13 வயது பெண்ணின் காதல் மோகம்.. ஐபோன் ஆசை.. தாத்தாவை கொன்ற மாஸ்டர் பிளான்.. லைவாக ரசித்த பேத்தி

  • சென்னை: கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியில் நடந்துள்ள ஒரு பயங்கரச் சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கிப் பார்த்துள்ளது. தன் ஆசைகளுக்காக, ஆசையாக வளர்த்து ஆளாக்கிய தாத்தாவையே கொடூரமாக கொலை செய்துள்ளார் 13 வயது சிறுமி.. இந்த சிறுமிக்கு ஒரு காதலனும் உண்டு.. இந்த காதலில் விழுந்த சிறுமி, எப்படியெல்லாம் மாஸ்டர் பிளானை போட்டு, இந்த கொலையை செய்துள்ளார் என்பதையறிந்து போலீசாரே திகைத்து விட்டார்கள்..!!

    Advertisement

    கொல்லம் பரவூரைச் சேர்ந்தவர் சிவன்குட்டி.. இவருக்கு 65 வயதாகிறது.. குடும்பத்தினருடன் ஆலப்புழா மாவட்டம் கருவாற்றாவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மகளுக்காக புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார்.. இந்த புதிய வீட்டிற்காக குடும்பத்துடன் அங்கு தங்கியிருந்தார் சிவன்குட்டி.

    Advertisement

    13 வயது சிறுமியின் காதல்

    மகளுக்கு 13 வயதில் பெண் குழந்தை இருக்கிறாள்.. இந்த சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.. 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள சிறுவனுடன் காதலில் விழுந்துள்ளார்.. அந்த காதலனுடன் பேசுவதற்கு ஐபோன் வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.. அதுமட்டுமல்லாமல், காதலனுக்கு ஒரு ஸ்டைலான பைக் வாங்கித்தர வேண்டும் என்றும் நினைத்துள்ளார்.

    ஆனால் இதற்கெல்லாம் பணம் தேவைப்படுவதால், என்ன செய்வதென்று விழித்துள்ளார் சிறுமி.. இறுதியில் தாத்தா வீட்டிலிருந்த 6 பவுன் தங்க நகைகளை திருடுவது என்று முடிவு செய்துள்ளார்.

    Advertisement

    இந்த நேரம் பார்த்து, சிறுமியின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அதேசமயம், பாட்டிக்கும் உடல்நலம் சரியில்லாமல் போகவும், அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. இதனால் தாத்தா சிவன்குட்டி மட்டும் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    உடனே காதலனுக்கு போனை போட்ட சிறுமி, தன்னுடைய அம்மாவின் வீட்டில் வந்து நகையை திருடி செல்லுமாறு கூறியிருக்கிறார். அம்மா வீட்டில் பீரோ எங்கு உள்ளது? பீரோவில் எங்கே நகை வைக்கப்பட்டுள்ளது என்பதையெல்லாம் காதலனுக்கு வீடியோ கால் மூலம் துல்லியமாக விளக்கியுள்ளார்.

    எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் ஓட்டை

    உடனே காதலனும், தன்னுடைய நண்பர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.. திட்டமிட்டபடி சிறுமி, காதலன் மற்றும் நண்பர்கள் அனைவரும் கடந்த சனிக்கிழமை இரவு மாவேலி எக்ஸ்பிரஸ் மூலம் பரவூரிலிருந்து ஹரிப்பாடு வந்துசேர்ந்துள்ளனர்..

    Advertisement

    ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஆட்டோவில் சிவன்குட்டியின் வீட்டிற்கு காதலனும் நண்பர்களும் நுழைந்துள்ளனர்.. அனைவருமே கையில் கிளவுஸ் அணிந்துகொண்டு வீட்டின் பின்புறமிருந்த, எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் ஓட்டையின் வழியாக உள்ளே நுழைந்துள்ளனர்.

    ஓவர் ஆக்டிங்கில் சிக்கிய சிறுமி

    தூங்கி கொண்டிருந்த தாத்தா சிவன்குட்டியின் வாயில் துணியைத் திணித்து, கைகால்களை கட்டி, கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.. இதில் மூச்சு திணறி திணறியே தாத்தா இறந்து விட்டார்.. இப்படி தாத்தா துடிதுடித்து இறந்து போவதை தன்னுடைய செல்போன் வீடியோ கால் மூலமாக நேரடியாக பார்த்து ரசித்துள்ளார் அந்தப் பேத்தி!

    கொலையை முடித்துவிட்டு, பீரோவிலிருந்த 6 பவுன் நகைகளை கொள்ளையடித்ததுடன், 2 நாட்கள் கழித்து, தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார் சிறுமி.. தாத்தாவைக் காணவில்லை என்று அக்கம் பக்கத்தினரிடம் அழுது புலம்பியிருக்கிறார்.. இந்த ஓவர் ஆக்டிங்தான், போலீசாரின் தீவிர விசாரணையில் சுக்குநூறாக உடைந்தது.

    Advertisement

    மொத்த பேரும் சிறுவர்கள்தான்

    செல்போன் டவர் சிக்னல்கள் மற்றும் செல்போன் பதிவுகளை வைத்துப் பார்த்த போலீசார் ஆடிப்போய்விட்டார்கள்.. கொள்ளையடித்த நகைகளில் ஒரு பகுதியை விற்று, ஜாலியாக ஆட்டம் போட்டிருக்கிறார்கள் சிறுமியும், காதலனும்.. இப்போது மொத்த பேருமே கைதாகி உள்ளனர்.. சிறுமியின் காதலனும் சிறுவன்தான்.. சிறுவனுக்கு உதவிக்கு வந்த நண்பர்களும் சிறுவர்கள்தான்.. அனைவருமே கைது செய்யப்பட்டுச் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    பெற்றோரின் கவனமின்மையும், முறையற்ற தொழில்நுட்ப மோகமும் இளம் தலைமுறையை எப்படிப்பட்ட கொடூரமான பாதையில் கொண்டு சென்றுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது....!!

    English Summary

    13 year old Girl’s Love Obsession.. Unthinkable Desire for an iPhone Led to Grandfather’s Murder, Watched Live on Video Call