தமிழ்நாட்டின் பொருளாதார செயல்பாடு சரியில்லையா? சரியும் ஜிஎஸ்டி வசூல்.. நிதித்துறை செயலாளர் விளக்கம்

  • சென்னை: தமிழகத்தின் ஜிஎஸ்டி (SGST) வசூல் தொடர்ந்து சில மாதங்களாகக் குறைந்து வருவது மாநிலத்தின் பொருளாதாரச் செயல்பாடு சரியில்லையோ என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள மாநில நிதித்துறை செயலாளர் சித்திக் ஐஏஎஸ், அதை மதிப்பிடுவதற்கு 'தீர்வுக்குப் பிந்தைய ஜிஎஸ்டி வருவாய்' அதாவது போஸ்ட் செட்டில்மெண்ட் ஜிஎஸ்டி வருவாய் தான் சரியான அளவுகோல் என்று விளக்கம் அளித்துள்ளார். 2027 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பர்) இந்த வருவாய் 16.1 சதவீதம் அதிகரித்து ₹44,266 கோடியாக உள்ளது என்றும், இது அண்மை காலங்களில் முதல் பாதியில் ஈட்டப்பட்ட அதிகபட்ச வருவாய் என்றும் சித்திக் கூறினார்.

    Advertisement

    அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும் நிதித்துறைச் செயலாளருமான எம்.ஏ. சித்திக் இதுபற்றி மேலும் கூறுகையில், "வரி வசூல் வளர்ச்சி என்பது பொருளாதாரச் செயல்பாட்டின் வளர்ச்சியை உணர்த்தும் ஒரு குறியீடு என்று தவறாகச் சித்தரிக்கப்படுகிறது. வரி விகிதங்கள் மற்றும் பண விகிதம் மாறாமல் இருந்தால் மட்டுமே வரி வசூல் என்பது வர்த்தகப் பரிமாற்றம் அல்லது பொருளாதாரச் செயல்பாட்டிற்கு விகிதாச்சாரப்படி அமையும். ஆனால், செப்டம்பர் 2025 மற்றும் 2026 ஆகிய காலங்களில், 'ஜிஎஸ்டி 2.0' காரணமாக வரி விகிதங்கள் மற்றும் பண விகிதங்கள் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்தன" என்றார்.

    Advertisement

    தீர்வுக்குப் பிந்தைய ஜிஎஸ்டி

    மத்திய அரசு தனக்குரிய ஐஜிஎஸ்டி (IGST) பங்கைச் சரிசெய்து வழங்கிய பிறகு, மாநிலத்திற்கு வருவாயாகக் கிடைக்கும் தொகையே 'தீர்வுக்குப் பிந்தைய ஜிஎஸ்டி' ஆகும். 'பண விகிதம்' என்பது வணிகங்களால் பணமாகச் செலுத்தப்படும் ஜிஎஸ்டி பொறுப்பின் பங்கைக் குறிக்கிறது. வரிப் பொறுப்பைச் செலுத்துவதற்கான மற்றொரு வழி, திரட்டப்பட்ட உள்ளீட்டு வரி வரவுகளை பயன்படுத்துவது ஆகும்.

    கடந்த சில மாதங்களில், தமிழகத்தின் மொத்த ஜிஎஸ்டி வசூல் (மாநில, மத்திய வரிகள் மற்றும் ஐஜிஎஸ்டி உள்ளடக்கியது) சற்று சரிவைக் கண்டாலும், தீர்வுக்குப் பிந்தைய ஜிஎஸ்டி வருவாய் ஆரோக்கியமான இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் மொத்த வசூல் 5 சதவீதம் குறைந்த நிலையில், தீர்வுக்குப் பிந்தைய ஜிஎஸ்டி வருவாய் 16 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

    Advertisement

    இந்த மாறுபட்ட போக்குக்கு, செப்டம்பர் 2025-ல் அமல்படுத்தப்பட்ட 'ஜிஎஸ்டி 2.0' முறையே காரணம் என்று நிதித்துறைச் செயலாளர் சித்திக் குறிப்பிட்டார்.

    அரசு ஊழியர்களின் சம்பளம் ₹1.22 லட்சமாக உயரலாம்.. 2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டர் கணிப்பு என்ன

    தமிழகத்தின் நுகர்வு முறை பெரும்பாலும் 'B2C' (வணிகத்திலிருந்து நுகர்வோருக்கு) சார்ந்தது. அதாவது உற்பத்தி துறை சார்ந்தது. 'ஜிஎஸ்டி 2.0' முறையின் கீழ், நீடித்து உழைக்கும் பொருட்களுக்கு மற்றும் வாகனங்கள் போன்ற பெரும்பாலான பொருட்களுக்கான வரி விகிதம் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகவும், பிற பொருட்களுக்கான வரி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. மேலும், சில துறைகளில், இன்புட் மீதான ஜிஎஸ்டி ( அதிகரித்த அதே வேளையில் அவுட்புட் மீதான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதால், திரட்டப்பட்ட வரிக் கடன் மூலம் அதிக அளவிலான ஜிஎஸ்டி செலுத்தப்படும் நிலை உருவானது என்று நிதித்துறைசெயலாளர் சித்திக் குறிப்பிட்டார்.

    Advertisement

    நிதித்துறையின் தரவுகளின்படி, ஆகஸ்ட் 2025-ல் மொத்த வரிப் பொறுப்பில் ரொக்கமாகச் செலுத்தப்பட்ட ஜிஎஸ்டியின் பங்கு 19.9 சதவீதமாக இருந்தது; இது ஆகஸ்ட் 2026-ல் 16.6 சதவீதமாக இருந்தது.

    உதாரணமாக, வாகனத் துறையில் வர்த்தக அளவு 16.3 சதவீதம் அதிகரித்திருந்தாலும், ரொக்கமாகச் செலுத்தப்பட்ட வரி 33 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன. அதேபோல, சிமெண்ட் துறையில், உள்ளீடாகப் பயன்படுத்தப்படும் நிலக்கரி மீதான செஸ் (cess) வரிக்கு மாற்றாக 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டாலும், சிமெண்ட் வெளியீடு மீதான வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதன் விளைவாக, மாநில ஜிஎஸ்டி (SGST) பொறுப்பு குறைந்து, உள்ளீட்டு வரி வரவு அதிகரித்தது.

    Advertisement

    பிற முக்கிய மாநிலங்களைப் பொறுத்தவரை, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் சேவைத் துறையின் பங்கு அதிகமாக இருப்பதால், அங்கு எஸ்ஜிஎஸ்டி (SGST) வசூல் வளர்ச்சியில் குறைவான தாக்கமே ஏற்பட்டுள்ளது என்றும், ஏனெனில், சேவைத் துறையில் 'ஜிஎஸ்டி 2.0' (GST 2.0) எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் நிதித்துறைச் செயலாளர் சித்திக் கூறினார்.

    வங்கி டெபாசிட், செல்வ மகள் சேமிப்பு, பொன்மகன் சேமிப்பு, பிஎப் சேமிப்பு உள்ளவர்களுக்கு குட்நியூஸ்

    வரிச் சரிசெய்தலுக்குப் பிந்தைய வருவாயே மாநிலத்தின் கருவூலத்திற்கு உண்மையில் வந்து சேரும் வருவாயை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோல் என்று நிதி நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே நவம்பர் 2026 வசூலுடன் தொடங்கும் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான புள்ளிவிவரங்கள் இது குறித்த தெளிவான பார்வையை நமக்கும் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அக்டோபரில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகள் - குறிப்பாக உள்ளீட்டு வரி வரவு தொடர்பானவை - மாநிலத்தின் வரி வசூல் மற்றும் வருவாயில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நிதித்துறைச் செயலாளர் சித்திக் தெரிவித்தார்.

    Advertisement

    சரி நிதித்துறை செயலாளர் சித்திக் ஐஏஎஸ் கூறிய தீர்வுக்கு பிந்தைய ஜிஎஸ்டி வரிவருவாய் தான் சரியான அளவுகோல் என்று கூறுகிறாரே.. அது உண்மையா என்று பொருளாதார நிபுணர்களிடம் கேட்டோம். அவர்கள் கூறிய பதில்களை பார்ப்போம்.

    இதுபற்றி அறிவதற்கு முன்பு ஐஜிஎஸ்டி தீர்வு என்றால் என்ன என்பதை பார்க்க வேண்டும். ஜிஎஸ்டி முறையில் மூன்று முக்கியமான பங்குகள் உள்ளன. இதில் சிஜிஎஸ்டி என்பது மத்திய அரசுக்கான பங்கு. எஸ்ஜிஎஸ்டி என்பது மாநில அரசுக்கான பங்கு. ஐஜிஎஸ்டி (Integrated GST) என்பது ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு பொருட்கள் அல்லது சேவைகள் விற்பனையாகும்போது (Inter-State Trade என ஆங்கிலத்தில் கூறுவார்கள் ) வசூலிக்கப்படும் வரியாகும்.

    ஐஜிஎஸ்டி தொகையானது நேரடியாக எந்த மாநிலத்திற்கும் போய் சேருவது இல்லை. பொருட்கள் இறுதியாக எந்த மாநிலத்தில் நுகரப்படுகின்றனவோ (Destination-based tax), அந்த மாநிலத்தின் கணக்கிற்கு ஐஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு சென்டில்மெண்ட் பிராசஸ் செய்து அனுப்பி வைவைத்துவிடும்.

    சரி ஏன் "தீர்வுக்கு முந்தைய வருவாய்" சரியான அளவுகோல் கிடையாது?

    "தீர்வுக்கு முந்தைய வருவாய்" சரியான அளவுகோல் என்று வைத்துவிட்டால் உற்பத்தி மாநிலங்களுக்கு ஆபத்து உள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் மையங்களாக உள்ளன. இங்கிருந்து பிற மாநிலங்களுக்குப் பொருட்கள் அனுப்பப்படும்போது ஆரம்பத்தில் ஐஜிஎஸ்டிமட்டுமே வசூலாகும். எனவே, தீர்வு செய்வதற்கு முன் பார்க்கும் கணக்கில் (Pre-Settlement), ஒரு மாநிலத்தின் உண்மையான வருவாய் முழுமையாகப் பிரதிபலிக்காது.

    இப்போது விஷயத்திற்கு வருவோம்.. ஏன் "தீர்வுக்குப் பிந்தைய வருவாய்" (Post-Settlement Revenue) சரியான அளவுகோல்?

    ஐஜிஎஸ்டி கணக்குகள் தீர்க்கப்பட்டு, மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கான உரிய பங்கு வந்து சேர்ந்த பிறகுதான், ஒரு மாநில அரசிடம் உண்மையில் எவ்வளவு வரிப் பணம் உள்ளது என்ற தெளிவான பதில் கிடைக்கும். ஜிஎஸ்டி என்பது "நுகர்வு சார்ந்த வரி" எனவே, இறுதி நுகர்வோர் இருக்கும் மாநிலத்திற்கு வரி சேர்வதுதான் ஜிஎஸ்டியின் அடிப்படை விதி. தீர்வு முடிந்த பிறகே இந்த வருவாய் முழுமையடைகிறது. பல்வேறு மாநிலங்களின் வருவாய் வளர்ச்சி மற்றும் நிதிப் பங்களிப்பை ஒப்பீடு செய்யும்போது, Post-Settlement SGST + IGST Settlement தொகையைக் கணக்கில் கொண்டால் மட்டுமே சரியான பொருளாதார வளர்ச்சியை மதிப்பிட முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறினார்கள்.

    English Summary

    The continuous decline in Tamil Nadu's GST (SGST) collections over the past few months has raised questions about whether the state's economic performance is faltering. Dismissing this concern, State Finance Secretary Siddique (IAS) explained that 'post-settlement GST revenue' is the correct metric for assessing the situation.