அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்

  • சென்னை: அதிமுக மற்றும் திமுகவில் இருக்கும் நிர்வாகிகள் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ஒரே நாளில் அதிமுகவின் 4 முன்னாள் அமைச்சர்கள், 5 முன்னாள் எம்எல்ஏக்கள், திமுகவின் 2 முன்னாள் எம்எல்ஏக்கள், அமமுகவின் ஒரு முன்னாள் எம்எல்ஏ உள்பட மொத்தம் 60 பேர் தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களின் பெயர் விவரம் வருமாறு:

    Advertisement

    அதிமுகவில் இருந்து முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் சேர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ஒரே நாளில் அதிமுகவின் 4 முன்னாள் அமைச்சர்கள், 5 அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் 60 பேர் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர். இதில் திமுகவின் 2 முன்னாள் எம்எல்ஏக்கள், ஒரு அமமுக எம்எல்ஏவும் அடங்குவர்.

    Advertisement

    சென்னையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து அவர்கள் தவெகவில் சேர்ந்தனர். இன்றைய தினம் தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள் யார் யார்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    1.உடுமலை ராதாகிருஷ்ணன் - முன்னாள் அமைச்சர் - உடுமலைபேட்டை தொகுதி

    2 .எம்சி சம்பத் - முன்னாள் அமைச்சர் - கடலூர் தொகுதி

    3.கடம்பூர் ராஜு - முன்னாள் அமைச்சர் - கோவில்பட்டி தொகுதி

    4.என்ஆர் சிவபதி- முன்னாள் அமைச்சர் - முசிறி தொகுதி

    5.வி பன்னீர் செல்வம் - அதிமுக கலசப்பாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ

    Advertisement

    6.ஆர்கே ரவிச்சந்திரன் - அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்

    7.மு.முருகன்- ராமநாதபுரம் அமமுக முன்னாள் எம்எல்ஏ

    8.என் சிவா - அதிமுக மாணவரணி செயலாளர்
    9.காமராஜ் - திமுக - முன்னாள் தராமங்கலம் எம்எல்ஏ
    10. எம்எஸ் சண்முகம் - திமுக - போரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ

    11.கேசி ஆனிமுத்து - அதிமுக - எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர்
    12.சதன் பிரபாகர் - அதிமுக - மாநில அம்மா பேரவை இணை செயலாளர்
    13. பொன்மணி பாஸ்கள் - அதிமுக - மாவட்ட சேர்மன்
    14. ஜவஹர்லால் நேரு - அதிமுக - மாநில அம்மா பேரவை துணை செயலாளர்
    15.விணுபாலன் - அதிமுக - மாநில எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர்

    Advertisement

    16. யோவிவிக்னேஷ்வரன் - அதிமுக - ஐடி விங்க் இணை செயலாளர்
    17.சதீஷ் - அதிமுக சென்னை மண்டல ஐடி விங்க் இணை செயலாளர்
    18.ராதா வேங்கடநாதன் - அதிமுக சென்னை மண்டல ஐடி விங்க் இணை செயலாளர்
    19. ராமச்சந்திரன் - அதிமுக சென்னை மண்டல ஐடி விங்க் இணை செயலாளர்
    20. முத்துக்குமார் அதிமுக -மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர்

    21. செந்தில் - அதிமுக - நகர செயலாளர்
    22.ராஜா முகமது - அதிமுக - முன்னாள் உறையூர் பகுதி கழக செயலாளர்
    23. அழகரசன் விஜய் - அதிமுக முன்னாள் மாநகர மாவட்ட கலைப்பிரிவு செயலாளர்
    24. டாக்டர் சேட்டு - அதிமுக கவுன்சிலர்
    25. கவிஞர் கேஆர் கோவிந்தன் - அதிமுக - ஒன்றிய அம்மா பேரவை லைவர்
    26. தினேஷ் நல்லத்தம்பி - அதிமுக - சேலம் மாநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர்
    27. அன்பழகன் அதிமுக - ராஜாக்கமங்கலம் மாஜி ஊராட்சி மன்ற தலைவர்
    28. நல்லம்பூர் சங்கர் - முன்னாள் ஒன்றிய கழக செயலாளர்
    29.அனை க.பி.முரளிதரன் - அதிமுக - செங்கல்பட்டு மாவட்டம் இளைஞர் அணி இணை செயலாளர்
    30. எல்கே விக்னேஷ்வரன் - அதிமுக - இளைஞர் பாசறை நகர் மன்ற தலைவர்
    31.எஸ்எம் சுரேஷ் குமார் - அதிமுக - தேனி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு
    32. என்பி நடராஜ் - அதிமுக - ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றி செயலாளர்
    33.ஜெயபாலன் - அதிமுக - நெல்லை மாவட்ட கழக பொருளாளர்
    34.செந்தில்குமார் - அதிமுக - மதுரை புறநகர் மமேற்கு மாவட்ட எம்ஜிஆர் அமைப்பு
    35. புகழேந்தி - கர்நாடகா மாநில செயலாளர்
    36. ராஜாராமன் - அதிமுக நகர கழக பொருளாளர்
    37. ராஜன் - அதிமுக - திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர்
    38.கந்தவேல் - அதிமுக - கோவை புறநகர் கிழக்கு மாவட்டம்
    39. முகமது அலி - அதிமுக - ம வெள்ளிச்நச்தனை ஊராட்சி சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர்

    Advertisement

    40.அழகேசன் - அதிமுக கன்னியாகுமரி பேரூராட்சி கழக செயலாளர்

    41.கணபதி - மாவட்ட எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர்

    42. வரதராஜன்- திவண்ணாமலை கிழக்கு மாவட்டம் முன்னாள் துணை பெருந்தலைவர்

    43. ஹேமேந்திரன் - அதிமுக - திருவள்ளூர் பகுதி கழக செயலாளர் ஆவடி வடக்கு
    44மங்காராமன் - அதிமுக - அகில உலக எம்ஜிஆர் மன்றம் மாவட்ட தலைவர் வடசென்னை
    45.ரவி -அதிமுக - முன்னாள் அரக்கோணம் தனி தொகுதி எம்எம்எல்
    46.சுனில் குமார் - அதிமுக - மாவட்ட செயலாள் கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி
    47.பட்டாபிராம் செட்ராஜா - அதிமுக - ஆவடி மேற்கு பகுதி கழக துணை செயலாளர்
    48.ஆனந்தன் - அதிமுக - கோடம்பாக்கம் எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணை தலைவர்
    49. ராஜா - அதிமுக - கோடம்பாக்கம் எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைதலைவர்
    50. துரை முருகன் - அதிமுக முன்னாள் பல்லடம் எம்எல்ஏ
    51. தாஸ் - அதிமுக - மாநில அம்மா பேரவை துணை செயலாளர்
    52.நாராயணன் - அதிமுக வட்ட செயலாளர் மற்றம் இளைஞர் அணி
    53. வாசு - சிங்கம்புணரி நகர் கழக செயலாளர்
    54. கருப்பையா - அதிமுக - எஸ்புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர்
    55. மதிவாணன் - முன்னாள் மாவட்ட கவுன்சிலர், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர்
    56. கோபாலகிருஷ்ணன் - அதிமுக - திருப்பதூர் நகர அம்மா பேரவை செயலாளர்
    57. சசிகுமார் - அதிமுக - முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் - சிங்கம்புணரி ஒன்றியம்
    58.மாது என்ற இளங்குமார் - அதிமுக சிங்கம்புணரி ஒன்றியம் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்
    59. கணேசன் - அதிமுக எஸ் புதூர் மேற்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர்
    60. ராதா - அதிமுக - எஸ் புதூர் மேற்கு ஒன்றிய இணை செயலாளர் என மொத்தம் 60 பேர் இன்று தவெகவில் இணைந்துள்ளனர். இது அதிமுக, திமுக கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    Office-bearers from the AIADMK and DMK are joining Chief Minister Vijay's Tamizhaga Vettri Kazhagam (TVK). In a single day today, a total of 60 individuals-including four former AIADMK ministers, three former AIADMK MLAs, two former DMK MLAs, and one former AMMK MLA-have joined the TVK. Their details are as follows: