தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! சென்னை – ராமநாதபுரத்திற்கு புது அதிகாரிகள் நியமனம்

  • சென்னை: தமிழகத்தில் இன்று அதிரடியாக 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரிகள், ராமநாதபுரம் எஸ்பி ஆகியோர் மாற்றப்பட்டு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

    Advertisement

    * எஸ்பி அந்தஸ்தில் சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் காலிப்பணியிட ஒதுக்கீட்டில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஹரி கிரண் பிரசாத் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * ராமநாதபுரம் எஸ்பியாக பணியாற்றி வரும் சந்தேஷ், சென்னை தெற்கு போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * சென்னை தெற்கு போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக இருந்த முத்துகுமார், சென்னைஆவடி போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

    * சென்னை ஆவடி போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் ஈஸ்வரன், தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Topics: #tamil nadu

    English Summary

    In Tamil Nadu, four IPS officers have been transferred in a sudden reshuffle today. The officers affected include those serving in the traffic division in Chennai, as well as the Superintendent of Police (SP) of Ramanathapuram; all have been assigned new responsibilities.