கனிமவளத்துறை பெயரில் ‘போலி பெர்மிட்’.. தறிகெட்டு ஓடும் லாரிகள்.. அச்சகத்துக்கு சீல்!

  • சென்னை: கனிம வளத்துறை வழங்கும் லாரி பர்மிட்களை போலியாக அச்சிட்டு விற்பனை செய்ததாக கோடம்பாக்கம் அச்சக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சக உரிமையாளருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.

    Advertisement

    கனிம வளத்துறை, காவல் துறையினர் நடத்தி வரும் அதிரடி சோதனையின்போது, 'போலி பர்மிட்' பயன்படுத்தியதாக, 100 லாரிகள் பறிமுதல் செய்யப் பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    கடந்த இரு வாரங்களில், மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் லாரிகளை சோதனையிட்டதில் போலி பெர்மிட் இருந்தது தெரியவந்தது.

    Advertisement

    இதைத்தொடர்ந்து, போலி பெர்மிட் எங்கு தயாரிக்கப்படுகிறது என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மணல் எடுப்பதற்காக கனிமவளத்துறை வழங்கும் பெர்மிட் போலவே சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு அச்சகத்தில் போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட கோடம்பாக்கத்தில் உள்ள அச்சக ஊழியர்களான மணிகண்டன், விக்னேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சகத்தின் உரிமையாளரான ராஜுவை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோல, போலி பெர்மிட்களை பயன்படுத்தி லாரிகளில் கனிம வளக் கொள்ளை நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

    English Summary

    Two employees of a printing press in Kodambakkam have been arrested for printing and selling fake lorry permits issued by the Department of Geology and Mining.