தேதி வராமலே.. பஞ்சாப் சட்டசபை தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த ஆம்ஆத்மி.. சிறையில் இருக்கும் அமைச்சருக்கு சான்ஸ்

  • சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் சிறையில் உள்ள அமைச்சர் சஞ்சீவ் ஆரோரா உள்பட 40 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல்வர் பகவந்த் மான், துரி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பஞ்சாப்பில் கடந்த 2022ல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம்ஆத்மி கட்சி முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. ஆம்ஆத்மி சார்பில் முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

    Advertisement

    இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.

    இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் ஆம்ஆத்மி கட்சி முன்கூட்டியே தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் 40 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இவர்கள் அனைவரும் சிட்டிங் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆவார்கள்.

    இதில் முதல்வர் பகவந்த் மான் துரி தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த முறை இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தல்வீர் சிங் கோல்டி என்பவரை 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பகவந்த் மான் வீழ்த்திய நிலையில் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல் தற்போது சிறையில் இருக்கும் அமைச்சர் சஞ்சீவ் அரோரா லுதியானா மேற்கு தொகுதியில் மீண்டும் களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பஞ்சாப்பில் மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தற்போது 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 77 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது. இந்த வேட்பாளர்களின் பெயர் விவரங்கள் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது.

    ஆம்ஆத்மி கட்சியை எடுத்து கொண்டால் டெல்லியில் பாஜகவிடம் ஆட்சியை இழந்தது. பஞ்சாப்பில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. இதனால் எப்படியாவது மீண்டும் வென்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதில் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் உள்ளிட்டோர் உறுதியாக உள்ளனர்.

    இதனால் முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்தால் அவர்களால் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து வெற்றி பெறலாம் என்று ஆம்ஆத்மி மேலிடம் நம்புகிறது. இதனால் தான் தேர்தலுக்கு 4 மாதங்களுக்கு முன்பே ஆம்ஆத்மி கட்சி 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    The Punjab Legislative Assembly elections are set to take place early next year. In preparation, the party has released its first list of candidates, granting the opportunity to contest again to 37 incumbent MLAs-including Minister Sanjeev Arora, who is currently in prison. Chief Minister Bhagwant Mann will contest from the Dhuri constituency.