200 போலீஸ் குடும்பங்கள்.. ரூ.20 கோடி தங்கக் காசு மோசடி.. இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி சிக்கியது எப்படி?

  • சென்னை: சென்னையில், குறைந்த விலையில் தங்க காசு மற்றும் நிலம் வாங்கி தருவதாக கூறி 200-க்கும் மேற்பட்ட போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் பணம் வசூலித்து ரூ.20 கோடி மோசடி நடத்தியதாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைதான நிலையில், அவரிடம் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். இதனால், இந்த தங்கக் காசு மோசடியில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    சென்னை தனியார் வங்கியில் பணியாற்றி வரும் ராஜன் என்பவருக்கு சில மாதங்களுக்கு முன்பு கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி அறிமுகமானார். "வெறும் 4500 ரூபாய் முதலீடு செய்தால், 15 நாட்களில் ஒரு கிராம் தங்கக் காசு வழங்கப்படும்" என்பதுதான் பிரபுமணி சொன்ன கவர்ச்சிகரமான திட்டம்.

    Advertisement

    சந்தை விலையை விடக் மிகக் குறைந்த விலையில் தங்கம் கிடைப்பதாக நம்பிய ராஜன், ஆரம்பத்தில் சில காசுகளை வாங்கிப் பார்த்தார். சொன்னபடியே தங்கக் காசுகள் கைக்கு வந்தன.. உடனே பிரபுமணி மீது ராஜனுக்கு ஏகப்பட்ட நம்பிக்கை வந்துவிட்டது... இதைப் பயன்படுத்தி, அவரிடம் அடுத்தடுத்து கோடிக்கணக்கில் முதலீடுகளை பெறத் தொடங்கினார் பிரபுமணி.

    சென்னை தங்க காசு

    ஒருகட்டத்தில் 90 லட்சம் ரூபாய் வரை ராஜன் இதில் முதலீடு செய்தார். ஆனால், குறிப்பிட்ட காலம் கடந்தும் அதன்பிறகு தங்கக் காசுகளும் கிடைக்கவில்லை, கொடுத்த பணமும் திரும்ப வரவில்லை.

    Advertisement

    அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜன், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி பிரபுமணியை உடனடியாகக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரிக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தங்கக் காசு மோசடி

    வடசென்னையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஷீலா மேரிக்கும் இந்த மோசடியில் நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு தெரியவந்ததும், இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து, கைது நடவடிக்கையிலிருந்து தப்ப ஷீலா மேரி கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனுவை நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது.

    Advertisement

    முன்ஜாமீன் தள்ளுபடியானதை தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஷீலா மேரியை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையின் போது, "எனக்கும் இந்த மோசடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று ஷீலா மேரி மறுத்தார். ஆனால் ஏற்கனவே கைதான பிரபுமணி கொடுத்த தகவல்கள், போலீசாருக்கு கிடைத்த வலுவான ஆதாரங்களின் அடிப்படையில், இந்த வழக்கில் 3வது குற்றவாளியாக ஷீலா மேரி சேர்க்கப்பட்டார்.

    ஷீலா மேரி சிக்கியது எப்படி

    பிறகு விசாரணை வளைத்துக்குள் கொண்டுவரப்பட்டார் ஷீலா மேரி.. அப்போது பல உண்மைகள் வெளியாகின.. அதாவது வடசென்னையில் பணியாற்றும்போது ஷீலா மேரி தனக்கு தெரிந்தவர்களிடமும், போலீசாரின் குடும்பத்தினரிடமும் பிரபுமணியை "எனது தம்பி" என்றே அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

    Advertisement

    இன்ஸ்பெக்டரே நேரில் பரிந்துரை செய்ததால், ஏராளமான போலீஸ் குடும்பத்தினர் போட்டி போட்டுக்கொண்டு லட்சக்கணக்கில் இதில் பணம் முதலீடு செய்தனர். பிரபுமணியும் ஆரம்பத்தில் சிலருக்கு தங்கக் காசுகளை வழங்கி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

    பணம் குவிய தொடங்கியதும், கொளத்தூர் பகுதியில் ஒரு ஆபீஸை ஆரம்பித்து, ஆட்களையும் வேலைக்கு அமர்த்தினார் பிரபுமணி. முதலீடாக வந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஷீலா மேரிக்கும் அவர் பங்காக கொடுத்து வந்திருக்கிறார்.. ஆனால் சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை திடீரெனக் கடுமையான உயர்வைக் கண்டதும், பிரபுமணியால் சொன்னபடி தங்கக் காசுகளைக் கொடுக்க முடியாமல் போய்விட்டது.

    Advertisement

    ஷீலா மேரி புழல் ஜெயிலில்

    பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டபோது, இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி தலையிட்டுச் சமரசம் செய்ததுடன், இதை சரிசெய்ய, கொஞ்சம் டைம் வேண்டும் என்று கேட்டுள்ளார்..

    ஒருகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளிக்க முயன்றபோதும், ஷீலா மேரி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்துள்ளார். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் மறுபடியும் புகார் தந்துள்ளனர்.. அதற்கு பிறகே இந்த வழக்கு வேகம் எடுத்தது.. அத்துடன் பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி, பிரபுமணி, கல்பனா மற்றும் செந்தில்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    விசாரணை வளையத்தில் ஷீலா மேரி

    இந்நிலையில், ஷீலா மேரி உட்பட 3 பேரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் இப்போது அனுமதி வழங்கியுள்ளது.. அதன்பேரில் அவர்கள் 3 பேர்களிடமும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்...

    இந்த மோசடியில் வடசென்னையில் பணியாற்றிய மற்றொரு இன்னொரு இன்ஸ்பெக்டருக்கும், ரயில்வே போலீஸில் பணியாற்றி வரும் அவரது மனைவிக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்...!!

    English Summary

    Sheila Mary Gold Coin Scam.. How Did Chennai Inspector Get Caught After Duping 200 Families?