நொறுங்குதா விஜய்யின் பிளஸ் பாயிண்ட்கள்? 2 மாற்றம் கவனிச்சீங்களா? அரசுக்கு விழுமா 8% சம்மட்டி அடி?

  • சென்னை: வரப்போகும் இடைத்தேர்தலில் பெரிய அளவில் பணத்தைச் செலவழிக்க திமுக-வோ அல்லது அதிமுக-வோ தயாராக இல்லை. எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளை இறக்காமல் தொண்டர்களை மட்டுமே நம்பியுள்ளார்.. ஸ்டாலினோ அல்லது உதயநிதி ஸ்டாலினோ பிரச்சார களத்திற்கு இன்னும் வரவில்லை.,. விஜய் களமிறங்கிய பிறகே மற்ற தலைவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அரசியல் விமர்சகரும், வழக்கறிஞருமான கோடீஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    Marshal Media சேனலுக்கு பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், "தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.. வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டு இறுதிப் பட்டியல் தயாராகி வரும் சூழலில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு எதிராக மக்களின் கேள்விகளும் எதிர்ப்புகளும் தீவிரமடைந்துள்ளன. "பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் எதற்காக தேர்தலில் நிற்கிறீர்கள்?" என்று வாக்காளர்களே நேரடியாகக் கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    தவெக மீது அதிருப்தி

    கடந்த தேர்தலை போல இல்லாமல், இப்போது தவெக அரசு மீது பல்வேறு தளங்களில் அதிருப்தி அலை வீசத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மதுராந்தகம் பகுதியில் மணல் குவாரி சிக்கல்கள், மோசமான சாலை கட்டமைப்பு மற்றும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் முடங்கியுள்ள சூழல் ஆகியவை அப்பகுதி விவசாயிகளையும் மக்களையும் கொந்தளிப்படையச் செய்துள்ளது.

    அதேபோல, விஜய் ஒரு தொகுதிக்கு 2 நாட்கள் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். வழக்கமாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, அங்கே கூட்டத்தை வரச்சொல்லி, பேசிவிட்டு செல்வது விஐபி கலாச்சார பாணி.. இந்த பாணியையும் இப்போது விஜய் கைவிட்டுள்ளார்.. 2 தொகுதிக்குள் இறங்கி இறங்கிப் பிரச்சாரம் செய்வதை பார்த்தால், அவருக்குள் தேர்தல் குறித்த பயம் காரணமாக இருக்கலாம். எப்படி பார்த்தாலும் கடுமையான நெருக்கடியை தவெக உணர்கிறது.

    Advertisement

    தாராபுரம் - அதிருப்திகள்

    கிராமப்புறங்களில் பிரச்சாரத்திற்கு வரும் தவெக வேட்பாளர்களைப் பார்த்து அதிமுக தொண்டர்கள் "துரோகி" என உரக்கக் கோஷமிட்டு வருகிறார்கள்.. தாராபுரத்தில் அதிமுக மகளிர் அணியினர் பிரச்சார வாகனத்தின் முன்பாக சங்கு ஊதி வினோதமான முறையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அதேபோல ஆளுங்கட்சியாக இருக்கும் தவெக, எதிர்க்கட்சிகள் மீது வழக்குகளைப் பாய்ப்பதும் பதற்றமடைவதும் அவர்களின் பலவீனத்தையே உணர்த்துகிறது.

    பொதுவாகவே கருத்துக்கணிப்புகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே வெளிவரும். கடந்த தேர்தலிலும் திமுக வெற்றிபெறும் என்றே கணிப்புகள் கூறின, ஆனால் தவெக வென்றது. அரசுக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகள் 8 சதவீதம் வரை உயர்ந்தால், அது தவெக-வின் வெற்றி வாய்ப்பை அடியோடு சரித்துவிடும்.

    Advertisement

    விஜய்யின் ஒரே பிளஸ் பாயிண்ட்

    அதேசமயம், மின்சார பற்றாக்குறை, மின்வெட்டு, கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படாதது, காவிரி தண்ணீர் வராதது போன்ற காரணங்களால் விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர். இருந்தாலும், தேர்தலில் நிலவும் 5 முனை போட்டியும், விஜய்யின் தனிப்பட்ட கரீஷ்மாவும் ரசிகர்களை ஈர்க்கும் பிரச்சார முறைகளுமே தவெகவுக்கு இருக்கும் ஒரே பிளஸ் பாயிண்ட்.

    இந்த இடைத்தேர்தலில் பெரிய அளவில் பணத்தைச் செலவழிக்க திமுக-வோ அல்லது அதிமுக-வோ தயாராக இல்லை. எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளை இறக்காமல் தொண்டர்களை மட்டுமே நம்பியுள்ளார். ஸ்டாலினோ அல்லது உதயநிதி ஸ்டாலினோ பிரச்சார களத்திற்கு இன்னும் வரவில்லை. விஜய் களமிறங்கிய பிறகே மற்ற தலைவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    பெருச்சாளிகள் ரேஷன் கடைகளில்

    ஒருவேளை இந்த இடைத்தேர்தலில் தவெக தோல்வியடைந்தால், அது அரசுக்கு ஒரு பயத்தை உருவாக்கும். அதன் விளைவாக, வாக்குறுதி அளித்த ₹2500 உதவித்தொகை உடனடியாகக் கிடைக்கவும், மின்சாரப் பற்றாக்குறை சரிசெய்யப்படவும் வாய்ப்புகள் உருவாகும். வெறும் இன்ஸ்டாகிராம் வைப் மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சி நடத்த முடியாது, மக்களுக்குச் செயல்பட்டுக் காட்ட வேண்டும் என்ற கட்டாயம் தவெக அரசுக்கு ஏற்படும்.

    தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடி செலவு செய்யத் திட்டமிடுவது தேவையற்ற ஆடம்பரம் என விமர்சிக்கப்படுகிறது. கலைஞர் கட்டிய பழைய தலைமைச் செயலகத்தையே மீண்டும் பயன்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறிய கருத்து இங்கு கவனிக்கத்தக்கது.

    Advertisement

    பெருச்சாளிகளும் எலிகளும் ஓடும் சுகாதாரமற்ற வாடகை இடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளின் உட்கட்டமைப்பைச் சீரமைக்காமல், அரசு கடனில் இருக்கும்போது ₹1,200 கோடியில் ஆடம்பரச் செயலகம் கட்டுவது மக்கள் பணத்தை வீணடிக்கும் செயல் என சாடப்படுகிறது" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

    English Summary

    8% Anti-Government Vote.. Will It Hurt Vijay’s TVK? 2 Changes You Need to Watch