15 பேர் தவெகவுக்கு வர்றாங்களாமே.. திமுகவினர் அதிமுகவுக்கு ஓட்டு போடுகிறார்களா? தகிக்குது தாராபுரம்

  • சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் பிரச்சாரத்திற்கு வருவதால் எந்த மாற்றமும் தாராபுரத்தில் இருக்க போவதில்லை.. தொகுதிக்குள் நிறைய பணப்புழக்கமும் இருப்பதாகச் சொல்கிறார்கள். எப்படி பார்த்தாலும் தாராபுரத்தில் தவெக ஜெயிக்க சவால்கள் நிறைய உள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பிரபல சேனல் ஒன்றில் பேட்டி தந்துள்ள தராசு ஷ்யாம், "தாராபுரத்தில் அதிமுகதான் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.. அதிமுகவே ஜெயிக்கட்டும் என்பதற்காக, உள்ளூரில் உள்ள திமுகவினரே அதிமுகவுக்கு ஓட்டு போட வாய்ப்புள்ளது.. காரணம், தவெகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே நோக்கம்.

    Advertisement

    அதிமுகவுக்கு செம சான்ஸ்

    உள்ளூரில் தவெகவுக்கு நிறைய எதிர்ப்பு உள்ளது. டவுனுக்குள் அதாவது நகராட்சி பகுதிக்குள் தவெகவுக்கு ஆதரவு அப்படியே உள்ளது... ஆனால் கிராமப்புறங்களில் எதிர்ப்பு உள்ளது. கிராமப்புறங்களில் தவெகவுக்கு ஓட்டு வங்கியே கிடையாது. சட்டமன்றத் தேர்தலிலேயே 3-வது இடத்தில்தான், 23 சதவீதம் ஓட்டு வாங்கியிருந்தது தவெக.

    விஜய் பிரச்சாரத்திற்கு வருவதால் எந்த மாற்றமும் தாராபுரத்தில் இருக்காது.. தொகுதிக்குள் பணப்புழக்கமும் இருப்பதாகச் சொல்கிறார்கள். எப்படி பார்த்தாலும் தாராபுரத்தில் தவெக ஜெயிக்க சவால் நிறைய உள்ளது.

    மதுராந்தகம் டஃப்-ஆக உள்ளது. பாமக யாருக்கும் ஆதரவு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.. விசிகவும் மனப்புழுக்கத்தில் உள்ளனர். விசிகவின் கீழ்மட்டம் முழு தவெகவாகவே மாறிவிட்டது. காங்கிரசுக்கும் அங்கு பெரிதாக செல்வாக்கில்லை. திமுக ஏற்கனவே அங்கே 3-வது இடத்தில்தான் இருந்தது. திமுகவுக்கும் இப்போது சவால்தான். எனவே, ஆளும் கட்சியாக இருப்பதால் தவெகவுக்கு இங்கு வெற்றி வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

    Advertisement

    15 பேர் வரப்போறாங்களா?

    ஆனால், தனிப்பட்ட முறையில் இந்த 2 இடங்களிலுமே தவெக வெற்றி பெறக் கூடாது என்று நான் நினைக்கிறேன். காரணம், இந்த அரசியலுக்கு அப்போதுதான் ஒரு முற்றுப்புள்ளி விழும்.. தவெக வெற்றி பெற்றுவிட்டால், நிறைய ராஜினாமாக்கள் நடக்கும். பதவி ஆசை காட்டி, உங்களை வெற்றி பெற வைக்கிறோம் என்று சொல்லி, அவர்களை ராஜினாமா செய்யச் சொல்லி நடக்கும். உடனே அவர்களுக்கும் ராஜினாமா செய்ய தைரியம் வந்துவிடும். இதனால் அடுத்த வருடம் பூரா இடைத்தேர்தல்தான் நடக்கும்.

    பெருந்துரை தேர்தல் விரைவில் வந்துவிடும்,. நீதிமன்ற விவகாரம் முடிந்தால் மற்ற தொகுதிகளுக்கும் இத்தேர்தல் வரும். இதுபோக செங்கோட்டையனே சொல்கிறார் இன்னும் 15 பேர் வரப்போகிறார்கள் என்று. அப்படி நடந்தால் அங்கேயும் இடைத்தேர்தல் நடக்கும். இது தேவையா?

    Advertisement

    தடாலடி தர்பார்

    எந்த வேலையுமே கடந்த ஒன்றரை மாதங்களாக நடக்கவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் 10 நாள்தான் வேலை தருகிறார்கள். விவசாயத்திற்கு சாகுபடிக்கான பிரச்சனைகள் அதிகம். மதுராந்தகத்திலும் விவசாயிகள் நொந்து போய் உள்ளனர்.

    மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை. 1-ம் தேதி யாரைக் கேட்டுவிட்டுத் தண்ணீர் திறந்தார்கள்? 25-ம் தேதி திறந்திருந்தால், கடைமடை வரை தண்ணீர் வந்திருக்கும்; சம்பாவை காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கலாம்.

    முதலமைச்சருக்கு 1-ம் தேதி வசதி என்பதற்காக, அதன்படியே அன்றைய தினம் தண்ணீர் திறந்துவிட்டது. விஜய் வசதிக்கு விவசாயம் செய்ய முடியுமா? இதுபோன்ற தன்னிச்சையான முடிவு, தடாலடி தர்பாருக்கு முடிவு வர வேண்டுமானால், 2 இடைத்தேர்தல்களிலுமே வாக்காளர்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

    Advertisement

    தாய்தாமன் தங்க மோதிரம் திட்டம்

    தாய்தாமன் தங்க மோதிரம் திட்டத்தினாலும் எந்த பலனும் தவெகவுக்கு கிடைக்கப் போவதில்லை. பயனாளிகள் அதிகரித்தால் அரசியலில் வெற்றி கிடைக்கும் என்றால், ஸ்டாலினுக்குதானே அபார வெற்றி கிடைத்திருக்கும்?

    எத்தனையோ திட்டங்கள், எவ்வளவோ பயனாளிகளின் எண்ணிக்கை ஸ்டாலின் ஆட்சியில் இருந்தனர்! 1 கோடி பேருக்கு மேல் 1000 ரூபாய் மகளிர் திட்டத்தில் இருந்தனர்.. இரண்டரை வருடம் 1000 ரூபாயும் வாங்கியுள்ளனர்... அப்படியானால் அவ்வளவு ஓட்டும் எங்கே போனது? மக்கள் ஏன் மாற்றி ஓட்டுப் போட்டார்கள்? எனவே அதனால், தங்க மோதிரம் திட்டத்திற்காக தவெகவுக்கு வாக்குகள் விழாது" என்றெல்லாம் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    15 MLAs Joining TVK Vijay Soon? Will DMK Voters Back AIADMK in Dharapuram? What’s Going On?