சென்னையில் களமிறங்கும் 7 அமைச்சர்கள்.. வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளர்களாக நியமனம்!

  • சென்னை: சென்னையில் மண்டல வாரியாக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பேரிடர் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 15 மண்டலங்களுக்கு 7 அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    அமைச்சர்கள் அருண்ராஜ், லோகேஷ் தமிழ்செல்வன், ரமேஷ், விஜய் பாலாஜி, பிரபு, விஜய் தமிழன் பார்த்திபன், விக்னேஷ் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா 15 மண்டல பணிகளையும் ஒருங்கிணைப்பார்.

    Advertisement

    தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் உத்தரவின்படி, வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மாவட்ட பணிகளோடு கூடுதலாக அமைச்சர்கள் சிலர் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலாளர் சாய்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார்.

    மண்டல வாரியான பொறுப்பு அமைச்சர்கள்

    மண்டலம்-1 (திருவொற்றியூர்) மற்றும் மண்டலம்-2 (மணலி) - அமைச்சர் ரமேஷ் (இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை)

    மண்டலம்-3 (மாதவரம்) மற்றும் மண்டலம்-4 (தண்டையார்பேட்டை) - அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன் (வணிகவரி மற்றும் பதிவுத்துறை)

    மண்டலம்-5 (இராயபுரம்) மற்றும் மண்டலம்-6 (திரு.வி.க. நகர்) - அமைச்சர் டாக்டர் K.G. அருண் ராஜ் (மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை)

    Advertisement

    மண்டலம்-7 (அம்பத்தூர்), மண்டலம்-8 (அண்ணாநகர்) மற்றும் மண்டலம்-9 (தேனாம்பேட்டை) - அமைச்சர் ம. விஜய் பாலாஜி (கைத்தறி, துணி நூல் மற்றும் காகிதத் துறை)

    மண்டலம்-10 (கோடம்பாக்கம்) மற்றும் மண்டலம்-11 (வளசரவாக்கம்) - அமைச்சர் டாக்டர் TK. பிரபு (இயற்கை வளங்கள் துறை)

    மண்டலம்-12 (ஆலந்தூர்) மற்றும் மண்டலம்-13 (அடையாறு) - அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் (போக்குவரத்துத்துறை)

    மண்டலம்-14 (பெருங்குடி) மற்றும் மண்டலம்-15 (சோழிங்கநல்லூர்) - அமைச்சர் க. விக்னேஷ் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை)

    பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சென்னை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் உள்ள பணிகளை ஒருங்கிணைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Ministers in charge have been appointed to expedite development works and carry out disaster relief operations across the zones of Chennai. 7 ministers have been assigned responsibility for the 15 zones.