மூணு மாசத்தில் திணறும் தமிழகம்? ரேஷன் அரிசி எங்கே? 1 லட்சம் ஏக்கர் பயிர் கருகுதே: தராசு ஷ்யாம்

  • சென்னை: புதிய ஆட்சியாளர்கள் வரும்போது புதிய பாதையை வகுப்பார்கள் என்று எதிர்பார்த்தால், பழைய நடைமுறைகளையே மீண்டும் தொடர்வது ஏமாற்றமளிக்கிறது.... தேர்தல் பிரச்சார முறைகள் மாறியுள்ளதே தவிர, ஆட்சி நிர்வாகம் இன்னும் பழைய பாணியிலேயே தொடர்கிறது என்று மூத்த பத்திரிகையாளரும், அரசியல் திறனாய்வாளருமான தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    Tamilkural tv சேனலுக்கு பேட்டி தந்துள்ள தராசு ஷ்யாம், "தவெக அரசு வழங்கும் குறுவை சிறப்பு தொகுப்பு என்பது விதைகள் மற்றும் உரங்களை உள்ளடக்கிய இன்புட் மட்டுமே தவிர, அது பயிர் இழப்புக்கான நிவாரணம் கிடையாது.

    Advertisement

    குறுவை சாகுபடிக்கு உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், காவிரி பாசனப் பகுதிகளில் நிலத்தடி நீரை நம்பி பயிரிடப்பட்ட சுமார் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகிப் போயுள்ளன. மின்சாரப் பற்றாக்குறையால் முப்பரிமாண மின்சாரம் குறைந்த மின்னழுத்தத்தில் கிடைக்கிறது. இதனால் மோட்டார்கள் பழுதுபட்டு விவசாயிகள் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    தமிழக விவசாயிகள்

    அரசு மின்வெட்டை முறைப்படுத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், அதற்கேற்ப விவசாயிகள் திட்டமிட்டுக் கொள்வார்கள். அதை தவிர்த்துவிட்டு, நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி அறிவிப்பதால் எந்தப் பயனும் இல்லை. நிலத்தில் பயிரே இல்லாதபோது, விலை உயர்வால் விவசாயிகளுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?

    Advertisement

    வேளாண் செலவு மற்றும் விலை ஆணையம், எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் லாபத்தை சேர்த்து ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். ஆனால், உற்பத்திச் செலவைக் கணக்கிடுவதிலேயே தெளிவற்ற சூழல் நிலவுகிறது. விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்தில் உழைக்கும் குடும்ப உழைப்பிற்கான செலவை இதில் சேர்ப்பதா இல்லையா என்பதில் தொடர் குழப்பம் நீடிக்கிறது.

    நெல் சேமிப்பு கிடங்குகள்

    DPC எனப்படும் அரசு கொள்முதல் நிலையங்களில் வாங்கும் நெல் முறையான சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் மழையிலும் ஈரப்பதத்திலும் முளைத்து வீணாகிறது. அந்தத் தரமற்ற நெல்லை அரைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும்போது மக்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. அதை வெளி முகவர்கள் வாங்கி, மீண்டும் பாலிஷ் செய்து சந்தையில் அதிக விலைக்கு விற்கும் ஒரு கேடான சுழற்சி தொடர்கிறது.

    Advertisement

    சட்டமன்றத்தில் 15 ஸ்டாண்டர்ட் ஏக்கர் நில உச்சவரம்புச் சட்டம் அமலில் இருக்கும்போது, அதைப் பற்றிய புரிதல் இன்றி விவாதங்கள் நடைபெறுகின்றன.

    ஏற்கனவே சட்டபூர்வ அரசாணைகள் இருக்கும்போது, தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து அவையில் விவாதித்து நேரத்தை வீடிப்பது தேவையற்ற ஒன்று. நவீன தொழில்நுட்பங்கள் வந்த பிறகும் வானிலை கணிப்புகள் துல்லியமாக இல்லாததால், விவசாயிகள் நம்பிக்கையிழந்து விவசாயத்தை கைவிட்டு வெளியேறுகிறார்கள்.. இதனால் விவசாய நிலங்கள் கார்ப்பரேட் மயமாவதை நோக்கி செல்கின்றன.

    தவெக அரசு

    புதிய ஆட்சியாளர்கள் வரும்போது புதிய பாதையை வகுப்பார்கள் என்று எதிர்பார்த்தால், பழைய நடைமுறைகளையே மீண்டும் தொடர்வது ஏமாற்றமளிக்கிறது.... தேர்தல் பிரச்சார முறைகள் மாறியுள்ளதே தவிர, ஆட்சி நிர்வாகம் இன்னும் பழைய பாணியிலேயே தொடர்கிறது.

    Advertisement

    எஃப்சிஆர்ஏ விவகாரத்தில் உள்ள மோசமான அம்சங்களை எதிர்த்துத்தான் ஆக வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், சில கிறிஸ்தவ நிறுவனங்களுக்குத் தரப்படும் ஆதரவு என்பது, அனைத்துப் பொதுவான கிறிஸ்தவ மக்களிடமும் முழுமையாக இருக்கிறதா என்பதில் தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளது. அதிலும் சில குறிப்பிட்ட ஆதிக்கங்கள் இருக்கவே செய்கின்றன. இருந்தாலம், அந்தச் சட்டத்தில் உள்ள தவறான விதிகளை எதிர்ப்பது அவசியமானது.

    அதிமுக, பாஜக, திமுக

    அதற்கான ஒரு பண்டமாற்று முறையாக இதை அவர்கள் முன்வைக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது. ஆனால், இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அந்த மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்படவில்லை. அதனால் இப்போதைக்கு அந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது என்றே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த கூட்டத்தொடரில் இதைக் கொண்டுவருவார்களா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    Advertisement

    இடையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றினால் அது வேறு விஷயம். நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு மெஜாரிட்டி பலம் இல்லாமல் மத்திய அரசு மீண்டும் ஒருமுறை அந்த முயற்சியில் இறங்காது. அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸும் நினைக்கிறது. ஆக மொத்தத்தில், இது ஒரு தீவிரமான அரசியல் போட்டிக்களமாகவே மாறப்போகிறது" என்கிறார்

    English Summary

    3 Months to Chaos in Tamil Nadu? 1 Lakh Acres of Crops Dried Up: Tharasu Shyam Slams TVK Govt