மின் வெட்டை தடுக்க களமிறங்கும் 10 சிறப்பு குழுக்கள்.. பறக்கும் 125 மின் தடை நீக்க ரோந்து வாகனங்கள்!

  • சென்னை: சென்னை முழுவதும் ஏற்படும் மின் தடையை கண்காணித்து மின் விநியோக சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 சிறப்பு குழுக்களை அமைத்தது தமிழ்நாடு அரசு. மின் தடங்கல்களை
    உடனடியாக சீர் செய்யும் வகையில் 125 சிறப்பு மின்தடை பழுது சரிசெய்யும் ரோந்து வாகனங்களும் இயங்கத் தொடங்கியுள்ளன.

    Advertisement

    பெரிய அளவிலான பழுதுகள் குறித்த தகவல்களை பெறுதல், மின்னகம் மற்றும் புகார் மையங்களில் பெறப்படும் புகார்களை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை 10 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் மேற்கொள்ள உள்ளன.

    Advertisement

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் மின் தடங்கல்களை உடனடியாக சீர் செய்யும் வகையில் 125 சிறப்பு மின்தடை பழுது சரிசெய்யும் ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை இன்று தொடங்கி வைத்துள்ளார் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்.

    இந்த 125 ரோந்து வாகனங்களில் பழுதுகளை சரிசெய்ய தேவையான உபகரணங்கள் மற்றும் ரோந்து பணியில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், மின் தடங்கல்களை உடனடியாக சீர் செய்யும் வகையில் 10 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு நேரத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இரவு நேரங்களில் கடுமையாக மின் வெட்டு இருந்து வருகிறது. பெரம்பூர், முகப்பேர், கொளத்தூர், தியாகராய நகர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் தொடர் மின்தடையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் மின் வெட்டு தொடர்பாக மின் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்போது உரிய பதில் அளிக்காத நிலை நீடித்து வருகிறது.

    Advertisement

    இந்நிலையில் இன்று சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான அளவில் ஏற்படும் பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் ஏற்படும் மின் தடங்கல்களை உடனடியாக சீர் செய்யும் வகையில் 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின்தடை நீக்க ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை துவக்கி வைத்தார்.

    அப்போது கூடுதல் தலைமை செயலாளர், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், எரிசக்தி துறை முதன்மை செயலாளர், அனில் மேஷ்ராம், மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குனர் ம. கோவிந்த ராவ், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் பி. என். ஸ்ரீதர் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    English Summary

    Tamil Nadu government has constituted 10 special teams to monitor power outages across Chennai and coordinate restoration efforts. Additionally, 125 special patrol vehicles have been deployed to promptly rectify power supply disruptions.