குரோம்பேட்டை ஏஜன்சியில் 49 பேர்.. நேபாளத்தில் ஹெலிகாப்டர் வாடகைக்கு கூட கிடைக்காதது ஏன்?

  • சென்னை: தமிழ்நாட்டில் இருந்து நேபாளம் சென்றவர்களை பற்றி அறிய தனியார் டிராவல் ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளர் நேரிலேயே சென்றுள்ளார். ஆனாலும் ஹெலிகாப்டர் அவர்களுக்கு வாடகைக்கு கிடைக்கவில்லை. அவர்களால் பேரிடர் நடந்த இடத்தில் கூட போக முடியவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை விரிவாக பார்ப்போம்.

    Advertisement

    சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மகாதேவ் கைலாஷ் யாத்திரா நிறுவனர் சத்தியநாராயணாவின் தந்தை மாறவேல் நாகப்பன் செய்தியாளரிடம் பேசியதாவது, "என் மகன் சத்தியநாராயணா தலைமையில் 49,பேர் கைலாய யாத்திரை சென்று திரும்போது நேப்பாள்-திபெத் பார்டரில் உள்ள சீனா இமிகிரேசன் அலுவலகத்தில் தான் இருந்தனர்‌ மேலும் அங்கு வெளியான சிசிடிவியில் குரோம்பேட்டையில் இருந்து சென்றவர்களின் குழு உடை தெரிகிறது, மேலும் அவர்கள் கொண்டு சென்ற பெட்டிகள் கிடைப்பதை காணமுந்தது,

    Advertisement

    அங்கு நடைபெற்றது பெரிய அளவிலான வெள்ளம் ஏற்பட்டு 50 முதல்-80 அடி உயரத்திற்கு வேகமாக 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கிராமங்களை அடித்து சென்றுள்ளது,

    நேபாளம் நாட்டினர் மீட்பு பணியில் அவர்கள் மட்டும் ஈடுபட்டுள்ளனர், தங்கள் சார்பிலும் குடும்பத்தினர் சார்பிலும் நேரில் சென்று காத்மாண்டுவில் இருந்து சம்பவம் நடைபெற்ற 120 கி.மீ தூரம் செல்ல முடியால் 80 கி.மீ வரை சென்று பார்த்தேன். அங்கு நேபாளம் அரசு மருத்துவமனைகளில் மீட்கப்பட்ட உடல்கள், புகைப்படங்களில் 49 பேரின் தகவல்கள் இல்லை என்றார்,

    மேலும் சாலைகள் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டதால் இங்கு இருந்து சென்றவர்களை ஹெலிகாப்டர் வாடகை எடுத்து தேட முடிவு செய்தோம் ஆனால் ஹெலிகாப்டர் கிடைக்கவில்லை அதனால் மீண்டும் சொந்த ஊர் திரும்பி விட்டோம் என்றார்.

    Advertisement

    இந்த பாதிப்பு குறித்து சீன பகுதியில் நடைபெற்ற மீட்பு பணி என்ன.. அதில் நமது யாத்திரை குழுவினர் மீட்கப்பட்டுள்ள்னரா? அவர்கள் அளிக்கும் அதிகார பூர்வ தகவலை எதிர்ப்பார்க்கிறேன்" என்றார்.

    ட்ராவல் ஏஜென்சி உரிமையாளர் கூறியது போல் அங்கு நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. எனவேதான் அவர்களால் அந்த இடத்திற்கு போக முடியவில்லை. ஹெலிகாப்டர் வாடகைக்கு கிடைக்காததற்கு காரணங்களும் உள்ளன. பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு பகுதிகள் என்பதால் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கோ அல்லது தேடுதல் பணிகளை மேற்கொள்வதற்கோ பாதுகாப்பு இல்லாத சூழல் நிவவுவதாக கூறப்படுகிறது. இதுதான் சிக்கலுக்கு காரணம்.

    Advertisement

    அதேபோல் நேபாளத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்ட பகுதியில் தனியார் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக நேபாள நாட்டு மீட்புக் குழுவினர் மட்டுமே மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.‌ எனவே அங்கு மீட்பு பணி நடைபெறும் பகுதிகளில் சாமானிய மக்களால் செல்ல முடியாது.

    தற்போதைய நிலையில் இரண்டே வழிகள் தான் உள்ளன ஒன்று.. தீபக் நேபாள எல்லையில் காணாமல் போனவர்கள் சீனா இமிகிரேஷன் அலுவலகப் பகுதியில் சிசிடிவி காட்சிப் பதிவில் காணப்பட்டதால், சீனா தரப்பில் நடத்தப்படும் மீட்புப் பணிகள் மற்றும் அவர்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வத் தகவல்களை மட்டுமே முதன்மையாக நம்பியிருக்க முடியும்.

    Advertisement

    இந்திய வெளியுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு அரசு மூலமாக நேபாளம் மற்றும் சீன தூதரக தொடர்புகளைச் சீரமைத்து, காணாமல் போன 49 தமிழர்களின் நிலையை அறியத் தூதரக ரீதியிலான அழுத்தங்களை தர முடியும்.

    இறுதியாக இந்திய தூதரகம் மூலம் அதிகாரப்பூர்வ ஹெலிகாப்டர் தேடுதல் மற்றும் நிவாரணப் பணிகளுக்கு நேபாள மற்றும் சீன நாடுகளிடம் அனுமதி கோருவது மட்டுமே தற்போதுள்ள ஒரே நம்பிக்கையான வழியாக பார்க்கப்படுகிறது. அடுத்த ஓரிரு நாட்களில் என்ன பதில் என்பது தெரிய வரும்.‌

    English Summary

    Status of 49 Chromepet pilgrims remains unknown. Agency owner's father emotionally stated they await China's rescue updates, but couldn't reach the site directly or secure a helicopter. 49 Chromepet Pilgrims Missing in Nepal: Why Renting a Helicopter to Find Them Proved Impossible