பங்குகளை வெளியிட்டு 1700 கோடி திரட்டும் லலிதா ஜூவல்லரி.. 17ம் தேதி மிகப்பெரிய பிளான்

  • சென்னை: லலிதா ஜூவல்லரி மார்ட் லிமிட்டடின் ஆரம்ப பொதுப்பங்கு வெளியீடு (IPO) 2026 ஆகஸ்ட் 17 அன்று தொடங்க உள்ளது. தலா ₹5 முகமதிப்பு கொண்ட ஒரு பங்குக்கான விலை வரம்பு ₹190 முதல் ₹201 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ரூ.1,200 கோடி வரையிலான புதிய பங்கு வெளியீடும், லலிதா ஜூவல்லரி நிறுவனர் எம்.கிரண்குமார் ஜெயின் மூலம் ரூ.500 கோடி வரையிலான விற்பனைக்கான பங்குவெளியீடும் இதில் அடங்கும்.

    Advertisement

    சென்னையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி என தென்னிந்தியா முழுவதும் 45 நகைக்கடைகள் லலிதா ஜூவல்லரி மார்ட் லிமிட் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. சுமார் 7 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். லலிதா ஜூவல்லரி நிறுவனம் புதிய ஐபிஓ நிதி மூலம் தென்னிந்தியாவில் மேலும் 10 புதிய கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டிருக்கிறது.

    Advertisement

    அதன்படியே லலிதா ஜூவல்லரி மார்ட் லிமிடெட் தனது ஆரம்ப பொதுபங்கு வெளியீட்டுக்காக தலா ரூ.5 முக மதிப்புக்கொண்ட ஒரு பங்குக்கு ரூ.190 முதல் ரூ.201 வரையிலான விலை வரம்பை நிர்ணயித்துள்ளது. இந்த தகவலை அந்த நிறுவனத்தின் நிறுவனர் கிரண்குமார் தெரிவித்தார். இதில் ரூ.1,200 கோடி வரையிலான புதிய பங்கு வெளியீடும், லலிதா ஜூவல்லரி நிறுவனர் எம்.கிரண்குமார் ஜெயின் மூலம் ரூ.500 கோடி வரையிலான விற்பனைக்கான பங்குவெளியீடும் அடங்கும் என்றும் கிரண்குமார் கூறியுள்ளார்.

    லலிதா ஜூவல்லரி நிறுவனத்தின் ஆரம்ப பொது பங்கு வெளியீடு வருகிற 17-ந்தேதியன்று முதலீட்டாளர்கள் விண்ணப்பங்களுக்காக திறக்கப்பட்டு 19-ந்தேதியோடு நிறைவடைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, நிறுவனத்தின் மொத்த பங்குகளின் எண்ணிக்கை 49 கோடியே 99 லட்சத்து 77 ஆயிரத்து 156 (ஒவ்வொன்றும் ரூ.5 முகமதிப்பு கொண்டவை) என சொல்லப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தியாவின் முக்கிய நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றாக திகழும் லலிதா ஜூலல்லரி, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் புகழ் பெற்ற நம்பிக்கையான நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் 2026, 2025, 2024ம் நிதியாண்டுகளில் முறையே ரூ.410 கோடியே 23 லட்சம், ரூ.281 கோடியே 62 லட்சம் மற்றும் ரூ.316 கோடியே 76 லட்சம் வருவாயை ஈட்டியுள்ளது.

    தனது மூலதன பங்குகளை பொதுமக்களுக்கு முதன்முறையாக நிறுவனம் வழங்கும் திட்டத்தை முன்மொழிந்திருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள தமிழ்நாடு மற்றும் அந்தமான் நிறுவனங்களின் பதிவாளரிடம் "ரெட் ஹெரிங் பிராஸ்பெக்டஸ்" ஆவணத்தையும் இந்த நிறுவனம் தாக்கல் செய்திருக்கிறது. தென்னிந்திய சந்தைக்கு அங்கீகரிக்கப்பட்ட BIS-ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை வழங்கும் லலிதா ஜூவல்லரிநிறுவனம், சொந்தமாக உற்பத்தி செய்யும் நகைகக்கூடத்தை வைத்து மொத்தமாக உற்பத்தி செய்து கடைகளுக்கு அனுப்புகிறது. இதன் மூலம், குறைந்த விலையில் தங்க நகைகளை வழங்கும் இந்நிறுவனம், மற்ற கடைகளுடன் விலையை ஒப்பிட்டு விற்பனை செய்யும் வியூகத்தை கையாள்கிறது. வாடிக்கையாளர்களின் மதிப்பை பெறுவதற்காக பல்வேறு நவீன வடிவங்களில வியூகங்களை கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    1700 Crore Lalithaa Jewellery IPO Explained, which explains their store network and market strategy.