முதல்வர் விஜய்யின் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் 11 பேருக்கு வாந்தி மயக்கம்! ஈசிஆரில் பரபரப்பு

  • சென்னை: தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் 11 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி கிடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    தமிழக முதலமைச்சர் விஜய் சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார். அவர் அலுவல் பணிகளுக்குச் செல்லும் வழியில் ஈசிஆர் சாலையில், காவலர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், அப்பகுதியில் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    சென்னை ஈசிஆர் சாலையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 11 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பட்டாலியன் கம்பெனி உணவகத்திலிருந்து வந்த சிக்கன் பிரியாணியை சாப்பிட்ட பிறகு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

    அவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி கிடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அந்த உணவைச் சாப்பிட்ட காவலர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருவான்மியூர் மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் அனைவரும் உடல் நலத்துடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    English Summary

    An incident in which 11 police personnel assigned to the security detail of Tamil Nadu Chief Minister Joseph Vijay suffered from vomiting and dizziness has caused a stir. Preliminary reports indicate that a lizard was found in the food they had consumed.