3 முக்கிய துறைகள் இன்று சட்டசபையில்.. அமைச்சர்கள் வெளியிடப்போகும் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

  • சென்னை: தமிழக சட்டசபையில் இன்று முக்கியமான 3 துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது... ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த கோரிக்கைகள் மட்டுமல்லாமல், பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்சினைகளையும் முன்வைக்க உள்ளதால், இன்றைய சட்டசபை கூட்டத்தொடர் கவனம் பெற்றுள்ளது...!

    Advertisement

    தமிழக சட்டசபையில் தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 6-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது..

    Advertisement

    பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் கடந்த 7, 10, 11-ந்தேதிகளில் நடைபெற்றது. பிறகு நிதியமைச்சர் மரிய வில்சனும், வேளாண்மை அமைச்சர் வினோத்தும் பதிலுரை வழங்கின்றார்கள். இதையடுத்து துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய 3 துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.

    இயற்கை வளங்கள் துறையை பொறுத்தவரை, கனிம வளங்கள், இயற்கை வளங்களை பாதுகாப்பது, அவற்றின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சட்டசபையில் எழுப்ப நிறையவே வாய்ப்புள்ளது. அதேபோல் தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான விவாதத்தில் தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை கொண்டு வருவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட முக்கிய கேள்விகள் இடம்பெறலாம்..

    Advertisement

    தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையும் இன்றைய விவாதத்தில் முக்கிய இடம் பெறுகிறது. அதன்படி, அரசு சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்குவது, புதிய டெக்னாலஜியை பயன்படுத்துவது,மக்களுக்கு சேவைகள் எளிதாக கிடைப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து உறுப்பினர்கள் இன்று பல கேள்விகளை எழுப்புவார்கள் என தெரிகிறது..

    அதுமட்டுமல்ல,, இன்று சட்டசபையில் 2 கவன ஈர்ப்பு தீர்மானங்களும் கொண்டுவரப்பட உள்ளன... முதலாவதாக தமிழகத்தில் ஹீமோபிலியா மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமிசிஸுமாப் மருந்தை இலவசமாக வழங்குவது தொடர்பாக தவெக எம்.எல்.ஏ. டாக்டர் எம்.எஸ். ரவி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறார்.

    Advertisement

    மேலும், பழனி தொகுதி ஆயக்குடி பேரூராட்சியில் உள்ள அரசு மாணவியர் விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்பது தொடர்பாக அதிமுக எம்எல்ஏ கு. ரவி மனோகரன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறார். இந்த விவகாரங்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர்.

    இதனால், இன்று சட்டசபையில் துறைவாரியான விவாதம் மட்டுமின்றி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய கோரிக்கைகளும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

    இவை அனைத்துக்கும் மேலாக, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் அளிக்கும் பதில்களுடன், புது புது அறிவிப்புகளும் வெளியாகுமா என்பதும் அரசியல் வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...!

    English Summary

    3 Key Departments in Assembly Today.. What New Announcements Will Ministers Make?