ரீல்ஸ் வெறி முத்திப்போச்சு.. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிணங்கள் அறையில் இப்படியா?

  • சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை அறைக்குள்ளே நேற்று காலை சட்டவிரோதமாக நுழைந்து, அங்கிருந்த உடல்களைச் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காகப் புகைப்படம் எடுத்ததாக இரு மருத்துவமனை ஊழியர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போலீசார், சொந்த ஜாமினில் விடுவித்தனர்.

    Advertisement

    சென்​னை , எர்ணாவூரைச் சேர்ந்த 'பல்லு' ஆனந்த் என்ற ரவுடி அண்மையில் உயிரிழந்தார். . அவரது உடல் பிரேத பரிசோதனைக்​காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டது. இதையடுத்து அவரது நண்​பர்​களான வியாசர்​பாடியை சேர்ந்த சதீஷ்கு​மார் (25) மற்​றும் தவெகவைச் சேர்ந்த தீனா என்ற தினேஷ்கு​மார்(30) ஆகியோர் மருத்துவமனை வந்தார்கள். அவர்கள் ரவுடி​யின் சடலத்தை பார்ப்​ப​தற்​காக நேற்று அதி​காலை ஐந்து மணிக்ககு ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு சென்​றனர்.

    Advertisement

    அவர்​கள் இரு​வரும் மருத்​து​வ​மனை சவக்​கிடங்கு பகு​திக்கு வியாசர்​பாடியை சேர்ந்த சங்​கருடன் சென்​றுள்ளார்கள். அப்​போது, பிரேதப் பரிசோதனை கூடத்​தில் பணி​யில் இருந்த சீனி​வாசனிடம் ஜிபே மூலம் ரூ.200 கொடுத்து பிணவறை​யின் சாவியை பெற்​று பிணவறை உள்ளே சென்றுள்ளனர் 2 பேரும், அங்கு வைக்​கப்​பட்​டிருந்த சடலங்​களை செல்​போனில் ரீல்ஸ் வெளியிடும் நோக்கில் வீடியோ எடுத்​திருக்கிறார்கள்.

    இதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவ அதிகாரியான (RMO) வனிதா மலருக்குத் தகவல் தெரிவித்தனர். மருத்​து​வ​மனை நிர்​வாகம் தரப்​பில் ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைவளாக போலீ​ஸாரிடம் புகார் அளிக்​கப்​பட்​டது. புகாரின்​ பேரில் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு சென்று விசா​ரணை நடத்​தினர். அப்​போது பிணவறை​யில் வீடியோ எடுத்​த​தாக கூறப்​படும் சதீஷ்கு​மார், தினேஷ்கு​மார் சங்​கர் ஆகிய 3 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

    Advertisement

    கைது செய்​யப்​பட்ட 3 பேரை​யும் ஸ்டேஷனுக்கு அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர். அப்​போது, சமூக வலை​தளத்​தில் ரீல்ஸ் போடு​வதற்​காக பிணவறைக்​குள் சென்று அங்​கிருந்த சடலங்​களை வீடியோ எடுத்​த​தாக அவர்​கள் கூறியிருக்கிறார்கள். இதையடுத்​து, சவக்​கிடங்​குக்​குள் அத்​து​மீறி நுழைந்​தது உள்​ளிட்ட 3 பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டது. கைது செய்​யப்​பட்ட 3 பேரை​யும் இரவோடு இரவாக போலீ​ஸார் ஜார்ஜ் டவுன் நீதி​மன்ற நீதிபதி வீட்​டில் ஆஜர்​படுத்​தினர். அவர்​கள் 3 பேரை​யும் நீதிபதி ஜாமீனில் விடு​வித்​தார்.

    பிணவறை​யின் சாவியை வெளி​யாட்​களுக்கு வழங்​கிய​தாக கூறப்​படும் சவக்​கிடங்கு பணி​யாளர் சீனி​வாசன் மீது துறை ரீதி​யான நடவடிக்கை எடுக்க பரிந்​துரை செய்​யப்​பட்​டிருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் சதீஷ்குமார் (25), தீனா என்ற தினேஷ்குமார் (30), மருத்துவமனையின் பேட்டரி வாகன ஓட்டுநரான சங்கர் மற்றும் பிரேதப் பரிசோதனை அறையின் தூய்மைப் பணியாளரான சீனிவாசன் என அடையளம் காணப்பட்டுள்ளனர்.

    English Summary

    Chennai Stanley Government Hospital Post-mortem Room reel case : Individuals arrested for filming Reels inside the post-mortem room at Chennai Stanley Government HospitalChennai Stanley Government Hospital Post-mortem Room reel case : Individuals arrested for filming Reels inside the post-mortem room at Chennai Stanley Government Hospital