16 வயது சிறுமி.. 5 பேர் கொண்ட கும்பல்.. அதிர வைத்த சென்னை வெறியர்கள்


16 வயது சிறுமி.. 5 பேர் கொண்ட கும்பல்.. அதிர வைத்த வெறியர்கள்-வீடியோ

சென்னை: 5 பேர் கொண்ட ஒரு கும்பல் ஒன்று 16 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து கூட்டாக கற்பழித்த சம்பவம் சென்னையை அதிர வைத்துள்ளது.

புளியந்தோப்பை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருத்திக்கு தன் பெற்றோருடன் ஏதோ மனஸ்தாபம். அந்த கோபத்தில் சண்டை போட்டுகொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார். இது கடந்த 3 ஆம் தேதி நடந்துள்ளது.

வீட்டில் பெண்ணை காணோம் என்று எல்லா இடங்களிலும் தேடிய பிறகு போலீசில் புகார் தந்தார்கள். இதையடுத்து போலீசாரும் காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர்.

செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் பணியாளர்கள் இறப்பது தமிழகத்தில் தான் அதிகம்.! பகீர் தகவல்

புரசைவாக்கம்

சம்பவத்தன்று வெளியில் வந்து விட்ட சிறுமிக்கு எங்கே செல்வது, யாரிடம் உதவி கேட்பது என தெரியவில்லை. அதனால் ஒரு பெண்மணியிடம், "வீட்டை விட்டு வந்துவிட்டேன், ஏதாவது வேலை வாங்கி தர முடியுமா" என்று கேட்டுள்ளார். அந்த பெண்மணியும் சிறுமியை அழைத்து கொண்டு, புரசைவாக்கத்திலுள்ள நிஷா என்பவரது வீட்டில் கொண்டு போய் விட்டார்.

5 பேர் கும்பல்

அந்த வீடு விபச்சாரம் நடக்கும் இடம் போலும். பிறகு அந்த சிறுமியை, 5 பேர் கொண்ட கும்பல் சீரழித்துள்ளது.. 5 நாட்களாகவே 5 பேர் கொண்ட அந்த கும்பலிடம் சிக்கி சீரழிந்துள்ளார் சிறுமி. இதனையடுத்து, அங்கிருந்து தப்பி தன் வீட்டுக்கே திரும்ப ஓடி வந்துவிட்டார்.

3 பெண்கள் கைது

5 நாட்களாக நடந்த சித்ரவதைகளை எல்லாம் சொல்லி கதறி உள்ளார். மகள் பட்ட கஷ்டத்தை கேள்விப்பட்டு அதிர்ந்து போன பெற்றோர், உடனடியாக புளியந்தோப்பு போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில், சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சபீனா, நிஷா, முபீனா என்ற 3 பெண்களை கைது செய்துள்ளனர்.

தீவிரம்

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதைதவிர, ஏழை சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் அந்நபர்களின் பின்னணியில் இருக்கும் கும்பலை பிடிக்கவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Have a great day!
Read more...

English Summary

16 years old girl gang raped by 5 people in Chennai and Police arrested 3 women in connection with