தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்?

  • சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் இன்றைய தினம் யார் யார் இணைய போகிறார்கள் என்பதை பார்க்கலாம். 5 அதிமுக முன்னாள் அமைச்சர்கள், 7 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட 10 பேர் தவெகவில் இணைந்தார்கள். அந்த வகையில் இதுவரை தேர்தலுக்கு பிறகு தவெகவில் இணைந்த அதிமுகவினர் யார் யார் என்பதை பார்க்கலாம்.

    Advertisement

    தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக வென்று ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வர முடியாமல் சென்றுவிட்டது.

    Advertisement

    மேலும் தோல்விக்கு காரணம் என்ன என்பதை எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதிமுக இரண்டாக பிரிந்தது.

    அதாவது எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணியாகவும் எடப்பாடி தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர்.

    எஸ்பி வேலுமணிக்கு 25 எம்எல்ஏக்களும் எடப்பாடி தரப்புக்கு 22 எம்எல்ஏக்களும் இருந்தனர். இதனால் வேலுமணி தரப்பு தாங்கள்தான் உண்மையான அதிமுக என்பதால் எங்களைத்தான் கொறடாவாக நியமிக்க வேண்டும் என இரு தரப்பும் மாறி மாறி கடிதம் கொடுத்து வந்தன.

    தமிழக சட்டசபை தேர்தலில் நடந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வேலுமணி தரப்பு, தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது. தவெக ஆட்சியின் அமைச்சரவை விரிவாக்கத்தில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆசையால் அவர்கள் ஆதரித்ததாக எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே குற்றம்சாட்டியிருந்தார்.

    Advertisement

    ஆனால் அமைச்சரவையில் அதிமுக இடம் பெறவில்லை. இதையடுத்து என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை, எஸ்பி வேலுமணி எடப்பாடி பழனிசாமி பக்கம் தனது ஆதரவாளர்கள் அனைவரையும் அழைத்து சென்று அண்ணன்டா - தம்பிடா என பாசமழையை பொழிந்தனர். ஆனால் சி.வி.சண்முகமும், சி.விஜயபாஸ்கரும் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில்தான் அதிமுகவின் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

    இதைத் தொடர்ந்து வாரிய பதவிகளை குறி வைத்து நிறைய பேர் அதிமுகவிலிருந்து விலகி தவெகவுக்கு வருவார்கள் என சொல்லப்பட்டது. அந்த வகையில் வெல்லமண்டி நடராஜன், ராமலிங்கம், திருச்சி தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.

    Advertisement

    இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர். அதாவது பனையூர் தவெக அலுவலகத்திற்கு அவர்கள் வருகை தந்துள்ளனர். அவர்களை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்டார்.

    அந்த வகையில் இதுவரை அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

    வெல்லமண்டி நடராஜன்
    ராமலிங்கம்
    மரகதம் குமரவேல்
    பெருந்துறை ஜெயக்குமார்
    சத்தியபாமா
    இசக்கி சுப்பையா

    உள்ளிட்டோராவர்.

    அது போல் இன்றைய போகிறவர்களில் 4 முன்னாள் அமைச்சர்கள், 6 முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்கள் யார் எந்பதை பார்க்கலாம்.

    மாஜி அமைச்சர்கள்

    கடம்பூர் ராஜூ
    உடுமலை ராதாகிருஷ்ணன்
    எம்.சி.சம்பத்
    எம்எஸ்என் ஆனந்தன்

    Advertisement

    சிவபதி

    முன்னாள் எம்எல்ஏக்கள்

    பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி
    சங்ககிரி சுந்தரராஜ்
    வீரபாண்டி ராஜமுத்து
    ஸ்ரீவில்லிப்புத்தூர் மான்ராஜ்
    சாத்தூர் ராஜவர்மன்
    கலசப்பாக்கம் பன்னீர் செல்வம்

    ஆற்காடு வி.கே.ஆர். சீனிவாசன்

    அதிமுக நிர்வாகி

    மேற்கண்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களுடன் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியும் வந்திருக்கிறார். அவரும் தவெகவில் இணைந்தார். அவர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து பின்னர் தேர்தலுக்கு முன்பு எடப்பாடி அணியில் இணைந்தார். தற்போது தவெக அலுவலகத்தில் உள்ளார்.

    English Summary

    Tamilaga Vettri Kazhagam (TVK) is set to induct 10 prominent leaders today, including four former AIADMK ministers and six former MLAs. The high-profile defections are expected to strengthen TVK’s political presence in Tamil Nadu and mark a significant development in the state's evolving political landscape