தினமும் சரிவு.. ரத்தக்கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்.. இதை ஃபாலோ பண்ணுங்க.. நிபுணர்களின் டிப்ஸ்

  • உலகப் பங்குச் சந்தைகள் தற்போது கடுமையான ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றன. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் அமெரிக்கா-ஈரான் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் ஆகியவை இந்தியப் பங்குச் சந்தையை வாட்டி வதைத்து வருகிறது.

    Advertisement

    இந்த நிலையில், பங்குச் சந்தை நிபுணர்கள் முதலீட்டாளர்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அவசரப்பட்டோ அல்லது திட்டமிடாமல் முதலீடு செய்தால் பெரும் இழப்புக்கு தள்ளப்படுவீர்கள் என எச்சரித்துள்ளனர். தற்போதைய சரிவு நிறுவனங்களின் அடிப்படை வலிமை, வர்த்தகம் குறைந்ததால் ஏற்படவில்லை, உலக அளவிலான அச்சம் மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாக ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    ஏன் இந்த ஏற்ற இறக்கம்?

    மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம், கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் உலகத் தலைவர்களின் நிலைப்பாடுகள் ஆகியவை முதலீட்டாளர்களிடையே பயத்தை அதிகரித்துள்ளன. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FII) இந்தியப் பங்குகளை தினசரி அடிப்படையில் விற்று வருகின்றனர்.

    இந்த விற்பனை அழுத்தம் சந்தையை தொடர்ந்து பாதித்து வருகிறது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்த இழப்பை ஈடுக்கட்ட முயற்சி செய்தாலும், வெளியேற்றம் அதிகமாக இருக்கும் காரணத்தால் கடந்த 75 நாட்களில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 8000 புள்ளிகளுக்கு அதிகமாக சரிந்துள்ளது. நிஃப்டி தனது பலமான 24000 ரூபாய் அளவீட்டை இழந்துள்ளது.

    Advertisement

    முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

    சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் பெரும் பகுதியை பணமாக (கேஷ்) வைத்திருக்குமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கடன் நிதிகள் (Debt Funds) அல்லது லிக்விட் நிதிகள் போன்ற பாதுகாப்பான வழிகளில் அதிக முதலீடு செய்யலாம் என பரிந்துரை செய்து வருகின்றனர். உலக பொருளாதாரம் மற்றும் வர்த்தக சூழ்நிலை மேம்படும் வரை புதிய முதலீடுகளை தற்காலிகமாக குறைக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

    அடுத்தாக குறுகிய காலம் அல்லது நடுத்தர கால முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எண்ணெய் விலை மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் எவ்வளவு காலம் நீடிக்கும் என யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது. எனவே, அடுத்த சில வாரங்களில் சந்தை ஏற்ற இறக்கம் தொடரலாம். இதனால் உங்களுடைய முதலீட்டை மறுசீரமைப்பு செய்ய வேண்டியது கட்டாயம் என அறிவுறுத்துகின்றனர்.

    Advertisement

    இத்தகைய சூழ்நிலையில் பொதுவாக வரும் அட்வைஸ் என்னவென்றால் முதலீட்டை பணமாக வைத்திருக்கவும், அல்லது வெளிநாட்டு சந்தையில் குறிப்பாக அமெரிக்க சந்தையில் முதலீடு செய்து முதலீட்டை பாதுகாக்க வேண்டும் என்பது தான்.

    நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி

    ஆனால் நீண்டகால முதலீட்டாளர்கள் பயப்படத் தேவையில்லை. SIP (முறையான முதலீட்டுத் திட்டம்) மூலம் முதலீடு செய்பவர்கள் தொடர்ந்து முதலீடு செய்யலாம். சந்தை சரிவு காலங்களில் SIP மூலம் முதலீடு செய்வது நீண்டகாலத்தில் சராசரி விலையைக் குறைத்து நல்ல லாபத்தைத் தரும் என அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல் புதிதாக முதலீடு செய்ய விரும்புவோருக்கு வளர்ந்து வரும் தொழிற்துறையில் அதிகம் முதலீடு செய்துள்ள பண்டுகளில் முதலீடு செய்ய பரிந்துரைத்துள்ளனர்.

    Advertisement

    இந்த முறையில் முதலீடு செய்பவர்கள் குறுகிய கால ஏற்ற இறக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட மாட்டார்கள்.

    புதிய முதலீடுகளுக்கு எந்தத் துறை?

    புதிய முதலீடுகளைத் தொடங்க விரும்புபவர்கள் இந்திய உள்நாட்டுப் பொருளாதாரத்தை நம்பியுள்ள துறைகளில் மட்டும் கவனம் செலுத்துமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் உலகளாவிய பதற்றத்தால் அதிகம் பாதிக்கப்படாத, நிலையான வருமானம் தரும் துறைகளைத் தேர்வு செய்வது நல்லது என கூறுகின்றனர்.

    வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

    குறுகிய கால வர்த்தகர்கள் தற்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், இதற்கு முக்கிய காரணம் நிஃப்டி மீண்டும் 24,000 புள்ளிகள் என்ற முக்கிய எல்லையை தொடும் வரை சந்தையின் மீது பெரிய நம்பிக்கை இல்லை. இதனால் தற்போது நிஃப்டிக்கு உடனடி ஆதரவு நிலை 23,150 என்ற அளவில் உள்ளது. இந்த நிலையை உடைத்து சந்தை கீழே சென்றால் மேலும் விற்பனை அழுத்தம் அதிகரிக்கும். இல்லையென்றால் சந்தை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் நகரும்.

    Advertisement

    இப்போது என்ன செய்ய வேண்டும்?

    தற்போது நிபுணர்களின் ஒருமித்த கருத்து என்னவென்றால், இது உணர்ச்சிவசப்பட்டு முதலீடு செய்யும் நேரம் அல்ல. பொறுமையுடன், ஒழுங்கான முறையில் முதலீட்டை திட்டமிட்டு, நீண்டகால இலக்குகளை மனதில் வைத்து செயல்படுவதே தற்போது பாதுகாப்பான வழி. உலகப் பதற்றம் குறையும் வரை காத்திருந்து, பின்னர் தெளிவான முடிவுகளை எடுப்பது நல்லது.

    இந்தச் சந்தை ஏற்ற இறக்கம் தற்காலிகமானது என்றாலும், முதலீட்டாளர்கள் தங்கள் நிதி இலக்குகள் மற்றும் ஆபத்து தாங்கும் திறனுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுப்பது மிகவும் முக்கியம்.

    English Summary

    Indian stock markets are witnessing sharp volatility due to escalating US-Iran tensions and rising crude oil prices, leaving retail investors anxious about their investments. Market experts advise maintaining higher cash allocation, continuing SIPs calmly, and focusing on domestic economy-linked sectors while avoiding aggressive buying until global conditions stabilize. இந்தியப் பங்குச் சந்தை கடுமையான சரிவை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.