22 வயதில் 6வது கர்ப்பம்.. கணவரின் விபரீத ஆசையால் உறைந்த டாக்டர்.. 4 கோடி பேர் பார்த்த வைரல் வீடியோ

  • சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெறும் 22 வயதே ஆன இளம் பெண் ஒருவர், இப்போது 6வது முறையாக கர்ப்பமடைந்துள்ளாராம்.. இந்த சம்பவம்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதுகுறித்து அந்த பெண் சொன்ன தகவல்தான், அதற்கு மேல் வைரலாகி கொண்டிருக்கிறது.

    Advertisement

    ராஜஸ்தான் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் இந்த பெண்.. 22 வயதாகிறது.. இப்போது உத்தரப் பிரதேசத்தில் வசித்து வருகிறார். அவர் சமீபத்தில் லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு செக்கப்புக்காக சென்றுள்ளார்.

    Advertisement

    6வதாக கர்ப்பம் தரித்த 22 வயது பெண்

    அவரை பரிசோதித்தபோதுதான், அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.. உடனே அப்பெண்ணின் விவரங்களை டாக்டர் கேட்டார்.. பிறகு வயது என்ன என்று கேட்டார்.. அதற்கு அந்த பெண் 22 வயது என்று சொன்னதுமே அப்படியே உறைந்துபோய் நின்றுவிட்டார் டாக்டர்.. காரணம், இந்த பெண்ணுக்கு 5 குழந்தைகள் இருக்கிறதாம்..

    டாக்டரிடம் செக்கப்புக்கு வந்தபோது இந்த பெண் பேசுவது வீடியோவாகவும் வெளியாகி உள்ளது.. அந்த வீடியோவில், "5 குழந்தைகள் இருக்கும்போது எதற்காக 6வது குழந்தை? என்று டாக்டர் கேட்கிறார்.

    Advertisement

    ஆண் குழந்தை வேண்டும் மேடம்

    அதற்கு அப்பெண், "15 வயசிலேயே எனக்கு திருமணம் நடந்துவிட்டது.. வரிசையாக பெண் குழந்தைகள்தான் பிறந்தன.. ஒரே ஒரு ஆண் குழந்தை மட்டும்தான் உள்ளது.. என் கணவர் இன்னொரு ஆண் குழந்தையை விரும்புகிறார்.. எங்கள் குடும்பத்தினரும் ஆண் குழந்தை வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றவே நான் 6வது முறையாகக் கர்ப்பம் தரித்திருக்கிறேன்" என்று கேஷூவலாக சொல்கிறார்

    இதைக்கேட்டதுமே கடுப்பான டாக்டர், அந்தப் பெண்ணை எச்சரிக்கிறார்.. இளம் வயதில் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்கள் குறித்து டாக்டர், தம்பதியினரை அறிவுறுத்துகிறார்..

    Advertisement

    இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, இதுவரை கிட்டத்தட்ட 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. அத்துடன் முக்கிய விவாதங்களையும் கிளப்பி விட்டுள்ளது.

    டாக்டர்கள் சொல்வதென்ன

    ஒரு பிரசவத்திற்குப் பிறகு, தாயின் உடல் பழைய நிலைக்குத் திரும்புவதற்கும், இழந்த சத்துக்களைப் பெறுவதற்கும் குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் வரை இடைவெளி இருப்பது மிகவும் அவசியம் என்று மருத்துவ உலகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இங்கு மீட்புக் காலத்திற்கான எந்தவொரு அவகாசமும் இல்லாமல், தொடர்ச்சியான கர்ப்பங்களால் அந்தப் பெண்ணின் உடல் மிகவும் பலவீனமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    Advertisement

    அடுத்தடுத்து கர்ப்பமாவதால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்கள் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்தாவாறே உள்ளனர்.. ஒரு பிரசவத்திற்குப் பிறகு தாயின் உடல் இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெற்று பழைய நிலைக்குத் திரும்ப குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் இடைவெளி அவசியம்.. இந்த அவகாசம் இல்லாதபோது தாய்க்கு கடுமையான ரத்த சோகை ஏற்பட்டு உடல் முற்றிலும் பலவீனமடையும் என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள்.

    உயிரோடு விளையாட்டு

    அதுமட்டுமல்ல, போதிய இடைவெளி இல்லாத தொடர் கர்ப்பங்கள் பிரசவ கால சிக்கல்களை அதிகரித்து, குறைப்பிரசவம் ஏற்படுவதற்கும் அல்லது பிறக்கும் குழந்தை மிகக் குறைந்த எடையுடன் பிறப்பதற்கும் வழிவகுக்கும் என மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. அப்படியிருந்தும்கூட சில பெண்கள் இளம் வயதிலேயே, அதிக குழந்தைகளை தொடர்ச்சியாக பிரசவிப்பது நடப்பது வேதனையை தருகிறது.

    Advertisement

    அதிலும் 21ஆம் நூற்றாண்டிலும் ஆண் வாரிசு மோகத்திற்காக ஒரு பெண்ணின் உயிரோடு விளையாடும் இத்தகைய சம்பவங்கள் வட மாநிலங்களில் தொடர்ந்து அரங்கேறி வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வு குறித்த கேள்விகளை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது...!!

    English Summary

    22-Year-Old Expecting 6th Child for a Son! Doctor left Stunned as Video Goes Viral with 40 Million Views