தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம்

  • சென்னை: தமிழகத்தில் முதல்வர் விஜய் பதவியேற்றதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று அதிரடியாக 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    இதுதொடர்பான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் சாய் குமார் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:* கல்லூரி கல்வி துறையின் கமிஷனர் சுந்தரவல்லி பொது மற்றும் மறுவாழ்வு துறையின் சிறப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    * தென்காசி கலெக்டர் கமல் கிசோர் நிதித்துறையின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் நிதித்துறை இணை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

    * கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் துணை செயலாளராக செயல்பட உள்ளார்.

    * தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய சிஇஓ பூஜா குல்கர்னி மதுவிலக்கு மற்றும் கலால் துறை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * கைத்தறி, கைவினை மற்றும் ஜவுளி துறையின் செயலாளர் அமுதவல்லி கிராம மேம்பாட்டு துறையின் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * கிராம மேம்பாட்டு துறையின் ஆணையர் பொன்மையா கல்லூரி கல்வித்துறையின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    * தமிழ்நாடு கிரீன் என்ர்ஜி கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் வினய், இந்து சமயஅறநிலையத்துறை ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.

    * தமிழ்நாடு நீர்ப்பிடிப்பு (Watershed) மேம்பாட்டு ஏஜென்சியின் துணை தலைவர்/ நிர்வாக இயக்குநர் கண்ணன், சர்க்கரை துறயைின் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

    * சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) சிஇஓ சந்திர சேகர் சகமுரி, விவசாய மார்க்கெட்டிங் மற்றும் விவசாய பிசினஸ் பிரிவின் இயக்குநராக செயல்படுவார்.

    * சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் செயலாளர் உமா, தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்களின் திட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

    Advertisement

    * தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா, டவுன்பஞ்சாய்த்து இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * நாகப்பட்டினம் கலெக்டர் ஆகாஷ் மதுரை கலெக்டராக செயல்பட உள்ளார்.

    * மதுரை கலெக்டர் பிரவீன் குமார் நாகப்பட்டினம் கலெக்டர் ஆக பொறுப்பேற்பார்.

    * தகவல் மற்றும் பொது தொடர்பு முன்னாள் இயக்குநர்/ அரசு கேபிள் டிவி கார்ப்ரேஷனின் நிர்வாக இயக்குநர் வைத்தியநாதன், தேனி கலெக்டராக செயல்பட உள்ளார்.

    * திருச்சி கலெக்டர் சரவணன், தர்மபுரி கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * திருவள்ளூர் கலெக்டர் பிரதபா், கன்னியாகுமரி கலெக்டராக செயல்பட உள்ளார்.

    * நிதித்துறையின் இணை செயலாளர் பிரதிக் தயாள் திருச்சி கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    * விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பிய வந்தனா கார்க், திருவண்ணாமலை கலெக்டராக பொறுப்பேற்க உள்ளார்.

    * விழுப்புரம் மாவட்டம்கிராம வளர்ச்சி ஏஜென்சியின்திட்ட அதிகாரியாகவும், கூடுதல் கலெ க்டராகவும் (மேம்பாடு) இருந்த பத்மஜா, கள்ளக்குறிச்சி கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திட்ட இயக்குநர் இணை நிர்வாக இயக்குநர் பிரியா, ராணிப்பேட்டை கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * திருச்சி மாநகராட்சி ஆணையராக இருநத மதுபாலன் நாமக்கல் கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    * தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநர் ஆந்த் மோகன், திருநெல்வேலி கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    * சென்னை ஆறு மறுபுனரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலாளராரும், சென்னை ஆறு மாற்றமைப்பு நிறுவன லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் லீலா அலெக்ஸ், வேலூர் கலெ க்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * உயர்கல்வித்துறையின் துணை செயலாளர் ரேவி, தஞ்சாவூர் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

    * கூட்டுறவு சங்கங்களின் கூடதல் பதிவாளர் வீரப்பன், செங்கல்பட்டு கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    * பொது மற்றும் மறுவாழ்வு துறையின் கூடுதல் செயலளர் பாலசுப்பிரமணியம், இந்திய மருத்தும் மற்றும் ஹோமியோபதிவ பிரிவின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * திருவண்ணாமலை கலெக்டர் தர்பகராஜ், கூட்டு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக செயல்படுவார்.

    * தர்மபுரி கலெக்டர் சதீஷ் அயலக தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலவாழ்வு பிரிவின்இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    English Summary

    Tamil Nadu IAS Trasfer: Since Chief Minister Vijay assumed office in Tamil Nadu, IAS and IPS officers have been undergoing a series of sweeping transfers. In line with this trend, 30 IAS officers across Tamil Nadu were abruptly transferred today.