சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 46 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை காவல் ஆணையரகத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்திய சிறிது நேரத்தில், டிஜிபி மகேஷ்குமார் இந்த அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
காவல்துறையில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது உயர் பதவியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் சப் இன்ஸ்பெக்டர் ரேங்கில் உள்ளவர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று தமிழகம் முழுவதும் 46 காவல் உதவி ஆணையர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
* தாம்பரம் ஆணையகரத்தில் நலப்பிரிவு உதவி கமிஷனராக ஹரிசங்கரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். * ஆவடி காவல் ஆணையரக குற்ற ஆவணக் காப்பகத்தில் உதவி ஆணையராக பணியாற்றிய முத்துராஜா, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். * எஸ்.பி.சி.ஐ.டி. டிஎஸ்பியாக பணியாற்றிய சரஸ்வதி, சென்னை பெருநகர காவல் ஆணையரக உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் * அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றிய தமிழ்வாணன், பொன்னேரி காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளா. * ஆவடி போலீஸ் ஆணையகரத்தில், பொன்னேரி உதவி கமிஷனராக தமிழ்வாணன் பொறுப்பேற்பார். * சென்னை உயர் நீதிமன்ற உதவி ஆணையராக பாலாஜி பதவியேற்பார். * தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சப்-டிவிஷன் டிஎஸ்பியாக பணியாற்றிய ஜெகநாதன், காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் மகேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.
* ஆவடி ஆணையகரத்தில் உளவுப்பிரிவு உதவி கமிஷனராக பணியாற்றி வந்த மணிவண்ணன், காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* காத்திருப்போர் பட்டியலில் இருந்த முகமது நாசர், சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் தேர்தல் பிரிவு டி.எஸ்.பி. பொறுப்பை கவனிப்பார்.
* சென்னை தாம்பரம் ஆணையகரத்தில் மக்கள் தொடர்பு உதவி ஆணையராக மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* ஆவடி போலீஸ் ஆணையகரத்தில் நலப்பிரிவு உதவி ஆணையராக சஞ்சீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
* பாளையங்கோட்டை உதவி ஆணையராக பணியமர்த்தப்பட்ட சரோஜா, திருநெல்வேலி மத்திய குற்றப்பிரிவு டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.