இறந்தும் வாழும் ’கர்ணன்’.. உடல் உறுப்பு தானம் செய்த 19 மாத குழந்தை! தமிழக வரலாற்றிலேயே முதன்முறை!

  • சென்னை: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மூளையில் நீர்க்கோர்ப்பு எனப்படும் ஹைட்ரோசெபாலஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை பலியான நிலையில், குழந்தையின் உடல் உறுப்புகள் பெற்றோர் சம்மதத்துடன் தானமாக வழங்கப்பட்டுள்ளது. குழந்தையின் இதயம் கோவையில் மற்றொரு குழந்தைக்கும், கல்லீரல், சிறுநீரகம் மேலும் 2 குழந்தைகளுக்கும் பொருத்தப்பட்ட‌து. தமிழக உடல் உறுப்பு தான வரலாற்றியேலே மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் செய்தது இந்த குழந்தை தன் என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    விபத்து அல்லது உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிழப்பவர்கள் அல்லது மூளைச்சாவு அடைந்தவர்களின் கண்கள், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு தேவை உள்ளோருக்கு பொருத்தப்பட்டு வருகிறது.

    Advertisement

    இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது. பொதுவாக 5 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் உடல்களில் இருந்துதான் இதுவரை உறுப்பு தானம் பெறப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக மூளை சாவடைந்த 19 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு மூன்று பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 1 ஆண்டு 7 மாதங்களான ஆண் குழந்தை ஒன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்த போது ஹைட்ரோசெபாலஸ் எனப்படும் பிறவி குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    Advertisement

    அதாவது மூளை மற்றும் மூளை தண்டுவட நீர் தலைக்குள்ளேயே சேகரமாகி திசுக்களை சேதப்படுத்துவது தான் ஹைட்ரோ செபாலஸ் என அழைக்கப்படுகிறது. தொடர்ந்து வென்ட்ரிக்குலோபெரிட்டோனியல் ஷன்ட் எனும் சிகிச்சை அளிக்கப்பட்டு ஆறு நாட்கள் தீவிர சிகிச்சை பதிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்ததோடு அது தீவிர சிகிச்சைகளை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் குழந்தையின் உடல்நலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இதை எடுத்து குழந்தை மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர்கள் ஒப்புக்கொண்டனர். இதை அடுத்து அந்த சிறுவனின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடலுறவுகள் எடுக்கப்பட்டு பிறருக்கு தானமாக வழங்கப்பட்டது. குழந்தையின் இதயம் கோவையைச் சேர்ந்த மற்றொரு குழந்தைக்கும், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை மேலும் இரண்டு குழந்தைகளுக்கும் பொருத்தப்பட்டது.

    Advertisement

    நேற்று அதிகாலை குழந்தை மூளை சாவு அடைந்த நிலையில், இரவுக்குள்ளாக அந்த குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. இந்த குழந்தைதான் தமிழ்நாட்டில் மிகவும் குறைந்த வயதுடைய உடல் உறுப்பு கொடையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து அந்த குழந்தையின் பெற்றோருக்கு நன்றி தெரிவித்திருக்கிறது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம்.

    இது தொடர்பாக அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் அறிக்கையில்," ஆர்ஜிஜிஜிஹெச் மருத்துவமனை சார்பில், தமிழகத்தின் மிக இளம் வயதிலான உறுப்பு தானம் செய்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வயது 7 மாதங்களே ஆன அந்த சிறுவன், தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உறுப்பு தானத் திட்டத்தில், மிகக் குறைந்த வயதில் உறுப்பு தானம் செய்த குழந்தையாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மூளையில் நீர்க்கோர்ப்பு எனப்படும் ஹைட்ரோசெபாலஸ் பாதிப்புடன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்காக அவருக்கு வென்ட்ரிக்குலோபெரிட்டோனியல் ஷன்ட் எனப்படும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஆறு நாட்கள் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காத நிலையில் சிறுவன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    தங்கள் குழந்தையை இழந்த துயரத்திலும் வேதனையிலும் இருந்த பெற்றோர், பிற குழந்தைகளின் வாழ்க்கைக்கு தங்கள் மகனின் உறுப்புகள் உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் உறுப்பு தானம் செய்ய சம்மதித்தனர். குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் இந்த மனிதநேய முடிவுக்கு மருத்துவமனை நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது. தங்களது குழந்தையை இழந்த பேரிழப்பிலும், மற்ற உயிர்களைக் காப்பாற்றும் வகையில் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்த பெற்றோரின் முடிவு பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது." என கூறியுள்ளது.

    English Summary

    A 19-month-old child became Tamil Nadu’s youngest organ donor, with heart, liver and kidney helping three other children.