கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்.. தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்

  • சென்னை: கர்நாடக மாநிலம் சாம்​ராஜநகர் மாவட்​டம் ஹனூர் அரு​கே​ காவிரி வனவிலங்கு சரணாலய பகு​தி​யில் கடந்த 15 ஆம் தேதி அதி​காலை​யில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்தோணி​சாமி (50), ஜான்​ரோஸ் பீட்​டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவரும் அம்​மாநில வனத்​துறை​யின​ரால் சுட்​டுக் கொல்​லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    இந்த சம்​பவம் தொடர்பாக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சட்டசபையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    Advertisement

    சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

    கர்நாடக வனப்பகுதியில் தமிழகர்கள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர்களான அந்தோணிசாமி, ஜான்​ரோஸ் பீட்​டர் லாசர் குமார் உள்ளிட்டோர், காவிரி வனப்பகுதி சரணாலயம் அருகே கால்நடைகளை மேய்க்க சென்றதாக சொல்லப்படுகிறது.

    இவர்கள் மான்வேட்டையில் ஈடுபட்டதாகவும் அது குறித்து விசாரிக்க சென்ற பொது தாக்க முயன்றதால் தற்காப்புக்காக தாக்குதல் நடத்தியதாக கூறி தமிழர்கள் மூன்று பேரையும் கர்நாடக வனத்துறை சுட்டுக்கொலை செய்துள்ளது. கர்நாடக வனத்துறையினர் இந்த செயல் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    Advertisement

    நீதி விசாரணை வேண்டும் - மனோஜ் பாண்டியன்

    எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுகவின் இபிஎஸ், பாமகவின் சௌமியா, பாஜக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் அளித்தன. இதையடுத்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், "வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    இது குறித்து தெளிவான நீதி விசாரணை நடைபெற வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த கொலையை கண்டித்து, கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்றார். எடப்பாடி பழனிசாமி பேசும் போது, "கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறினார்.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி பேச்சு

    எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணலாயத்திற்கு அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் காணாமல் போன தங்கள் கால்நடைகளை தேடி போனதாகவும், அப்போது கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறினர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் சதி நடைபெற்றதாக ஹானூர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்ற இடம் இரண்டு மாநில எல்லைப்பகுதி. நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால் சிபிஐ விசாரிக்க வேண்டும். உயிரிழந்த குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு 5 லட்சம் அறிவித்துள்ளது. இது மிகவும் குறைவு. எனவே தமிழக அரசு போதிய உதவிகள் செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடராத வகையில் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    English Summary

    Three Tamils ​​were shot dead in the early hours of the 15th within the Cauvery Wildlife Sanctuary area near Hanur in Karnataka's Chamarajanagar district. A murder case has been registered against Forest Department personnel in connection with this incident. Amidst strong condemnation from political parties in Tamil Nadu, a calling-attention motion regarding the matter was moved in the Legislative Assembly today.