வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை.. பழைய ஓய்வூதியம்.. வங்கி ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா?

  • சென்னை: வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை முறையை வங்கிகளில் அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்காலிகமாக பணியோற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வரும் செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

    Advertisement

    செப்டம்பர் 26ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்று விடுமுறை, அடுத்த நாள் செப்டம்பர் 27ம் தேதி ஞாயிறு என ஒட்டுமொத்தமாக ஐந்து நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்பட இருக்கிறது. இதை உணர்ந்து அரசு, செப்டம்பர் 27ம் தேதி ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என அறிவித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய நிபந்தனைகளான வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை.. பழைய ஓய்வூதியம் போன்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா என்பது தான். அதுபற்றி பார்ப்போம்.

    Advertisement


    வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

    வங்கிகளின் வேலை நாட்களை வாரத்துக்கு ஐந்து நாட்களாக குறைப்பது, பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 26ம் தேதி முதல் 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான. யு.எப்.பி.யு., அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்து உள்ளது. இதில் நாம் முதல் பாராவில் சொன்னது போலவே சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையால் ஐந்து நாட்கள் வங்கிகள் இயங்காது என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், வரும் 30 ம் தேதி அரையாண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால், பணப்பரிவர்த்தனை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவில் முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    செப்டம்பர் 27 ஞாயிறு வங்கிகள் இயங்கும்

    இந்த சூழலில் தான் மத்திய அரசு வரும் செப்டம்பர் 27ம் தேதி ஞாயிறு அன்று வேலை நாளாக அறிவித்துள்ளது. தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கி சேவைகள் பாதிப்பதை தடுக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அன்று அனைத்து தேசிய வங்கிகளும், கிராமப்புற வங்கிகளும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வங்கி ஊழியர்களின் போராட்டத்தின் பாதிப்பை குறைக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.

    மத்திய அரசு மறுப்பது ஏன்

    வங்கி ஊழியர்களின் இரண்டு கோரிக்கைகளை மத்திய அரசு நீண்ட நாட்களாக ஏற்க மறுத்து வருகிறது. அந்த கோரிக்கை பற்றி பார்ப்போம். வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வைத்துள்ளார்கள். ஏற்கனவே இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வங்கிகள் சனிக்கிழமைகளில் இயங்குவது இல்லை.. இந்த சூழலில் ஒவ்வொரு வாரமும் வாரத்தில் ஐந்து நாட்கள் தான் இயங்கும் என்ற நிலை வந்தால், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும். என்னதான் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம், கணிணி மயம் என்று வந்தாலும், செக் கிளியரன்ஸ், கடன் சேவைகள், அதிக ரொக்க பரிமாற்றம் உள்பட வணிகம் சார்ந்த சேவைகளுக்கு கண்டிப்பாக வங்கிகளின் சேவை மிக அவசியம்.

    Advertisement

    ரிசர்வ் வங்கி கவலை

    அதேபோல் நாட்டின் நிதிச் சுழற்சி மற்றும் பணப்புழக்கத்தை சீராக வைத்திருக்க ரிசர்வ் வங்கி விரும்புகிறது. சனிக்கிழமைகளில் வங்கிகள் முழுமையாக மூடப்பட்டால், பணப் பரிவர்த்தனைகள் முடங்கி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி கவலைப்படுகிறது. அதேபோல் அரசுத் திட்டங்களுக்கான நிதிப் பகிர்வு, வரிகள் வசூல் மற்றும் கடன் வழங்கும் முகாம்கள் போன்றவை பெரும்பாலும் வார இறுதியில் நடைபெறுவதால் அரசும் ஒப்புக்கொள்ள வாய்ப்பு கிடையாது. அதேபோல் சனிஞாயிறு விடுமுறை என்றால், முதல் நாள் வெள்ளி அன்றோ அல்லது அடுத்த திங்கள் அன்றோ விடுமுறை வந்தால், 3 அல்லது, நான்கு நாட்கள் தொடர்ந்து வங்கி சேவைகள் பாதிக்கும். வணிகர்கள் ரொக்கத்தை தங்கள் கையில் நான்கு நாட்கள் வரை வைத்திருக்க வேண்டியது வரும். அதேபோல் செக்குகள் தேங்குகள் நிறைய நடைமுறைசிக்கல்கள்வரும் என்பதால் அரசு வாரம் இரண்டு நாள் விடுமுறையை ஏற்க மறுக்கிறது.

    Advertisement


    பழைய ஓய்வூதியம்

    அதேபோல் பழைய ஓய்வூதியம் திட்டத்தையும் மத்திய அரசு ஏற்கவே இல்லை... பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்கள் தங்களின் சம்பளத்தில் இருந்து எந்தப் பங்களிப்பும் தந்தது இல்லை. அதாவது அவர்களிடம் பணம் பிடிக்கப்படாது. அத்துடன் அரசுதான் அவர்களின் ஓய்வூதியத்தை முழுமையாகத் தன் கருவூலத்தில் இருந்து தந்தது. எனவே தான் பழைய ஓய்வூதிய திட்டமே ரத்து செய்யப்பட்டது. அரசு ஓய்வூதியத்திற்கு பணத்தை ஒதுக்குவதே மிகப்பெரிய நிதிப் சுமையாக மாறுவதால், மீண்டும் பழைய ஓய்வூதியத்தை அரசு ஒரு நாளும் ஏற்காது என்பதே எதார்த்தமான உண்மை.

    English Summary

    Will the Central Government accept the bank employees' demands to implement a five-day work week, restore the old pension scheme, fill vacancies, and regularize the services of temporary employees?