டிரம்பே ஓகே சொல்லாவிட்டாலும் சரி.. எங்களுக்கு ரஷ்யா முக்கியம்.. இந்தியாவின் கறாரான முடிவு!

  • அமெரிக்கா, ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய உலக நாடுகளுக்கு விலக்கு நீட்டிக்காத நிலையிலும், இந்தியா தொடர்ந்து ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த முடிவு அமெரிக்க ஆதிராகத்தில் ஓட்டை விழுந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    ஈரான் நேற்று ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி மீது டிரோன் தாக்குதலை நடத்திய நிலையில், வளைகுடா நாடுகள் மத்தியிலான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதேவேளையில் ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களை நிர்வாகம் செய்ய ஈரான் தனி நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இதனால் போரும் முடியும் வாயப்பு குறைந்துள்ளது, இதேபோல் கச்சா எண்ணெய் சப்ளையும் இயல்பு நிலைக்கு திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது.

    Advertisement

    இத்தகைய சூழ்நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களிடம் பேசியபோது, அமெரிக்க விலக்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை தொடரும் என்று தெளிவுபடுத்தினார்.

    மேலும் அவர் அமெரிக்க விலக்கு அளிக்கப்பட்ட முன்பும் சரி, விலக்கு அளிக்கப்பட்ட காலத்திலும் சரி, இப்போதும் சரி இந்தியா ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் இந்தியாவின் கொள்முதல் கொள்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறினார்.

    சீனா பயணம்

    அமெரிக்க அதிபரின் சீன பயணத்திற்கு பின்பு டிரம்ப்-ன் அதிகார தொனி குறைந்துள்ளது என பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளது. சீனா பயணத்தில் மற்ற நாடுகளை போல் அமெரிக்காவை சீனா நம்பியில்லை, அமெரிக்க நிறுவனங்களுக்கு இணையாக தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை அமெரிக்கா உயர்மட்ட நிர்வாகம் உணர்ந்துள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.

    Advertisement

    இந்த டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பில் ரேர் எர்த் மெட்டல், தைவான், ஈரான் போர் தொடர்பான பேச்சுவார்த்தை முக்கியமாக இருந்தாலும். இரு நாடுகள் மத்தியில் பல வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய நிலையில் தான் அமெரிக்காவுக்கு எதிரான நிலப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது.

    வணிக ரீதியான முடிவு - இந்தியா

    இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் முற்றிலும் வணிக ரீதியான காரணங்களை அடிப்படையாகக் கொண்டது என்று சுஜாதா சர்மா விளக்கினார். கச்சா எண்ணெய் குறைவான விலையில் எங்கு கிடைக்கிறது என்பதன் அடிப்படையிலும், உள்நாட்டுத் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்தியா தனது கொள்முதல் முடிவுகளை எடுத்து வருகின்றது. அரசியல் நெருக்கடிகள் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு கொள்கையை மாற்றாது என்று அவர் தெரிவித்தார்.

    Advertisement

    தற்போது இந்தியாவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் அச்சம் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். "போதுமான அளவு கச்சா எண்ணெய் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விலக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது" என்று சுஜாதா சர்மா கூறினார்.

    ரஷ்யா கச்சா எண்ணெய் விலை

    சர்வதேச சந்தையில் பிரெண்ட் மற்றும் WTI கச்சா எண்ணெய் ஒப்பிடுகையில் ரஷ்ய எண்ணெய் குறைந்த விலையில் கிடைப்பதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தை குறைக்கவும் ரஷ்ய எண்ணெய் உதவுகிறது. இது நாட்டின் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்கவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    English Summary

    Despite the Trump administration not extending sanctions waivers on Russian oil, India has firmly decided to continue importing crude from Russia, prioritizing commercial benefits and domestic energy security. The Petroleum Ministry has clarified that India’s procurement strategy remains unchanged, ensuring stable fuel prices and protecting the economy from global volatility.