சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியதாக 241 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அது போல் 760 ஊழியர்களுக்கு துறை ரீதியான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் போது அவற்றை ஒப்படைப்பவர்களுக்கு ரூ 10 வழங்கப்படும். இதற்காக மதுபானத்தின் விலையுடன் கூடுதலாக ரூ 10 வசூலிக்கப்படுகிறது.
ஒரு கடைக்கு இரு ஸ்கேனிங் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. காலி மதுபாட்டில்களைத் திரும்ப பெறும் போது தொய்வு ஏற்படுவதால் பணிச்சுமை ஏற்படுவதோடு மதுபான விற்பனையில் காலதாமதம் ஏற்படும் என கூறி டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட 760 ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "ஏன் உங்கள் மீது பணிநீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது?" என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அது போல் 241 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விதிகளுக்கு புறம்பாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் எச்சரித்திருந்தார். தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் இது போன்ற நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு ரூ 200 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் 80 சதவீதம் டாஸ்மாக் கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்பட்டு காலி பாட்டில்களைத் திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று கடைகள் திறக்காத நிலையில் இன்று கடைகள் திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு மதுபாட்டில்களை வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.டாஸ்மாக் கடையடைப்பு! 10 லட்சம் பேர் குடிச்சிருக்க மாட்டாங்க! ரொம்ப சந்தோஷம்! அமைச்சர் விக்னேஷ்