ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு! சிபிசிஐடிக்கு புதிய டிஜிபி நியமனம்

  • சென்னை: தமிழ்நாட்டில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் பிறப்பித்துள்ளார். சிபிசிஐடி டிஜிபியாக பாலநாகதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சைபர் கிரைம் ஏடிஜிபியாக அபின் தினேஷ் மோடக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    தமிழக காவல்துறையில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் எஸ்பிக்கள் மாற்றப்பட்டு இருந்தனர். அவ்வப்போது காவல் உயர் அதிகாரிகல் பிரிவில் இடமாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வந்தது.

    Advertisement

    ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

    இந்த நிலையில், இன்று ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, வித்யா ஜெயந்த் குல்கர்னி பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி டிஜிபியாக பாலநாகதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உளவுப்பிரிவு துணை ஆணையர் ராமமூர்த்தி கியூ பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக அர்பிதா ராஜ்புத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கமோண்டா எஸ்பியாக ஈஸ்வரன், தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக சரவணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சைபர் கிரைம் ஏடிஜிபியாக அபின் தினேஷ் மோடக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகர துணை ஆணையராக ரமேஷ் பாபுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    சிபிசிஐடி டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    1. பாலநாகதேவி:

    சைபர் கிரைம் டிஜிபியாக இருந்த இவர், சிபிசிஐடி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

    2. அபின் தினேஷ் மோடக்:

    சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக இருந்த இவர், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்படுகிறார்.

    3. வித்யா ஜெயந்த் குல்கர்னி:

    கூடுதல் டிஜிபியான இவர் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வரும் நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    4. ராமமூர்த்தி:

    சென்னை உளவுப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றும் இவர், மாநில கியூ பிரிவு சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் அர்பிதா ராஜ்புட்

    5. அர்பிதா ராஜ்புட்:

    சிபிசிஐடி வடக்கு மண்டல சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    6. அரவிந்த்:

    மாநில கியூ பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றும் இவர், மாநில உளவுப்பிரிவு சூப்பிரண்டாக நியமனம் செய்யப்படுகிறார்.

    7. ஈஸ்வரன்:

    சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக இருந்து வரும் ஈஸ்வரன் சென்னை கமாண்டோ படை சூப்பிரண்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    8. செந்தில்குமார்:

    சென்னை ஆவடி கமிஷனரகத்தில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக இருந்து வரும் செந்தில் குமார், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் நாகப்பட்டினம் பிரிவு சூப்பிரண்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    9. ரமேஷ்பாபு:

    சென்னை பயங்கரவாத தடுப்புப்பிரிவில் உள்ள ரமேஷ் பாபு நெல்லை துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    10. சரவணகுமார்:

    சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு வடக்கு சரக சூப்பிரண்டாக பணியாற்றும் சரவணகுமார், சென்னை பயங்கரவாத தடுப்புப்பிரிவு சூப்பிரண்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    10 IPS officers have been transferred in Tamil Nadu. The Home Secretary has issued the order for this. Bala Nagadevi has been appointed as the DGP of the CBCID.