34 ஆயிரம் வாட்ஸ் அப் குரூப்கள்.. திரைமறைவில் காய்நகர்த்தும் தவெக! என்ன செய்ய போகிறது திமுக, அதிமுக?

  • சென்னை: அரசியலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய இடத்தில் ஜென்சி இளைஞர்கள் உள்ள நிலையில், தற்போது பிரசார யுக்திகளும் மாறியுள்ளன. மெய்நிகர் பிரசாரங்கள் அதாவது, வலைத்தளங்களில் பிரசாரங்கள் செய்வதும், அதன் மூலம் வாக்காளர்களை கவருவதும் அதிகரித்துவிட்ட சூழலில், தவெகக்கு ஆதரவாக சுமார் 34 ஆயிரம் வாட்ஸ் அப் குழுக்கள் திரைமறைவில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பே இயங்கியதாக கூறப்படுகிறது.

    Advertisement

    விஜய்யின் தவெக கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து இந்திய அளவில் வியக்க வைத்தது. பாரம்பரிய அரசியல் கட்சிகள் செய்யும் பிரசார போக்கிற்கு மாற்றாக தனி ரூட்டை கையில் எடுத்த தவெக அதில் வெற்றியும் கண்டுள்ளது. அதாவது களத்தில் அரசியல் செய்வதை காட்டிலும் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்தி வெற்றியை தவெக தனதாக்கியது. தற்போதைய இடைத்தேர்தலிலும் அதே பார்முலாவையே தவெக பின்பற்ற தொடங்கியுள்ளதை பார்க்க முடிகிறது.

    Advertisement

    திரை மறைவில் 34 ஆயிரம் வாட்ஸ் அப் குழுக்கள்

    சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாடம் கற்றுக்கொண்ட திமுக, அதிமுகவும் தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் தவெகவின் வீச்சு என்பது பிற கட்சிகள் நினைப்பதை விட வலுவாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். தவெக ஆதரவு அக்கவுண்ட்கள், தனிப்பட்ட நபர்கள் தவெகவுக்கு வலைத்தளங்களில் களமாடுவது என்பதை தாண்டி 34 ஆயிரம் வாட்ஸ் அப் குரூப்கள் திரைமரைவில் இயங்குவதாக சொல்லப்படுகிறது.

    அதாவது, பொதுவான பெயர்களுடன் வாட்ஸ் அப் குரூப்கள், எக்ஸ் தளத்தில் கணக்குகளில் இயங்குவது.. உதாரணத்திற்கு நம்ம செங்கல்பட்டு, நம்ம தாராபுரம் என்ற பெயர்களில் ஒரு அக்கவுண்ட் இயங்குகிறது என எடுத்துக்கொள்வோம். அதில் போடும் பதிவுகள் அந்த ஊர் சார்ந்த பெருமைகளையும் ஊர் சார்ந்த செய்திகளும் துவக்கத்தில் இடம் பெறும். இதனால், அப்பகுதியில் உள்ளவர்களை இயல்பாகவே அந்த வாட்ஸ் அப் குரூப்களில் அதிக அளவில் இணைவார்கள்.

    Advertisement

    தவெகவின் யுக்தியை உடைக்க திமுக, அதிமுக வியூகம்

    அதன்பிறகு இந்த குழுக்களில் அரசியல் கருத்துகள், தவெகவிற்கு ஆதரவான பதிவுகள், பொதுத்தேர்தலுக்கு முன்பாக ஆளும் திமுகவிற்கு எதிரான பதிவுகள் என அதில் பதிவிடுவாரக்ளாம். தேர்தலுக்கு முன்பாக நவம்பர் 2025 க்கு பிறகு இப்படியாக ஏறத்தாழ 34 ஆயிரம் வாட்ஸ் அப் கம்யூனிட்டிஸ் ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். ஒரு வாட்ஸ் அப் கம்யூனிட்டிஸ்க்கு 500 பேர் என எடுத்துக்கொண்டால் கூட 1.7 கோடி பேரை ரீச் செய்ய முடியும்.

    ஏரியா வாரியாக கம்யூனிட்டிஸ்கள் உருவாக்கப்பட்டு பொதுவான பதிவுகள் இடப்பட்டு, பிறகு அது விஜய்க்கும் தவெகவுக்குமான புரோமஷன்களாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று சொல்கிறார்கள். பாஜக இதே யுக்தியை கடந்த காலங்களில் கையாண்டதாகவும் இதையே தவெகவும் பின்பற்றுவதாகவும் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. தவெகவின் இந்த யுக்தியை உடைக்க திமுக, அதிமுகவும் வியூகங்கள் வகுக்க தொடங்கியுள்ளன.

    Advertisement

    திமுக, அதிமுகவுக்கு கை கொடுக்குமா

    திமுகவை பொறுத்தவரை எப்போதுமே காலத்திற்கு ஏற்ப தன்னை எளிதாக தகவமைத்துக்கொள்ளும் என்பதே கடந்த கால வரலாறு.. எனவே, தற்போதைய டிஜிட்டல் யுகத்திலும் தவெகவிற்கு டஃப் கொடுக்கும் வகையில், தனது நகர்வை, அடித்தளத்தை வலைத்தளங்களில் வலுவாக்க ஆரம்பித்துவிட்டது. அதிமுகவும், தேர்தலுக்கு பிறகாக, சமூக வலைத்தளங்களில் தனது இருப்பை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    தவெக கையாண்ட இந்த யுக்தியை எதிர்க்கட்சிகளும் கையில் எடுக்கத் தொடங்கியிருப்பதால் அரசியல் களம் இன்னும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது என்பதே அரசியல் விமர்சர்கள் கருத்தாக உள்ளது. இது எந்த அளவுக்கு கை கொடுக்கப்போகிறது என்பது இடைத்தேர்தலில் ஓரளவு தெரிந்துவிடும் என்பதே அரசியல் பார்வையாளர்கள் கூறும் கருத்தாக உள்ளது.

    English Summary

    With Gen Z youth now in a position to determine political success or failure, campaign strategies have evolved. Amidst the rise of virtual campaigning—where online outreach is used to woo voters—it is reported that approximately 34,000 WhatsApp groups were operating behind the scenes in support of TVK even before the general assembly elections.