39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி!

  • உலகளாவிய கமாடிட்டி மற்றும் நிதிச் சந்தைகளில் கடந்த சில மணிநேரங்களாக நிலவி வரும் உச்சக்கட்ட பரபரப்பிற்குப் பின்னால் ஒரு மாபெரும் சந்தை ஏமாற்று வேலை (Market Manipulation) ஒளிந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று இரவே ஈரான் மீது தாக்குதல் நடத்தி கார்க் தீவை கைப்பற்றப்போவதாக அறிவித்த நிலையில், அடுத்த சில மணிநேரத்தில் ஈரான் உடன் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்த கையெழுத்திட தயாராகியுள்ளோம் என டிரம்ப் அறிவித்தார். இது அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

    Advertisement

    இன்று அமெரிக்க பங்குச்சந்தையில் எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ்எக்ஸ்' (SpaceX) நிறுவனத்தின் பிரம்மாண்ட பொதுப் பங்கு வெளியீட்டை (IPO) வெளியாக உள்ள நிலையில், பங்குச் சந்தையைச் செயற்கையாக உயர்த்துவதற்காகவே இத்தகைய போலி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமெரிக்காவுடன் எவ்வித இறுதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று ஈரான் மிகத் திட்டவட்டமாகப் அறிவித்துள்ளது.

    39-வது முறை டிரம்ப்பின் பொய் வாக்குறுதி

    சர்வதேச முன்னணி ஊடகமான சிஎன்என் வெளியிட்டுள்ள அதிரடித் தரவுகளின்படி, அமெரிக்க - ஈரான் போர் தொடங்கியதிலிருந்து "இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் மிக அருகில் உள்ளது" என்று அதிபர் டிரம்ப் உரிமை கொண்டாடுவது இது 39-ஆவது முறையாகும் என அறிவித்துள்ளார்.

    Advertisement

    டிரம்ப் இதுவரை வெளியிட்ட அத்தனை 'ஒப்பந்த நெருக்கடி' அறிவிப்புகளையும் ஈரான் ஒவ்வொரு முறையும் அடியோடு மறுத்து வந்துள்ளது. ஈரானிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிரம்பின் தற்போதைய வாக்குறுதி அனைத்தும் அவரது முந்தைய போலி அறிவிப்புகளைப் போலவே முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியவை" என்று மிகக் கடுமையாகச் விமர்சனம் செய்துள்ளது.

    ஈரானின் உச்ச தலைவர் உள்ளிட்ட அனைவரும் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக டிரம்ப் கூறிய வாதத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சகம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

    ஈரானை அசைக்க முடியாது..

    ஈரானிய செய்தி நிறுவனமான 'ஃபார்ஸ்' (Fars) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்காவுடன் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும், ஒருவேளை ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என்றால் ஈரான் விதிக்கும் அனைத்துக் கோரிக்கைகளையும் அமெரிக்கா நிபந்தனையின்றி ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    தங்களின் அணுசக்தித் திட்டத்தை (Nuclear Program) அப்படியே வைத்திருப்பது, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பது, மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait of Hormuz) முழுக் கட்டுப்பாட்டை நிரந்தரமாக ஈரானே வைத்திருப்பது ஆகியவை ஈரானின் முதன்மை நிபந்தனேகளாகும்.

    இது தவிர, அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள தங்களின் 24 பில்லியன் டாலர் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கியக் கோரிக்கையாகும். அமெரிக்காவின் குண்டுவீச்சுகளுக்குப் பயந்து ஈரான் தங்களின் கொள்கைகளை ஒருபோதும் தளர்த்தாது என்றும், அழுத்தம் காரணமாகப் பணிய நினைத்திருந்தால் ஒரு வருடத்திற்கு முன்பே அதைச் செய்திருப்போம் என்றும் ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

    Advertisement

    ஹார்முஸ் வழித்தடம் திறப்பு

    இரு நாடுகள் மத்தியிலும் ஒப்பந்தம் கையெழுத்தானதும் ஹார்முஸ் வழித்தடம் உடனடியாகத் திறக்கப்படும் மற்றும் வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பான வழித்தடம் உருவாக்கப்படும் என்ற டிரம்பின் பேச்சை ஈரானிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் முற்றிலும் மறுத்துள்ளார்.

    ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் என்றும், ஈரானின் அனுமதியின்றி அங்கு எவ்விதக் கப்பல் போக்குவரத்தும் சாத்தியமில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

    English Summary

    Iran has officially rejected Donald Trump’s claims of an imminent peace deal, labeling the announcements as strategic market manipulation ahead of today's highly anticipated SpaceX IPO. According to international reports, this marks the 39th time Iran has dismissed US ceasefire claims, asserting that the Strait of Hormuz remains closed and rejecting any nuclear program concessions. இன்றைய ஸ்பேஸ்எக்ஸ் ஐபிஓ (SpaceX IPO) வெளியீட்டை முன்னிட்டு பங்குச்சந்தையைச் செயற்கையாக உயர்த்தவே டொனால்ட் டிரம்ப் போலி போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டதாக மார்க்கெட் மேனிபுலேஷன் குற்றச்சாட்டுகளை ஈரான் முன்வைத்துள்ளது.