சென்னை: சென்னையில் பாலியல் தொழில் தொடர்பான வழக்குகளில் தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க போலீசார் மீண்டும் களமிறங்கியிருக்கிறார்கள்.. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு கிடப்பில் இருந்த வழக்குகளையும் தூசி தட்டி விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. அப்படி போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கிய பெண் ஏஜென்ட் உமா பற்றிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. என்ன நடந்தது? யார் இந்த பெண் உமா?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், முறையான அனுமதி இல்லாமல், லைசென்ஸ்களை புதுப்பிக்காமல், ஸ்பா என்ற பெயரில், மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன.. இங்கெல்லாம் விபச்சாரங்கள் நடப்பதும் பெருகியபடி உள்ளன..
இதில் பல அப்பாவி பெண்கள் சிக்குகிறார்கள்.. காரணம், கிராமப்புறங்களிலிருந்து ஏராளமான இளம்பெண்கள், வேலை தேடி நகர்ப்புறத்துக்கு வரநேரிடுகிறது.. அதேபோல, சினிமா, டிவி சீரியல்களில் வாய்ப்பு தருவதாக சொன்னதை நம்பி ஏமாந்த பெண்களும், குடும்ப சூழ்நிலை, வறுமை போன்ற நெருக்கடிகளுக்கு ஆளாகும் பெண்களும், இதுபோன்ற உரிமம் பெறாத மசாஜ் சென்டர்களில் வந்து பாலியல் தொழிலில் சிக்கிவிடுகிறார்கள். இதில் பல வெளிமாநில பெண்களும் அடக்கம். அதனால்தான் தமிழ்நாடு முழுவதும் போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பது உறுதியானால், அவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் கைது செய்து வருகிறார்கள். கடந்த வாரம்கூட, 2 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருந்தது. இப்போதும் தேவி என்ற பெண் கைதாகி உள்ளார்.. சென்னையில் பாலியல் புரோக்கர்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்து இளம் பெண்களை சப்ளை செய்து வந்தவர்தான் இந்த உமா என்ற தேவி (45). புழல் அண்ணா நினைவு நகர் 3வது தெருவை சேர்ந்த இவர், கடந்த 2 வருடங்களாகவே போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். சென்னையில் பாலியல் தொழில் தொடர்பான வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மற்றும் கிடப்பில் போடப்பட்ட வழக்குகள் மீது மீண்டும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து விபச்சார தடுப்பு பிரிவில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட்டு, அதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் தேவி குறித்தும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்காக விபசார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தேவி, தொடர்ந்து பாலியல் புரோக்கர்களுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமல்ல, ஒப்பந்த அடிப்படையில் பல இளம் பெண்களை, புரோக்கர்களுக்கு அனுப்பி வைப்பாராம் இந்த தேவி.. இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்.. இதில், முகப்பேர் மேற்கு விரிவாக்கம் கலெக்டர் நகர் நாம் நகரில் உள்ள ஒரு லாட்ஜில் உமா தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அந்த லாட்ஜில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு தங்கியிருந்த உமா என்ற தேவியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.. பிறகு உமாவை சைதாப்பேட்டை 4வது எம்.எம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதனிடையே, அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் உள்ள எண்களை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் சென்னையை சேர்ந்த பாலியல் புரோக்கர்கள் மற்றும் பிற மாநில ஏஜென்ட்களின் தொடர்பு எண்கள் இருப்பதால், அவர்களுக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது...!!மசாஜ் சென்டர்கள்
தேவி - விபச்சாரம்
மீண்டும் தொடர்ந்த தொழில்
அதிரடி கைது