திருமணத்தின் போது பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டு புடவை! அண்ணன் சீர் திட்டம்' 812 கோடி ஒதுக்கீடு

  • சென்னை: திருமணத்தின் போது பெண்களுக்கு 8 கிராம் தங்கம் நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். 812 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடில், அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் திருமணத்தின் போது பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நிதி அமைச்சர் மரிய வில்சன் தனது பட்ஜெட்டில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் அண்ணனாகவும், தம்பியாகவும் இருந்துஅவர்களுக்கு எப்பொதும் துணை நிற்பவர்கள்தான் நமது முதல்வர். திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும்.

    Advertisement

    இந்த தருணத்தை கொண்டாடும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் ஒவ்வொருவரையும் தனது குடும்பத்தில் ஒருவராக கருதும் நமது முதல்வர் விஜய், பெண்களின் திருமண நாளில் நமது அரசின் சார்பாக 8 கிராம் தங்க நாணயமும் ஒரு பட்டுப்புடவையும் அண்ணன் சீராக வழங்க உள்ளார். இந்த திட்டத்திற்கு செயல்படுத்த திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் 812 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    திட்டத்தின் தகுதி, விண்ணப்பிக்கும் முறை மற்றும் செயல்படுத்தும் தேதி உள்ளிட்ட அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் வெளியாகும் போது மேலும் தகவல்கள் பகிரப்படும் என தெரிகிறது.

    English Summary

    8 gram gold and silk saree For married women: Women will be provided with 8 grams of gold at the time of their wedding. Finance Minister Maria Wilson announced that, under the 'Annan Seer' scheme, women would receive 8 grams of gold and a silk saree at their weddings.