Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா!

  • மும்பை: உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, தனது நிறுவனம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டினாலும், கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்..? இதோடு இந்த 'ஒரு ரூபாய்' சம்பளம் எப்படி, எங்கு உருவானது தெரியுமா..? இதில் சுவாரஸ்யமான விஷயம் இருக்கு.

    Advertisement

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் இந்த முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இது பலரையும் வியக்க வைத்துள்ளது. ஒவ்வொரு பெரிய நிறுவனங்களின் தலைவர்களும் பொறுப்பில் இருக்கும் போது தங்கள் நிறுவனத்தில் சம்பளமாகவோ அல்லது கொடுப்பனவாகவோ ஒரு பெரும் தொகையை பெறுவது வழக்கம். ஆனால் ஒரு சிலர் மட்டுமே சம்பளம் பெறாமல் பணியாற்றுகின்றனர். இதில் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் துவங்கி முன்னாள் தமிழ்நாட்டு முதல்வர் ஜெ.ஜெயலலிதா (1 ரூபாய்) வரை பலரும் இதை செய்துள்ளனர்.

    Advertisement

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் சாதனை

    2025-26 நிதியாண்டில் (FY26) ரிலையன்ஸ் நிறுவனம் வரலாற்று சிறப்புமிக்க லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இக்குழுமத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.95,754 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.18,19,103 கோடியைத் தொட்டுள்ளது. இத்தகைய பிரம்மாண்ட லாபத்தை ஈட்டிய நிலையிலும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தனக்காக சம்பளம், கொடுப்பனவு, பிற சலுகைகள், ஓய்வூதியப் பலன்கள், கமிஷன் அல்லது பங்கு விருப்பங்கள் எதையும் பெறவில்லை.

    6 ஆண்டுகளாக ஜீரோ சம்பளம்

    முகேஷ் அம்பானி 2020 ஜூன் மாதம் முதல் தனது சம்பளத்தையும் முழுவதுமாக ஏற்க மறுத்துவிட்டார். அப்போது கொரோனா பெருந்தொற்று இந்தியாவின் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் பெரிதும் பாதித்திருந்தது. அந்த நெருக்கடியான காலத்தில் நாட்டுக்கும், நிறுவனத்திற்கும் ஆதரவாக இந்த முடிவை அவர் எடுத்தார், இது இன்று வரையில் தொடர்கிறது.

    Advertisement

    அதற்கு முன்பே, 2009 நிதியாண்டு முதல் 12 ஆண்டுகளாக எவ்விதமான மாற்றமுமின்றி தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக முகேஷ் அம்பானி பெற்று வந்ததும் முக்கியமான விஷயம். நிறுவனத்தின் வருமானம் மற்றும் லாபம் எவ்வளவு அதிகரித்தாலும் அந்த 15 கோடி ரூபாய் வரம்பை முகேஷ் அம்பானி தாண்டவில்லை.

    முகேஷ் அம்பானி வாரிசுகள்

    முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி ரூ.12.17 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். முகேஷ் அம்பானியின் மற்ற இரு வாரிசுகளான ஈஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோர் பொது இயக்குநர்களாக உள்ளனர். அவர்கள் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் ஜியோ நிறுவனங்களிலிருந்து தனித்தனியே சம்பளம் பெற்றுள்ளனர்.

    Advertisement

    முகேஷ் அம்பானியின் இந்த முடிவு பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது. நிறுவனம் பெரிய லாபம் ஈட்டினாலும், தனிப்பட்ட ஆதாயத்தை விட நாட்டின் நலனை முன்னிறுத்தும் தலைமைத்துவத்தின் சிறந்த உதாரணமாக இது பார்க்கப்படுகிறது.

    1 டாலர் சம்பளம் டிரெண்ட்

    இந்த "டாலர்-க்கு-ஒரு-வருடம்" (Dollar-a-year) என்ற முறை அமெரிக்காவில் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1900-களின் முற்பகுதியில்) உருவானது. போர்க்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும், நிர்வாகத்தை வழிநடத்தவும் பெரிய தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகள் அரசாங்கத்திற்கு உதவ முன்வந்து 1 டாலர் சம்பளம் பெறும் முறையை அறிமுகம் செய்தனர்.

    Advertisement

    ஆனால், அமெரிக்க சட்டப்படி அரசு அதிகாரிகளாகப் பொறுப்பில் இருப்பவர்கள் இலவசமாக வேலை செய்ய முடியாது என்பதால், கட்டாயம் குறைந்தபட்ச சம்பளம் பெற வேண்டும். எனவே, இந்தச் சட்டத்தை நிறைவு செய்ய 1 டாலர் சம்பளமாக வழங்கப்பட்டது.

    நவீன யுகத்தில் அமெரிக்க கார் நிறுவனமான Chrysler-ன் தலைமை செயல் அதிகாரியான லீ ஐக்கோக்கா (Lee Iacocca) 1978-ம் ஆண்டு ஒரு டாலர் சம்பளத்தை பெற்று மீண்டும் இந்த டிரெண்டை கொண்டு வந்தார். அந்நிறுவனம் பெரும் நெருக்கடியில் இருந்தபோது, அதை காப்பாற்றும் நோக்கில் அவர் தனது சம்பளத்தை வெறும் ஒரு டாலராகக் குறைத்துக் கேட்டார்.

    Advertisement

    இந்த போக்கை பின்பற்றி, ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசன் உள்ளிட்டோர் 1 டாலர் முறையைப் பின்பற்றினர். ஆனால் டெக் நிறுவன தலைவர்கள் தங்களது சம்பளத்தை முழுமையாகத் தியாகம் செய்துவிட்டு, நிறுவனத்தின் பங்குகள் (Stock Options) மற்றும் நிறுவன வளர்ச்சியின் மூலம் லாபம் பெறும் முறையைத் தேர்வு செய்தனர்.

    தற்போது டெக் உலகில் எலான் மஸ்க் (Tesla), மார்க் ஜூக்கர்பர்க் (Meta) போன்ற பெரும் பணக்காரர்கள் இந்த 1 டாலர் சம்பள முறையைப் பின்பற்றுகிறார்கள்.

    IAS அதிகாரியாக உள்ள அமித் கட்டாரியா (Amit Kataria) போன்ற அதிகாரிகள், தாங்கள் நாட்டுக்குச் சேவை செய்யவே வந்துள்ளோம் என்பதை உணர்த்த 1 ரூபாய் சம்பளத்தை ஏற்றுக்கொண்டனர். முன்னாள் இந்தியப் பிரதமர் மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய் போன்றவர்கள் தங்களது அரசுப் பணிக்காக 1 ரூபாய் சம்பளத்தை மட்டும் வாங்கியுள்ளனர்.

    English Summary

    Reliance Industries Chairman Mukesh Ambani has not drawn even a single rupee as salary for the past six years, even as the company achieved its highest-ever profit of ₹95,754 crore in FY26. Following the footsteps of leaders like Steve Jobs and Lee Iacocca, Ambani voluntarily gave up his remuneration to support the company and the nation during challenging times.