24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்.. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி

  • சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள உதயநிதி, 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறி, தமிழக அரசையும் முதலமைச்சரையும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில், "24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?.

    பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி! என்று பதிவிட்டுள்ளார்.

    தொடர்ந்து, இத்தகைய ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்றும், மக்கள் விரோத செயல்பாடுகளால் இந்த ஆட்சி வீழ்வது உறுதி என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரம் தொடர்பாக அவர் பதிவின் இறுதியில் #WhySilentCM என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தி, முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

    English Summary

    Udhayanidhi Stalin has strongly criticized the Tamil Nadu government over the rise in sexual assault cases, alleging that 12 incidents occurred within 24 hours. Questioning the effectiveness of officials appointed by the Chief Minister, he accused the government of failing to protect children and demanded accountability for the worsening law-and-order situation.