சூப்பர் எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கும்.. ஏற்பாட்டு திட்டம் என்ன? வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அப்டேட்

  • சென்னை: இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள சூப்பர் எல் நினோ நிகழ்வினால் நாடு முழுவதும் குறுவை பருவத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இதில் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் வினோத் கூறினார்.

    Advertisement

    தமிழ சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:-

    Advertisement

    பெரும் தாக்கம் ஏற்படும்

    வேளான் துறை பாதிக்கப்படாமல் வேறு எந்த துறையும் சரியான பாதையில் செல்லாது. விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் வேளாண் பட்ஜெட் இருக்கும். விவசாயிகளை வாழ வைப்பது மழை தரும் வானமாக இருந்தாலும் சில நேரங்களில் அவர்களை வருத்துவதும் வானம் ஆகத்தான் உள்ளது. இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள சூப்பர் எல் நினோ நிகழ்வினால் நாடு முழுவதும் குறுவை பருவத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதில் 12 மாவட்டங்களில் அதிக தாக்கம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அனைத்து மாவட்டங்களுக்கும் தயாரிக்கப்பட்டுள்ள மாவட்ட வேளாண்மை இடை ஏற்பாட்டு திட்டம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டு அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.

    Advertisement

    12 மாவட்டங்கள் என்னென்ன

    அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் ஆகிய 12 மாவட்டஙகள்தான் எல் நினோ தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுமென்று முன்னதாக மத்திய அரசு கணித்து இருந்தது.

    உருவாகிய சூப்பர் எல்நினோ

    பசிபிக் பெருங்கடலில் நிலவும் எல் நினோ நிகழ்வு சூப்பர் எல் நினோவாக வலுப்பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சூப்பர் எல் நினோ உருவாவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. சூப்பர் எல் நினோ வரும் நவம்பர் மாதத்தில் வரலாற்று இல்லாத அளவுக்கு 3.5 டிகிரி செல்சியஸ்க்கு மேல் தீவிரமடைய கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் பல காலநிலை மாற்றங்கள் உருவாகலாம் என சொல்லப்படுகிறது. அதீத வெள்ளம், அதீத வறட்சி என இயற்கை பேரிடர்கள் அதிகரிக்க கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

    English Summary

    El Nino; Agriculture Minister Vinoth stated in the Tamil Nadu Legislative Assembly that the Super El Nino phenomenon occurring this year is expected to have a significant impact on the Kuruvai (short-term) cultivation season across the country, with 12 districts in the state projected to face the brunt of this impact.