கண்ணை மூடிக்கொண்டு LIC திட்டத்தில் முதலீடு செய்யாதீங்க.. லைப் இன்சூரன்ஸ் விட இதில் பல மடங்கு லாபம்!

  • சென்னை: இந்தியாவில் பல ஆண்டுகளாக மக்கள் லைப் இன்சூரன்ஸ் திட்டங்கள், குறிப்பாக எண்டோவ்மென்ட் பாலிசிகள், பாதுகாப்பான முதலீடாக நடுத்தர குடும்பங்கள் பார்த்து வருகின்றனர்.

    Advertisement

    மாத சம்பளம் பெறும் குடும்பங்கள் சேமிப்பையும், காப்பீட்டையும் ஒரே திட்டத்தில் பெறலாம் என்ற நம்பிக்கையில் இத்தகைய பாலிசிகளில் முதலீடு செய்து வருகின்றன. ஆனால் இந்த காப்பீட்டு திட்டங்களின் உண்மையான வருமானம் பலருக்கும் அதிர்ச்சி அளிப்பது மட்டும் அல்லாமல் எளிதான மாற்று வழிகளில் பல மடங்கு அதிக லாபம் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

    Advertisement

    சமீபத்தில் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர் பகிர்ந்த தகவல் சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. அவரது தந்தை வாங்கியிருந்த ஒரு LIC எண்டோவ்மென்ட் பாலிசியின் கணக்குகளை ஆய்வு செய்தபோது, பல ஆண்டுகளாக மக்கள் "லாபம்" என்று நினைத்தது முதலீடு செய்த திட்டம், உண்மையில் குறைந்த வருமானம் மட்டுமே என்பதைக் கண்டறிந்ததாக அவர் கூறியுள்ளார்.

    20 ஆண்டு லைப் இன்சூரன்ஸ் திட்டம்

    அந்த தகவலின்படி, அவரது தந்தை வருடத்திற்கு ரூ.50,000 வீதம் 20 ஆண்டுகள் ஒரு காப்பீட்டு திட்டத்தில் பணம் செலுத்தியுள்ளார். மொத்தமாக ரூ.10 லட்சம் முதலீடு செய்யப்பட்ட நிலையில், காப்பீட்டு காலம் முடிவில் சுமார் ரூ.18 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளது.

    Advertisement

    மேலோட்டமாக பார்க்கும்போது ரூ.10 லட்சம் முதலீட்டிற்கு ரூ.18 லட்சம் கிடைத்ததால் நல்ல வருமானம் கிடைத்ததாக பலர் நினைக்கலாம். ஆனால் ஆண்டு அடிப்படையில் கணக்கிட்டால் இந்த முதலீட்டின் வருமான விகிதம் சுமார் 5.5 சதவீதம் மட்டுமே.

    இந்த 20 வருட காலகட்டத்தில் இந்தியாவின் சராசரி பணவீக்கம் சுமார் 6 சதவீதமார இருந்துள்ளது. அதாவது பணவீக்க பாதிப்பை கூட ஈடு செய்ய முடியாத நிலையில் தான் இந்த காப்பீடு கொடுத்துள்ளது. இதனால் உண்மையான மதிப்பில் பார்க்கும்போது முதலீட்டாளரின் செல்வ வளர்ச்சி மிகவும் குறைவு.

    இதேபோல் இந்த காப்பீட்டு திட்டத்தில் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீட்டு தொகை (life cover) உள்ளடங்கியது. அதாவது ஆயுள் காப்பீட்டுக்காக மட்டும் ரூ.10 லட்சம் பாதுகாப்பு கிடைத்தது.

    Advertisement

    ஒருப்பக்கம் லைப் இன்சூரன்ஸ் பாதுகாப்பு இருக்கே என்ற மனநிம்மதி இருந்தாலும், முதலீடு செய்த தொகைக்கு மிகவும் குறைந்த அளவிலான லாபம் மட்டுமே கிடைக்கிறது.

    மாற்று வழி - டேர்ம் இன்ஷூரன்ஸ் + இன்டெக்ஸ் ஃபண்ட்

    இதே ரூ.50,000 வருடாந்திர தொகையை இரண்டு பகுதியாகப் பிரித்து முதலீடு செய்யலாம்.

    வருடம் வெறும் ரூ.12,000 மட்டும் செலுத்தினால் ரூ.1 கோடி மதிப்பிலான ஆயுள் காப்பீட்டு தொகை (pure term insurance) வாங்க முடியும்.

    மீதிமுள்ள ரூ.38,000-ஐ Nifty 50 இன்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்தால், கடந்த 20 ஆண்டுகளில் சராசரியாக 11 சதவீத வருமானம் கிடைத்திருக்கும். இந்த முதலீட்டு காலம் முடிவில் ரூ.24 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். அதாவது அதே ரூ.50,000 வருடாந்திர தொகையில் ரூ.6 லட்சம் அதிக முதலீட்சு லாபம் மற்றும் 10 லட்சத்திற்கு பதிலாக 10 மடங்கு அதாவது 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பு கிடைத்திருக்கும்.

    Advertisement

    டேர்ம் இன்ஷூரன்ஸ்-ல் இருக்கும் ஒரே சிக்கல் காப்பீட்டு காலத்தில் மரணம் ஏற்பட்டால் மட்டுமே காப்பீட்டு தொகை கிடைக்கும். காப்பீடு காலம் முடிந்த பின்பு பாலிசிதாரர் உயருடன் இருந்தால் செலுத்தப்பட்ட தொகையும் கிடைக்காது, இன்சூரன்ஸ் பாதுகாப்பும் கிடைக்காது.

    சரியான கணக்கு போடாமல் செய்யும் தவறு

    தற்போது 26 கோடி இந்தியர்கள் endowment பாலிசிகளை வைத்துள்ளனர். பெரும்பாலானோர் இந்த எளிய கணக்கை செய்து பார்ப்பது கிடையாது. இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினரின் சேமிப்புகளில் பெரும் பகுதி குறைந்த வருமானம் தரும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு செல்கிறது. இது கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் செல்வ வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    இந்திய நடுத்தர வர்க்கம் தங்களது சேமிப்பை சரியான இடத்தில் முதலீடு செய்ய வேண்டிய நேரம் இது. LIC போன்ற பாரம்பரிய பாலிசிகள் உயிர் காப்பீட்டுக்கு மட்டும் போதுமானவை அல்ல. டேர்ம் இன்சூரன்ஸ் (term insurance) மற்றும் பங்குச் சந்தை இன்டெக்ஸ் ஃபண்ட் ஆகியவை இணைந்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும். இந்த எளிய உண்மையை அனைவரும் புரிந்துகொண்டால், இந்தியாவின் செல்வ வளர்ச்சி பெருமளவு மேம்படும்.

    Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Tamil.oneindia.com அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

    English Summary

    A real LIC endowment policy example reveals how investing ₹50,000 yearly for 20 years delivered just 5.5% returns — below inflation — with only ₹10 lakh life cover. Experts strongly recommend switching to low-cost term insurance for high protection combined with Nifty 50 index funds for significantly higher long-term wealth creation.