SpaceX: நினைச்சதொன்னு, நடந்ததொன்னு.. எலான் மஸ்க்-கிற்கே ஆனந்த கண்ணீர் வரவைத்த சம்பவம்!

  • உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் கனவு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), அமெரிக்கப் பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் (Nasdaq) வெள்ளிக்கிழமை அன்று பட்டியலிடப்பட்டு தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

    Advertisement

    ஐபிஓ (IPO) வெளியீட்டிற்கு முன்பு உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் போர்ப் பதற்றங்களால் இந்த மெகா ஐபிஓ தோல்வியை சந்திக்குமோ என்று வால் ஸ்ட்ரீட் நிபுணர்கள் பலரும் கணித்து வந்தனர். ஆனால், அனைத்து கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி, வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலரை கடந்து சாதனை படைத்துள்ளது.

    Advertisement

    ஸ்பேஸ்எக்ஸ் முதலில் திட்டமிட்டது 1.7 டிரில்லியன் டாலர் மதிப்பீடு தான், இதுவே பலரும் அதிக மதிப்பீடு என கூறிவந்த நிலையில் முதலீட்டாளர்களின் ஏகோப்பித்த வரவேற்பு காரணமாக 2 டிரில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 35 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளுக்கு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பீட்டுக்கு முதலீடு குவிந்தது, இதன் விளைவாக ப்ரீமியம் விலையில் பங்குகள் பட்டியலிடப்பட்டது.

    ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இந்த வால் ஸ்ட்ரீட் எண்ட்ரி, எலான் மஸ்க்கிற்கே ஆனந்தக் கண்ணீரை வரவைக்கும் அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சம்பவமாக மாறியுள்ளது.

    Advertisement

    சவுதி அராம்கோ சாதனையைத் தவிடுபொடியாக்கிய ஐபிஓ!

    கடந்த 2019 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ (Saudi Aramco) சுமார் 29.4 பில்லியன் டாலர் திரட்டி உலகிலேயே மிகப் பெரிய ஐபிஓ ஆக சாதனை படைத்திருந்தது.

    ஆனால், தற்போதைய ஸ்பேஸ்எக்ஸ் ஐபிஓ ஒட்டுமொத்தமாக 75 பில்லியன் டாலர் நிதியைத் திரட்டி, சவுதி அராம்கோவின் சாதனையை விட இரண்டு மடங்கு கூடுதல் நிதியுடன் உலக வர்த்தக வரலாற்றிலேயே 'மிகப் பெரிய ஐபிஓ' என்ற புதிய உலக சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளது.

    வியாழக்கிழமை அன்று ஒரு பங்கின் விலை 135 டாலர் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் போது எவ்வித ஏற்ற இறக்கப் பதற்றமும் இன்றி 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை எகிறி, இறுதியாக 19 சதவீதம் உயர்வுடன் 161 டாலர் என்ற அளவில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் 6-ஆவது பெரிய நிறுவனமாக ஸ்பேஸ்எக்ஸ் உருவெடுத்துள்ளது.

    Advertisement

    நஷ்டத்தில் இருக்கும் நிறுவனம்

    இந்த ஐபிஓ-வின் பின்னணியில் உள்ள மிக சுவாரசியமான உண்மை என்னவென்றால், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 5 பில்லியன் டாலர் நஷ்டத்தைப் பதிவு செய்திருந்தது. இதே சந்தை மதிப்புடைய பிற உலகளாவிய டெக் நிறுவனங்களை ஒப்பிடும்போது, ஸ்பேஸ்எக்ஸ் ஈட்டும் வருவாய் என்பது மிகக் குறைவான ஒரு பகுதியே ஆகும்.

    இருப்பினும், எலான் மஸ்க்கின் வியக்கவைக்கும் விண்வெளி உத்திகள், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை மற்றும் விண்வெளியில் அமையவிருக்கும் ஏஐ தரவு மையங்கள் (Space AI Data Centres) ஆகியவற்றின் எதிர்கால வளர்ச்சியை நம்பி முதலீட்டாளர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பணத்தைக் கொட்டியுள்ளனர்.

    Advertisement

    ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் 42 சதவீதப் பங்குகளைத் தன்வசம் வைத்துள்ள எலான் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 1.1 டிரில்லியன் டாலரைக் கடந்து, மனித வரலாற்றிலேயே உலகின் அதிகாரப்பூர்வ 'முதல் டிரில்லியன் அதிபர்' (World's First Trillionaire) என்ற மகுடத்தை அவருக்குச் சூட்டியுள்ளது.

    English Summary

    SpaceX has made a historic entry into the Nasdaq with its IPO, achieving a $2 trillion valuation and raising $75 billion, surpassing Saudi Aramco's record. Elon Musk, who owns 42% of the company, has now become the world's first trillionaire with a net worth exceeding $1.1 trillion.