ஐபிஎல் முடிந்தது.. அடுத்த வேலையை பாருங்க.. உதய் கோட்டக் ட்வீட் கொடுத்த ஷாக்

  • இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல்-ன் (IPL) மற்றொரு வெற்றிகரமான சீசன் நிறைவு செய்துள்ளதை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடி வருகிறது. இத்தகைய சூழலில், இந்தியாவின் முன்னணி மற்றும் மூத்த வங்கியாளரான உதய் கோட்டக் (Uday Kotak) வெளியிட்டுள்ள ஒரு சமூக ஊடகப் பதிவு ஒட்டுமொத்த இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியையும் விழிப்புணர்வையும் கொடுத்துள்ளது.

    Advertisement

    கொண்டாட்டங்களை கடந்து, நாட்டின் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கக்கூடிய மிக முக்கியமான ஒன்றான 'எதிர்காலத்திற்கான முதலீடுகள்' (Investment in the future) மீது இந்திய நிறுவனங்கள் தங்களின் கவனத்தைத் திருப்ப வேண்டிய கட்டாய நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கூகுள் vs இந்திய நிறுவனங்கள்

    உதய் கோட்டக் தனது டிவீட்டில், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet) சுமார் 80 பில்லியன் டாலர் (ஏறக்குறைய 7.6 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு கூடுதல் முதலீட்டை திரட்டப் போவதாக அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

    ஏற்கனவே கூகுள் தன் வசம் அதிகப்படியான உபரிப் பணம் (Cash surplus) கொட்டிக்கிடந்தாலும் கூகுள் நிறுவனம், தற்பொழுது கூடுதலாக 80 பில்லியன் டாலர் மூலதனத்தை (Capital raise) திரட்டப்போகிறது.

    கூகுளின் வருடாந்திர லாபம் 160 பில்லியன் டாலராகவும், கடந்த காலாண்டில் மட்டும் 62 பில்லியன் டாலராகவும் இருப்பதாகவும் உதய் கோட்டாக் குறிப்பிட்டார். இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4.5 டிரில்லியன் டாலரைத் தொடுவதாகவும் தெரிவித்தார்.

    Advertisement

    இந்த ஒரு தனி நிறுவனத்தின் லாபமும் சந்தை மதிப்பும், இந்தியாவில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து இந்திய நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாபம் மற்றும் சந்தை மதிப்புக்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளது என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. இத்தகைய நிறுவனம் ஏன் முதலீட்டை திரட்டுகிறது?

    இந்திய நிறுவனங்களுக்கு பாடம்

    உலக அளவில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் இருப்புநிலைக் குறிப்பில் (Balance sheets) வலுவாகவும், பண பலத்துடனும், வியக்க வைக்கும் லாபத்துடனும் இயங்கி வந்தாலும் கூட, அவை தொடர்ந்து தங்களின் எதிர்கால வளர்ச்சிக்காக எவ்வளவு கடுமையாக முதலீடு செய்கின்றன என்பதை கூகுளின் இந்த அதிரடி நடவடிக்கை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது என்று உதய் கோட்டக் விளக்கியுள்ளார்.

    Advertisement

    இதற்காக கூகுள் தன்னிடம் இருக்கும் பங்குகளை சந்தையில் நேரடியாக விற்பனை செய்தும், பத்திரங்களாக மாற்றியும், கடன்களாகவும் கொடுத்து முதலீட்டை திரட்டி வருகிறது.

    எதற்காக இந்த முதலீடு

    செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத் திறன்களைப் பன்மடங்கு வலுப்படுத்துவதற்கும், உலக அளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பு (Computing infrastructure) தேவைகளைப் பூர்த்தி செய்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கூகுள் நிறுவனம் இந்த மாபெரும் முதலீட்டை திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.

    எதிர்காலத்திற்காக முதலீட்டை திரட்டுங்கள்

    தற்போதைய சூழல் எப்படி இருந்தாலும் சரி, எதிர்காலத் தேவைகளைக் கணித்து அதில் முதலீடு செய்ய வேண்டியது இந்திய நிறுவனங்களின் கட்டாயக் கடமை என்பதை இந்த உலகளாவிய நிலவரம் நமக்கு உணர்த்துகிறது.

    Advertisement

    இதனைத் தான் உதய் கோட்டக் தங்களின் பதிவில், இந்தியாவில் தற்பொழுது ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்து விட்டதால், இனிமேலாவது இந்திய நிறுவனங்கள் தங்களின் முதன்மை வணிகத்தின் மீதும், எதிர்காலத் தொழில் உத்திகளின் மீதும் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது என்று கறாராகக் குறிப்பிட்டுள்ளார்.

    உதய் கோட்டக் போன்ற மூத்த தொழிலதிபர்களின் இத்தகைய கருத்துகள், இந்திய நிறுவனங்கள் தங்கள் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை நினைவூட்டுகின்றன. ஐபிஎல் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகள் முடிந்த பிறகு, உண்மையான வியாபார வளர்ச்சியை நோக்கி நாடு திரும்ப வேண்டும் என்பது தான் மைய கருத்தாக உள்ளது.

    English Summary

    Veteran banker Uday Kotak urged Indian companies to shift focus from celebrations to serious future investments after the IPL season, highlighting Alphabet’s massive $80 billion capital raise despite huge profits. He emphasized that Google’s scale and aggressive AI spending should serve as a wake-up call for Indian businesses to prioritize long-term growth.