ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்!

  • சென்னை: மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1000 என கடந்த ஆட்சிக் காலத்தில் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தவெக தனது தேர்தல் அறிக்கையில் உரிமைத்தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இதற்கு நிதியமைச்சர் மரியவில்சன் பதிலளித்திருக்கிறார்.

    Advertisement

    உழைக்கும் மக்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து திமுக ஆட்சியமைத்த பின்னர் மாதம் ரூ.1000 என மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது.

    Advertisement

    அதிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. முதலில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் தகுதியானவர்களுக்கு மட்டும்தான் உரிமைத்தொகை என்று அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இப்படி இருக்கையில் 2026 சட்டமன்ற தேர்தலின்போது மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தவெக வாக்குறுதி கொடுத்திருந்தது. தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து எப்போது மகளிர் உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்கிற கேள்வி எழுந்திருந்தது.

    இதற்கு நிதியமைச்சர் மரியவில்சன் விளக்கமளித்துள்ளார். "திமுக ஆட்சியில் ரூ.1000 உரிமைத் தொகையை வட மாநிலத்தவருக்கும் கொடுத்துள்ளனர். திமுக ஆட்சியில் நிதி மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை தயாராகும்.

    Advertisement

    மதுரை மாநகராட்சி ஊழல் பற்றி ஆதாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் RBI கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஆனால், இம்முறை விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி தவெக ஆட்சியில் RBI அறிவுறுத்தலின்படி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். இருப்பினும் விவசாய கடன்களை வரம்புகள் எதுவும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

    மகளிர் உரிமைத்தொகையை பொறுத்தவரை, இது தொடர்பான அறிப்பு பட்ஜெட் கூட்டத்தில் வெளியிடப்படும்" என்று கூறியிருக்கிறார். எனவே ஜூன் மாதமாவது உரிமைத் தொகை உயர்த்தி கிடைக்குமா? என்று எதிர்ப்பார்ப்பு எழுந்திருக்கிறது.

    English Summary

    Magalir Urimai Thogai: During the previous administration, a monthly entitlement allowance of ₹1,000 was provided to women. Against this backdrop, the TVK announced in its election manifesto that this allowance would be increased to ₹2,500. Various quarters have raised questions regarding when this announcement will come into effect. Finance Minister Maria Wilson has responded to these inquiries.