் வைத்திருக்கும் பங்குகள். இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்தப் பங்குகளில் தோராயமாக 42 சதவீதப் பங்குகளை எலான் மஸ்க் தனது கைவசம் வைத்துள்ளார். இதன் தற்போதைய சந்தை மதிப்பு மட்டும் சுமார் 866 பில்லியன் டாலராகும்.

    Advertisement

    மேலும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் உள்ள 'இரட்டை அடுக்கு பங்கு உள்கட்டமைப்பு' (Dual-class share structure) வசதி காரணமாக, இந்நிறுவனத்தின் 82 சதவீதம் முதல் 85 சதவீதம் வரையிலான வாக்குரிமை அதிகாரத்தை (Voting Power) எலான் மஸ்க் மட்டுமே கொண்டுள்ளார். இதன் மூலம் நிறுவனத்தின் அனைத்து அதிகாரமும் அவரிடமே உள்ளது.

    யாரு சாமி நீ..

    டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்கள் மூலம் உலகப் புகழ்பெற்ற எலான் மஸ்க், கடந்த 2022 ஆம் ஆண்டில் 44 பில்லியன் டாலர் மதிப்பில் சமூக ஊடகத் தளமான ட்விட்டரை (தற்போது எக்ஸ் - X) வாங்கியதன் மூலம் தனது உலகளாவிய செல்வாக்கை மேலும் பன்மடங்கு விரிவுபடுத்தினார்.

    Advertisement

    தற்போது ஏஐ மற்றும் டேட்டா சென்டர் வர்த்தகத்திலும் பெரிய அளவில் கால்தடம் பதித்துள்ள எலான் மஸ்க் அடுத்ததாக எக்ஸ் நிறுவனத்தை ஐபிஓ மூலம் பங்குச்சந்தைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    English Summary

    Elon Musk has become the world's first trillionaire with his net worth crossing $1.1 trillion following SpaceX's massive IPO, which valued the company at $1.77 trillion. Musk, who owns 42% of SpaceX shares and holds 82-85% voting power, is now richer than ever as the company prepares to dominate global space and AI markets.