கணவனை 35 செ.மீ கத்தியால் வெட்டி.. குடலை பிளாஸ்டிக் பையில் போட்ட மனைவி.. சிக்கியது எப்படி

  • சென்னை: அப்பாவி கணவரை, அவரது மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து மிக கொடூரமான முறையில் திட்டம் போட்டு தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள்.. இந்த கொலையை செய்வதற்காக கள்ளக்காதல் ஜோடி எடுத்துகொண்ட முயற்சிகளும், கொலை செய்த கொடூரமும், காவல் துறையை மட்டுமல்லாமல் மருத்துவர்களையே மிரள வைத்துள்ளது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

    Advertisement

    உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ்.. இவர் தன்னுடைய மனைவி விமலா தேவியுடன் ஹரியானா மாநிலம் குருச்சேத்திரத்தில் கடந்த ஒரு வருடமாக வசித்து வருகிறார்.

    Advertisement

    தண்ணீர் விநியோகிப்பாளர்

    அங்குள்ள ஒரு நிறுவனத்தில் தண்ணீர் விநியோகப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார் ராஜேஷ். இந்நிலையில், விமலா தேவிக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த கள்ளக்காதல் விவகாரம் கணவர் ராஜேஷுக்கு தெரியவந்ததால், இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறும், சண்டையும் வெடித்து வந்துள்ளது.

    தினந்தோறும் கணவரின் அட்வைஸை கேட்க விரும்பாத மனைவி, அவரை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று முடிவு செய்தார்.. ராஜேஷ் உயிருடன் இருக்கும்வரை நாம் சந்தோஷமாக வாழ முடியாது என்று காதலனிடமும் சொல்லி, கொலை திட்டத்தை விவரித்தார் விமலா தேவி..

    Advertisement

    விமலா தேவி கள்ளக்காதல்

    கடந்த சனிக்கிழமை, ராஜேஷை கொலை செய்ய தேதி குறிக்கப்பட்டது.. அதன்படியே அன்று சாயங்காலம் ராஜேஷுக்கு அதிக அளவில் மது குடிக்க கொடுத்துள்ளனர்... சிறிது நேரத்தில் போதை தலைக்கேறிய நிலையில் ராஜேஷ் நினைவிழந்து விட்டார்.. அப்போது ஒரு பெரிய கத்தியை எடுத்து வந்து ராஜேஷை குத்தி கொன்று விட்டார் காதலன். அதாவது, ராஜேஷின் மார்பகத்திற்கு கீழிருந்து அந்தரங்கப் பகுதி வரை சுமார் 35 செ.மீ நீளத்திற்கு கத்தியால் வெட்டினாராம் காதலன்..

    மேலும் 2 சிறிய கத்திகளைப் பயன்படுத்தி உடலின் 2 பக்கமும் அம்புக்குறி போன்ற வடிவில் கூடுதல் வெட்டுக் காயங்களையும் ஏற்படுத்தியிருக்கிறார்..

    Advertisement

    காவல் காத்த மனைவி

    இந்த கொலை நடந்துகொண்டிருக்கும்போது சத்தம் வெளியே கேட்காமல் இருக்க, மனைவி விமலா தேவி வீட்டின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு காவலுக்கு நின்றுள்ளார்.. பிறகு கொலை செய்து முடித்ததுமே, வீட்டிற்குள் சென்ற விமலாதேவி, ராஜேஷின் உடலில் இருந்து வெளியே வந்த வயிற்று குடல்களை ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்து போட்டுள்ளார்..

    அந்த பிளாஸ்டிக் பையை கையில் வைத்து கொண்டு, ராஜேஷ் சடலம் பக்கத்திலேயே நின்று, அதை எப்படி மறைப்பது என்று காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.. இந்த நேரம் பார்த்து, வீட்டு உரிமையாளர் ரிங்கு மாடிக்கு வந்துள்ளார்.. அப்போதுதான், ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், விமலா தேவி அவரது குடல்களை பிளாஸ்டிக் பைக்குள் வைப்பதையும் நேரில் கண்டு அதிர்ந்து போயுள்ளார்.

    Advertisement

    பிளாஸ்டிக் பையில் குடல்

    ஹவுஸ் ஓனர் தன்னை பார்ப்பதை விமலா தேவியும் கவனித்து விட்டார்.. உடனே விமலா தேவி, பயத்தில் அங்கிருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு முதுகுத்தண்டில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதற்குள் ஹவுஸ் ஓனர் தகவல் தரவும், உடனடியாக போலீசார் விரைந்து வந்தனர்..

    படுகாயமடைந்த விமலா தேவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தப்பித்து ஓடிப்போன காதலனையும் 24 மணி நேரத்தில் சுற்றிவளைத்து பிடித்தனர்.. இதற்கிடையில் ராஜேஷின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணைகளில் மனைவியும் அவரது காதலனும் இணைந்து இந்த கொலையைச் செய்தது உறுதியானது.

    Advertisement

    போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்

    ராஜேஷின் சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த அதிர்ச்சி ரிப்போர்ட்டும் வெளியாகி உள்ளது.. அதில் ராஜேஷின் கல்லீரலின் பெரும்பகுதி மற்றும் அவரது வலது சிறுநீரகம் போன்றவை காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.. எனவே இந்த கொலையின் பின்னணியில் ஏதாவது மாந்திரீகச் சடங்குகள் அல்லது மூடநம்பிக்கைகள் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விமலா தேவி முழுமையாகக் குணமடைந்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே இந்தச் சம்பவத்தின் அத்தனை ரகசியங்களும் முழுமையாக வெளிவரும் என்று காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனினும் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு வன்மமா? இத்தனை கொடூரமாக ஒரு கொலையை செய்ய முடியுமா? என்று அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்...!!

    English Summary

    35 Cm Knife Used to Kill Husband, Wife Put His Intestines in a Plastic Bag, How Was She Caught? Unthinkable