இன்றிரவு அமெரிக்கா எடுக்க போகும் முடிவு.. நாளை தங்கம் விலை கன்பார்ம் மாறும்.. என்ன செய்யலாம்?

  • வாஷிங்டன்: இன்றைய தினம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது ஜூலை மாத வட்டி விகிதக் கொள்கை முடிவை அறிவிக்க உள்ளது. வட்டி விகிதத்தை குறைக்க டிரம்ப் கடுமையான பிரஷர் கொடுத்தாலும் கூட வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது. இன்றிரவு வட்டி விகிதத்தில் அமெரிக்கா எடுக்க போகும் முடிவை பொறுத்தே தங்கத்தின் விலையும் மாறும் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

    Advertisement

    நமது ரிசர்வ் வங்கி எப்படி குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை கூட ரெப்போ வட்டி விகித முடிவுகளை எடுக்கிறதோ.. அதேபோல அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வும் வட்டி விகிதம் சார்ந்த முடிவுகளை எடுக்கும். இந்த ஜூலை மாதத்திற்கான கூட்டம் கடந்த இரு நாட்களாக நடந்த நிலையில், இன்றைய தினம் அது வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது.

    Advertisement

    அமெரிக்க பெடரல் வங்கி

    தற்போதைய சூழலில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றே பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் பெட் தலைவர் கெவின் வார்ஷ் கூறும் கருத்துகளும் முக்கியத்துவம் பெறும். அவரது அறிக்கையில் இடம்பெறும் வார்த்தைகளே உலக சந்தைகளையும், குறிப்பாக தங்கத்தின் விலையையும் தீர்மானிக்கும்! இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு அவர் செய்தியாளர்களை சந்திக்கவுள்ள நிலையில், அவர் சொல்லும் வார்த்தைகளை சர்வதேச மார்கெட் உற்று கவனிக்கும்.

    ஜூன் மாத அமெரிக்க பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு டேட்டா எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே இருந்தது. இதனால் இந்த கூட்டத்தில் வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்து வருவது, அமெரிக்கா விதிக்கும் புதிய இறக்குமதி வரிகள், செயற்கை நுண்ணறிவு முதலீடுகள் அதிகரிப்பு போன்றவை பணவீக்கத்தை மீண்டும் உயர்த்தக்கூடும் என்ற அச்சமும் உள்ளது.

    Advertisement

    என்ன நடக்கும்!

    இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர 62 சதவீத வாய்ப்பு இருக்கிறது. வட்டி விகிதத்தை உயர்த்த 38 சதவீதமாக மட்டுமே வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இதற்கு அடுத்து கூட்டம் நடக்கும் செப்டம்பர் மாதம் வட்டி விகிதம் உயர்த்தப்பட 81 சதவீதம் வரை வாய்ப்பு இருக்கிறது.

    இது ஒரு பக்கம் இருக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் வட்டி விகிதத்தை குறைக்க பிரஷர் போட்டு வருகிறார். ஆனால், டிரம்ப் சொல்வதை கேட்க வேண்டிய அவசியம் பெடரல் வங்கி ஆளுநருக்கு இல்லை என்பதால் அவர் பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தை பொறுத்தே முடிவெடுப்பார். என்ன தான் டிரம்ப் சொன்னாலும் வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பில்லை என்பதால் அதை விட்டுவிடுவோம். அதை தாண்டி இப்போது 3 ஆப்ஷன்கள் நமக்கு முன்பு இருக்கிறது. தங்கம் விலை இதை பொறுத்தே மாறுபடும்.

    Advertisement

    ஆப்ஷன் 1- பெரியளவில் சரியும்

    ஒருவேளை எதிர்பார்க்காத முடிவாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால்.. தங்கத்தின் விலை மிக பெரியளவில் சரியும். அதிக வட்டி விகிதம் காரணமாக அமெரிக்க டாலர் வலுப்பெறும். அமெரிக்க அரசு பத்திரங்களின் மதிப்பும் உயரும். இதனால் வட்டி வருமானம் தராத தங்கத்தில் இருந்து முதலீட்டாளர்கள் பணத்தை வெளியே எடுக்க வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறையலாம்.

    ஆப்ஷன் 3- லேசாக குறையும்

    அடுத்து வட்டி விகிதம் மாற்றமில்லை.. ஆனால் எதிர்காலத்தில் வட்டி உயர்த்த வேண்டிய நிலை வரலாம் என எச்சரிக்கை கொடுத்தால் அது தங்கத்தின் விலையில் கலவையான தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போதைக்கு வட்டி விகிதம் மாறாவிட்டாலும், பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் எதிர்காலத்தில் வட்டி உயர்த்தப்படும். இதனால் மார்கெட் எச்சரிக்கையுடன் இருக்கும். தங்கம் விலை இந்த சூழலிலும் குறையும். பெரியளவு இல்லை என்றாலும் கணிசமாக குறையும்!

    Advertisement

    ஆப்ஷன் 3- விலை எகிறும்

    அடுத்து வட்டி விகிதம் மாற்றமில்லை.. அதேநேரம் எதிர்காலத்தில் வட்டியை குறைக்கலாம் என்று பாசிட்டிவ் சிக்னல் கொடுப்பது! இது தங்கத்திற்கு சாதகமான சூழலாக பார்க்கப்படுகிறது. இதுபோல கருத்து வந்தால் டாலர் பலவீனமடையும். இதனால் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி முதலீட்டாளர்கள் அதிகம் செல்வார்கள். இதனால் சர்வதேச சந்தையில் தங்க விலை வேகமாக உயர வாய்ப்பு உள்ளது. இந்தியாவிலும் தங்கம் புதிய உச்சத்தை நோக்கி செல்லும்!

    எனவே, இந்த முறை பெட் வட்டி விகித முடிவை விட, அதன் அறிக்கையில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளே முக்கிய சிக்னலாக பார்க்கப்படும். இதுவே அடுத்த 1.5 மாதங்களுக்கு பங்குச்சந்தை, டாலர், தங்கம் ஆகியவற்றின் திசையை தீர்மானிக்கும்!

    English Summary

    US Federal Reserve will announce its July interest rate decision today(அமெரிக்க பெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி விகித முடிவு): US Fed Interest Rate and Gold impact latest news in tamil.