சென்னை: தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ரிசல்ட் இன்று காலை 8 மணிக்கு வெளியாகப் போகிறது.. இன்னும் சில மணி நேரங்களில் முடிவு தெரிந்துவிடும் நிலையில், இந்த ரிசல்ட் திமுக, அதிமுகவுக்கு மட்டுமல்ல.. விஜயின் தவெகவுக்கும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த ரிசல்ட் மூலம் 2026 அரசியலுக்கான சில முக்கியமான கணக்குகளை புரிந்துகொள்ள முடியும் என்று ஷ்யாம் பேசியுள்ளார்..
ஷ்யாம் பேசியதாவது, "விஜய்யின் கவர்ச்சி குறைந்து வருகிறது.. கடந்த தேர்தலைவிட கிடையாது.. இப்போது உழைத்தாகணும்.. கட்சியின் கட்டமைப்பை நன்றாக வைத்திருக்க வேண்டும்.. இது இருந்தால் மட்டுமே வெற்றியெல்லாம் சாத்தியம்.
சென்னையிலிருந்து தனி விமானத்தை பிடித்து, பிரைவேட் ஜெட்டில் கோவையில் இறங்கி, அங்கிருந்து ஹெலிகாப்டர், அங்கிருந்து மாட்டுவண்டியில் ஏறி ஓட்டு கேட்டார்.. இப்போதுதான் அரசியலின் கஷ்டத்தை அவர் உணர ஆரம்பித்துள்ளார்.. 2 நாளில் பிரச்சாரம் செய்தால், ஓட்டுக்கள் குவிந்து விடும் என்று நினைத்தால் போல.. 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வரவேண்டும் என்றும் மனக்கணக்கு போட்டுள்ளார். ஆனால், மும்முனை போட்டி என்றாலும். சில ஆயிரக்கணக்கில்தான் வித்தியாசம் வரலாம்.. காரணம் கட்டமைப்பே தவெகவுக்கு இல்லை.. இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழல் இருக்கலாம். பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்கு ஒரு வாய்ப்பு இருக்கும். குறிப்பாக தாராபுரத்தை எடுத்துக்கொண்டால், அங்கு அதிமுகவுக்கு வாய்ப்பு இருப்பதாக நம்முடைய நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், ஆளுங்கட்சி 2 தொகுதிகளிலும் தோற்க வேண்டும். அப்போதுதான் சட்டசபையில் ஒரு சமநிலை இருக்கும் என்று நினைக்கிறேன். இவர்களுக்கும் அரசியல் என்றால் என்ன என்பது புரியும்.. ஏற்கெனவே தேவையான எண்ணிக்கை இருக்கும்போது, இன்னும் செயற்கையாக மெஜாரிட்டியை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? ஏற்கெனவே உங்களிடம் 108 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.. கூட்டணி கட்சிகளும் உங்களுக்கு வசதியாக ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது எதற்காக 118 அல்லது 120 என்று செயற்கையாக பெரும்பான்மையை உருவாக்க வேண்டும்? எதுக்காக மற்ற கட்சிகளில் இருந்து ஆட்களை இழுத்து வந்து, அவர்களை ராஜினாமா செய்ய வைத்து, மறுபடியும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்? அதெல்லாம் யாருடைய பணம்.. மக்களுடைய பணம்தானே.. 5 வருடம் ஆட்சியை நல்லபடியாக நடத்திவிட்டு, அடுத்த தேர்தலில் மக்களிடம் ஓட்டு கேட்கலாமே.. கூட்டணி ஆட்சி என்றால் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கும்.. அந்த கருத்துகளையும் கேட்டு ஆட்சி நடத்துவதுதான் ஜனநாயகம்.. அதுதான் சட்டசபையில் ஒரு சமநிலையையும் உருவாக்கும்.. இந்த 2 தொகுதிகளில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதைவிட, எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கிறார்கள் என்பதும் முக்கியம். குறிப்பாக தவெக வெற்றி பெற்றாலும் 500, 1,000 அல்லது 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டும் வெற்றி பெற்றால், அதை வைத்து மிகப்பெரிய அரசியல் வெற்றி என்று சொல்ல முடியுமா? உடனே மற்ற கட்சிகள் பெற்ற வாக்குகளை எல்லாம் கணக்குப் போட ஆரம்பிப்பார்கள். அதே நேரத்தில், தவெக ஒரு தொகுதியில் தோற்றுவிட்டால் அதனால் விஜய்யின் அரசியல் முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. இது அவர்களுக்கு ஒரு தேர்தல் அனுபவம்.. ஆனால் 2026-க்கு முன்னால் இந்த ரிசல்ட் சில முக்கியமான விஷயங்களை புரிய வைக்கும். விஜய்யின் இயல்பான வாக்கு வங்கி எவ்வளவு என்பதுதான் அதில் முக்கியமானது. தவெக பெற்ற வாக்குகளில் எவ்வளவு விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கால் வந்தது? எவ்வளவு திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இருந்து வந்த வேட்பாளர்களின் உள்ளூர் செல்வாக்கால் வந்தது? இதை பிரித்துப் பார்க்க வேண்டும். 234 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்களில் நிறைய பேர் ஏற்கெனவே வேறு கட்சிகளில் அரசியல் செய்தவர்கள். அவர்களுக்கு அந்தந்த தொகுதியில் ஏற்கெனவே ஆட்கள், தொடர்புகள், வாக்கு அடிப்படை இருக்கிறது. அதனால் அவர்கள் கொண்டு வந்த வாக்குகளும் தவெகவின் மொத்த வாக்கில் சேர்ந்திருக்கலாம். அதனால் இன்று வெளியாகும் 2 தொகுதி ரிசல்ட், வெற்றி அல்லது தோல்வி என்ற ஒரு வார்த்தையில் முடிந்துவிடப் போவதில்லை.. தவெக எவ்வளவு வாக்கு வாங்குகிறது, மற்ற கட்சிகளுடன் வாக்கு வித்தியாசம் எவ்வளவு, குறிப்பாக விஜயின் கட்சியின் வாக்கு அடிப்படை எந்த அளவில் இருக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.தவெக கட்டமைப்பு முக்கியம்
செயற்கையான மெஜாரிட்டி
ரிசல்ட் சொல்லும் விஷயம்
வாக்கு வங்கி எவ்வளவு