தங்கத்தில் செய்யப்படும் பெரிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு.. செபி அதிரடி! நீங்கள் பாதிக்கப்படுவீர்களா?

  • சென்னை: இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. HDFC, ICICI Prudential, Nippon India உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்க ETF (Gold ETF) திட்டங்களில் ஒரே நேரத்தில் பெரிய அளவிலான லம்ப்சம் முதலீடுகளுக்கு (Lump Sum) கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதார நிலையை உறுதிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தங்க ETF என்றால் என்ன?

    தங்க ETF என்பது நேரடியாக தங்க நகைகள் அல்லது பார்களை வாங்காமல், டிஜிட்டல் வடிவில் தங்கத்தில் முதலீடு செய்யும் திட்டமாகும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மூலம் நாம் முதலீடு செய்யும் பணத்துக்கு ஏற்ப அவர்கள் உண்மையான தங்கத்தை வாங்கி பாதுகாக்கின்றன. இதன் மூலம் சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் லாபம் ஆகியவற்றை ஒருங்கிணைக்க முடிகிறது. தங்கத்தின் விலை உயரும்போது முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதில் பெரிய லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன .

    Advertisement

    ஏன் இந்த கட்டுப்பாடு?

    இந்தியா உலகின் மிகப் பெரிய தங்க இறக்குமதி நாடுகளில் ஒன்று. தங்கம் வாங்குவதற்கு அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது. அதிக தங்க இறக்குமதி செய்யப்படும்போது ரூபாயின் மதிப்பு பலவீனமடைகிறது. சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் தங்க இறக்குமதி அதிகரிப்பால் ரூபாய் மீது அழுத்தம் ஏற்பட்டது. இதைச் சமாளிக்க பிரதமர் நரேந்திர மோடி மே 10 அன்று பொதுமக்களுக்கு தங்க சேர்ப்பு மற்றும் வெளிநாட்டு பயணங்களை தள்ளிப்போடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த பொருளாதார சூழலில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அரசின் முயற்சிக்கு ஆதரவாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.

    Advertisement

    கட்டுப்பாட்டின் விவரம்

    HDFC மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்க ETF திட்டங்களில் ஒரே முறையில் ரூ.25 கோடிக்கு மேல் புதிய முதலீடுகளுக்கு தடை விதித்துள்ளன. இந்த வரம்புக்கு மேல் உள்ள முதலீடுகளுக்கு சில நிபந்தனைகள் அல்லது அனுமதி தேவைப்படலாம். இது பெரிய நிறுவனங்கள் மற்றும் உயர் நிதி முதலீட்டாளர்களை மையப்படுத்திய நடவடிக்கையாகும்.

    சாமானிய மக்களுக்கு பாதிப்பு உண்டா?

    நிச்சயமாக இல்லை. இந்த கட்டுப்பாடு ரூ.25 கோடிக்கு மேல் முதலீடு செய்பவர்களை மட்டுமே பாதிக்கும். சாதாரண நடுத்தர வர்க்க மக்களின் மாதாந்திர SIP முதலீடுகள் (ரூ.500, ரூ.1,000 அல்லது ரூ.5,000) முழுமையாக தொடரும். தங்க ETF-களில் லம்ப்சம் முறையில் ரூ.25 கோடிக்கு மேல் முதலீடு செய்வது மிக அரிதான விஷயம். எனவே இந்த அறிவிப்பு "அடையாளப்பூர்வமானது" என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். சாதாரண முதலீட்டாளர்கள் பயமின்றி தங்கள் திட்டங்களைத் தொடரலாம்.

    Advertisement

    தங்க நிதிகளின் தற்போதைய நிலை

    புவிசார் அரசியல் பதற்றங்கள், பணவீக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக கடந்த சில ஆண்டுகளில் தங்க முதலீட்டுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்க ETFகளின் மொத்த Assets Under Management (AUM) ரூ.3 லட்சம் கோடியைத் தொட்டது. பின்னர் தங்க விலையில் ஏற்பட்ட சுமார் 25% சரிவால் தற்போது AUM சுமார் ரூ.1.71 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. இருப்பினும் தங்கம் நீண்டகால பாதுகாப்பான முதலீடாகவே கருதப்படுகிறது.

    இந்த நடவடிக்கை நாட்டின் வெளிநாட்டு செலவினங்களைக் கட்டுப்படுத்தவும், ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தவும் உதவும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவதை இது காட்டுகிறது. சாமானிய மக்கள் தொடர்ந்து SIP மூலம் சிறுகச் சிறுக முதலீடு செய்து தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கலாம். தங்கம் என்றாலே பாதுகாப்பு என்ற எண்ணம் தொடரும். இந்த மாற்றம் பொருளாதார நிலையை உறுதிப்படுத்த உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

    English Summary

    Gold ETF Lump Sum Investment Restricted: No Impact on Common Investors in India