தமிழ்நாட்டில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. பேரூராட்சிகள் துறை இயக்குநராக சரயு நியமனம்!

  • சென்னை: தமிழ்நாட்டில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்து சமய மற்றும் அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருந்த ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக அரசின் பொதுத்துறை (சிறப்பு - ஏ) துறை சார்பில், ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    Advertisement

    அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக (நிர்வாகம்) பணியாற்றி வந்த டாக்டர் டி. ரவிச்சந்திரன் ஐஏஎஸ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பியுள்ள கே.எம். சரயு ஐஏஎஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் உள்ள பேரூராட்சிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கு முன்பு இந்தப் பொறுப்பில் இருந்த டாக்டர் கே.பி. கார்த்திகேயன் ஐஏஎஸ், மத்திய அரசுப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநராகப் பணியாற்றி வந்த டாக்டர் சி. பழனி ஐஏஎஸ் சேவை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகித்து வரும் டி.பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ்க்கு பதிலாக, மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்படுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் மற்றும் பேரூராட்சிகள் இயக்குநர் ஆகிய பதவிகள், இந்திய ஆட்சிப் பணி ஊதிய விதிகளின்படி சமூக நலத்துறை இயக்குநர் பதவிக்கு இணையான அந்தஸ்து மற்றும் பொறுப்புகளைக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu Government has issued an order transferring three IAS officers. Accordingly, Ravichandran, who served as the Additional Commissioner of the HRCE Department, has been appointed as the Director of the Department of Employment and Training.