ரூ.7-க்கு வாங்கிய லாட்டரி சீட்டு.. மறுநாளே கோடீஸ்வரி ஆன பஞ்சாப் பெண்.. பாங்க்ரா டான்ஸ் ஆடிய கடை ஓனர்

  • சண்டிகர்: வெறும் ரூ.7 கொடுத்து வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் லாட்டரி வாங்கிய அடுத்த நாளே இந்த அதிர்ஷ்டம் அடித்தால் சொல்லவே வேண்டாம்.. அப்படியொரு இன்ப அதிர்ச்சியதான், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கிடைத்துள்ளது.. இதை பற்றிதான் சோஷியல் மீடியா முழுக்க பேச்சாக உள்ளது.. என்ன நடந்தது?

    Advertisement

    பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் மாவட்டத்தில் உள்ள கோட்கபுரா பகுதியை சேர்ந்தவர் பிம்லா தேவி. இவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார்... இதனால் குடும்பத்தின் அன்றாட செலவுகளை சமாளிப்பதே இவர்களுக்கு பெரும்பாடாகும்.. அத்துடன் குழந்தைகளின் எதிர்காலத்தையும் நினைத்து கவலையுடன் இந்த தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர்..

    Advertisement

    அடுத்த நாளே வந்த இன்ப அதிர்ச்சி

    சமீபத்தில் பிம்லா தேவி குழந்தைகளுக்கு துணிமணிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது ரயில்வே ஸ்டேஷன் அருகிலிருந்த லாட்டரி கடையில் வெறும் ரூ.7 கொடுத்து ஒரு லாட்டரி சீட்டை வாங்கியிருக்கிறார். அந்த சீட்டை வாங்கியபோது, அடுத்த நாளே ரூ.1 கோடி பரிசு பிம்லா தேவிக்கு விழுந்து விட்டது.. சிக்கிம் அரசு லாட்டரியில் அவருக்கு இந்த பரிசு கிடைத்திருக்கிறது.

    பாங்க்ரா டான்ஸ் ஆடிய ஓனர்

    லாட்டரி கடை உரிமையாளர் நரேஷ் மோங்கா, பிம்லா தேவியின் குடும்பத்துக்கு இந்த தகவலை போன் மூலம் தெரிவித்துள்ளார்... இதை கேட்டதுமே பிம்லா தேவியின் குடும்பத்தினர் திக்குமுக்காடிப் போய்விட்டார்களாம்.. உடனே குடும்பத்தினர் அனைவரும் கிளம்பி லாட்டரி கடைக்கு சென்றிருக்கிறார்கள்.. அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற கடை உரிமையாளர் நரேஷ் மோங்கா, இனிப்புகள் வழங்கி வாழ்த்து சொல்லியிருக்கிறார்.. பிறகு உற்சாகத்தில் பாங்க்ரா நடனமும் ஆடினாராம்.

    Advertisement

    நரேஷ் மோங்கா கடந்த 6 மாதங்களாக லாட்டரி விற்பனை செய்து வருகிறார். அவரது கடையில் இதற்கு முன்பு லட்சக்கணக்கில் பரிசுகள் கிடைத்திருந்தாலும், ரூ.1 கோடி பரிசு கிடைப்பது இதுவே முதல் முறை.

    ரூ.5 கோடியாமே.. திருமணநாள் பரிசாக மனைவிக்கு லாட்டரி வாங்கி கொடுத்த கணவர்.. அடித்த ஜாக்பாட்

    பிம்லா தேவி குஷி

    இதுவரை கூலி வேலை மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், இந்த பரிசுத்தொகை பிம்லா தேவிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

    இந்த1 கோடி ரூபாயை வைத்து என்ன செய்ய போகிறீர்கள் என்று பிம்லா தேவியை கேட்டால், "பரிசுப் பணத்தை வைத்து சிறிய தொழில் தொடங்கலாம் என்று யோசிக்கிறோம்.. இருந்தாலும், பணத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. குடும்பத்தினர் அனைவரும் கலந்து பேசி முடிவு செய்ய போகிறோம்..

    Advertisement

    எப்படியும் என் மகனுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்ய போகிறேன்.. என் குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்த போகிறேன்.. குழந்தைகளின் எதிர்காலத்தையும் சிறப்பாக அமைக்க போகிறேன்" என்று குஷியாக சொல்கிறார். வெறும் ரூ.7 கொடுத்து வாங்கிய லாட்டரி சீட்டு, ஒரே நாளில் ரூ.1 கோடி பரிசை பெற்றுத் தந்திருப்பது, அம்மாநில மக்களின் கவனத்தை பெற்று வருகிறது..!!

    English Summary

    Punjab Woman Wins Rs 1 Crore Lottery With Rs 7 Ticket, Shop Owner Breaks Into Bhangra Dance