சென்னை: "பாமக தேர்தலில் ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளது.. இப்படி விலகுவதற்கான காரணம் சுயநலமான முடிவுதான்.. விலகுவது போல விலகி, தவெகவிற்கு மறைமுகமாக உதவுகிறது பாமக.. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் போன்ற தொகுதிகளில் பாமகவின் ஓட்டு வங்கி தவெகவுக்கு தேவை. சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி போன்ற பெரிய பதவிகளைப் பெறுவதே நோக்கமாக இருக்கலாம்" என்று வழக்கறிஞரும், அரசியல் விமர்சகருமான கோடீஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், "சிபிஐ விசாரணைக்கு பயந்து ஓடிவிட்டனர்.. ஒரு வருடம் ஆகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. யார் குற்றவாளி என்று கேட்டால், விஜய் சார் செந்தில் பாலாஜியைத்தான் காரணம் என்று நம்புகிறார். பஸ்ஸை கூட்டத்திற்கு நடுவே மோதியது தவறு என்பதை விஜய் இன்னமும் உணரவில்லை.
விஜய் சார் தவறு செய்தாலும், ஊழல் வழக்கில் தண்டனை பெற்றாலும் அவருக்காக வக்காலத்து வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். அவர் என்ன சொன்னாலும் அதை இன்ஸ்டாவில் கொண்டு போய் சேர்க்கத் தயாராக ஒரு கூட்டம் உள்ளது. திமுக பேச்சாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கோபமான பேச்சும், பொதுவெளியில் காட்டும் பந்தாவும்தான், அவர்கள் மீது வெறுப்பை சம்பாதித்துள்ளன. ஆனால், உண்மையாகப் பார்த்தால் திமுகவை விட தவெக அதைவிட கொடிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆதவ் அர்ஜுனா பேசும்போது ஒருத்தருக்கும் மரியாதை கொடுப்பதில்லை.. எல்லோரையும் ஒருமையில் பேசுகிறார்.. 3 கோப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள், எப்போதுதான் தூசி தட்டி எடுப்பார்கள்.. ஜோதிடர் நேரத்தைக் கேட்பது போல பேசுவது வெட்கக்கேடானது... தவெக வெற்றி பெற்றால், திமிர் அதிகமாகிவிடும்... இப்பவே கரண்ட் பில் அதிகம் என்றால், சரியா பாருங்க என்கிறார்கள்.. இது திமிரின் உச்சம்தானே? தவெகவுக்கென்று 20 முதல் 25 சதவிகிதம் முரட்டுத்தனமான வாக்கு வங்கி உள்ளது. விஜய் கள்ளச்சந்தையில் பிளாக் டிக்கெட் விற்றது நாட்டு மக்களுக்குத் தெரியும், ஆனாலும் அதை பொதுமக்கள் பொத்தாம் பொதுவாகப் பேசி நியாயப்படுத்துகிறார்கள். காவல்துறையில் பலரும் சரியில்லை, லாக்கப் மரணங்கள் நடக்கின்றன. இதையெல்லாம் திசைமாற்றவே மகேஷ் பொய்யாமொழி வீட்டில் ரெய்டு மற்றும் போக்சோ வழக்கு போன்ற விஷயங்கள் பேசப்படுகின்றன. சீமான் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பழைய சிஏஜி அறிக்கைகளையும் அமலாக்கத்துறை வழக்குகளையும் மட்டுமே மீண்டும் பேசுகின்றனவே தவிர புதிய தரவுகள் எதையும் சொல்லவில்லை. சேகர் பாபு மற்றும் மா. சுப்பிரமணியன் மீதான பழைய ஊழல் குற்றச்சாட்டுகளையே மீண்டும் பேசுகின்றனரே தவிர புதிய விசாரணைகள் எதுவும் இல்லை. அருண் ஐபிஎஸ்-ஐ கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருக்கிறீர்கள்.. அப்படியானால் உங்களுக்கு அவர் மீது ஏதோ சந்தேகம் வருகிறதுதானே? நீங்கள் உண்மையில் அக்மார்க் யோக்கியராக இருந்தால் அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டியதுதானே? ஏன் வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கிறீர்கள்? இதைக் கொண்டு அரசியல் பேசிவிட்டு, பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து அவருக்குப் பதவி கொடுத்து அனுப்பிவிடுவார்கள்.. இந்த வேலையெல்லாம் செய்யக்கூடாது.. இதிலும் வியாபாரம் செய்தால் எப்படி? பாமக எந்த தேர்தலிலும் ஆதரவு இல்லை என்று விலகுவதற்கான காரணம் சுயநலமான முடிவுதான்.. விலகுவது போல விலகி, தவெகவிற்கு மறைமுகமாக உதவுகிறது பாமக.. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் போன்ற தொகுதிகளில் பாமகவின் ஓட்டு வங்கி தவெகவுக்கு தேவை. சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி போன்ற பெரிய பதவிகளைப் பெறுவதே அவர்களின் இந்த சமரசத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கக்கூடும். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் பெரிய இயக்கம் என்று சொல்லிக்கொண்டாலும் அது மக்களுக்கு எப்போதும் ஆபத்தாகவே இருந்துள்ளது. பாமக மற்றும் விசிக மோதல்கள் ஒரு காலத்தில் தீவிரமாக இருந்த நிலையில், இப்போதுள்ள சமரச அரசியல் சுயநலமானது. வடதமிழகத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது அல்லது மகாபலிபுரத்தில் அலுவலகம் அமைப்பது போன்ற பேச்சுகள் சாத்தியமற்றவை. மீனவர்கள் மற்றும் நீதிமன்றங்களின் தலையீட்டால் இத்தகைய திட்டங்கள் வராது. ஒட்டுமொத்தமாகப் பாமக எடுத்துள்ள இந்த முடிவு முழுக்க முழுக்க ஒரு சுயநலமான அரசியல் முடிவாகும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.திமுக பேச்சாளர்கள்
20 முதல் 25 சதவிகிதம் வாக்கு வங்கி
அருண் ஐபிஎஸ்
பாமக பிளான் இதுதான்
பாமக - விசிக மோதல்